establishments-code establishments-code - examsguide.lk


தாபன விதிக்கோவை



1) நியமிக்கும் அதிகாரம் என்பதை வரையறுக்குக?

அரசாங்க சேவைக்கு உத்தியோகத்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் கீழ் அமைச்சரவைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை நியமனங்கள் செய்வதற்கான அமைச்சரவையினால் அதிகாரம் வழங்கப்பட்ட தனித்தனி அமைச்சர்கள் அல்லது திணைக்களத்தலைவர்கள் அல்லது நியமனங்கள் செய்வதற்காகத் தனித்தனி அமைச்சரால் அதிகாரம் வழங்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் ஆகியோரைக் குறிக்கும்


2) உங்கள் பதவிக்கு நியமிக்கும் அதிகாரத்திற்கு பொறுப்பானவர் யார்? பொது நிர்வாக அமைச்சு

3)

4) ஆட்சேர்ப்புத் திட்டம் என்றால் என்ன? குறித்த தேவைக்காக அமைச்சரவையினால் அல்லது ஸ்தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும்.

அரசாங்க சேவையின் பதவி ஒவ்வொன்றிற்கும் அத்தகைய பதவியொன்று ஏதேனும் தரத்திற்கு அல்லது சேவைக்கு உரித்தானதாக இருக்குமாயின் அவ்வொவ்வொரு தரத்திற்கும் அல்லது சேவைக்கும் பதவிக்கான சம்பள அளவுத்திட்டம் தேவையான தகைமைகள் வயதெல்லைகள் அத்துடன் உரிய பிற விபரங்கள் திட்டவட்டமாக உள்ளடக்கப்பட்டு சம்பந்தப்பட்ட திணைக்களத்தினால் வரையப்படும் திட்டம் ஆட்சேர்ப்புத் திட்டம் ஆகும் 


5) ஆட்சேர்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 10 விடயங்கள் எவை? 

பதவியின் பொதுவான வரையறை (சேவையின் தன்மை)

கல்வித்தராதரம் மற்றும் ஏனைய தகைமைகள்

வயது

விண்ணப்பம் கோரப்படும் முறை 

உள்ளீர்ப்பு செய்யப்படும் முறை

வினைத்திறன் காண் தடை தாண்டல் காலம்

தரம் 3 இலிருந்து தரம் 2 இற்கு பதவி உயர்வு பெறுவதற்கான சேவைக்காலம் 

செயற்பாடு ஒதுக்கீட்டு விபரம்

பதவி உயர்வு முறைகள் நேர்முகப்பரிட்சை

சம்பளத்திட்டம்


6) ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கும் போது கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் 3 தருக?


7) அரச சேவையில் புதிதாக நியமனம் பெறும் அதிகாரி அவருடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய 5 வகையான ஆவணங்கள் எவை? 

1. நியமனக் கடிதத்தின் பிரதி

2. பிறப்புச் சான்றிதழ் மூலப்பிரதி

3. கடமையை பொறுப்பேற்ற கடிதம் 

4. வைத்திய பரிசோதனை அறிக்கை படிவம் - பொது (169)

5. உடன்படிக்கை பத்திர படிவம் - பொது (160)

6. சொத்து பிரகடனம் செய்தல் படிவம் - பொது (261)

7. சத்தியப்பிரமாணப் படிவம் - பொது (278)

8. விதவை அநாதைகள் ஓய்வூதியத்திட்டத்திற்கும் தபுதாரர் அநாதைகள் ஓய்வூதிய திட்டத்திற்கும் இணைந்து கொண்டதற்கான படிவம் - ஆண் (பெர்து 86) பெண் (பொது 86யு)

9. விவாகமானவராயின் திருமணச்சான்றிதழ் மூலப்பிரதி

10. நியமனத்திற்கு கோரப்பட்ட கல்வித்தகைமையின் சான்றிதழின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்


8) ஓர் நியமனத்தின் தகுதிகாண் காலம் என்றால் என்ன? அரச சேவையில் நிரந்தரமான பதவியொன்றிற்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் அப்பதவிக்கு பொருத்தமானவர் என்பதற்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்படும் கால அவகாசம் தகுதி காண் காலமாகும்.


9) ஓர் அரச அதிகாரி அரச சேவையில் இருந்து தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக விடுவிக்கப்படும் சந்தர்ப்பங்கள் 5 தருக? 

மாகாண அரசாங்க சேவைக் குழுவுக்கு

ஜனாதிபதி செயலகத்திலுள்ள பதவியொன்றிற்கு

இலங்கையின் பாராளுமன்றத்தின் பதவியணியினரின் பதவியொன்றுக்கு

சுயேச்சை சேவையொன்றிற்கு

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றில் உள்ள பதவியொன்றிற்கு

அரசாங்க கூட்டுத்தாபனம் ஒன்றில் உள்ள பதவியொன்றிற்கு

அரசாங்க வேலைத்திட்டம் ஒன்றில் உள்ள பதவியொன்றிற்கு


10) மீள் வேலைக்கு நியமிப்பதற்கு தகுதியற்ற ஓய்வு பெற 5 காரணங்கள்?

பதவி நீக்கத்திற்கு பதிலாக கட்டாயமாக இளைப்பாறப்பட்டவர்கள்

பொதுத்திறமையின்மைக்காக இளைப்பாறப்பட்டவர்கள்

சேவை நீடிப்பு வழங்குவதற்கு மறுக்கப்பட்டதன் விளைவாக இளைப்பாறப்பட்டவர்கள்

ஒழுக்காற்றுக் காரணங்களின் மீது இளைப்பாற்றப்பட்டவர்கள்

அரசாங்க கொள்கை தீர்மானமொன்றின் பேரில் இளைப்பாறுவதற்கான சம்மதத்துடன் இளைப்பாறியவர்கள்

ஓய்வூதிய பிரமாணக்குறிப்பின் 12 ஆம் பிரிவின் கீழ் ஓய்வு பெற்றவர்கள் 

ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முடிவுறாதிருப்பவர்


11) அரச உத்தியோகத்தர் ஒருவரின் கட்டாய ஓய்வு வயதெல்லை யாது? 60


12) அரச உத்தியோகத்தர் ஒருவர் எந்த வயதில் விருப்ப ஓய்வு பெறலாம்? 55 அல்லது 57


13) சம்பள ஏற்றம் இடைநிறுத்துகை என்றால் என்ன? வருடாந்த சம்பள ஏற்றத் திகதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய சம்பள ஏற்றத்தை குறிப்பிட்ட திகதியில் வழங்காது குறிப்பிட்ட சில காலங்களுக்கு நிறுத்தி வைத்து மீண்டும் வழங்குதல் சம்பள ஏற்றம் இடைநிறுத்துகை ஆகும்.


14) மேலதிக நேர கொடுப்பனவை பெறுவதற்கு தகைமை அற்றவர்கள் 2 பேர் யார்?

பதவி நிலை உத்தியோகத்தர்

வெளிக்கள உத்தியோகத்தர்


15) நாட்டிற்குள் விடுமுறை எடுப்பதற்கு அரச உத்தியோகத்தர்களால் பிரயோகிக்கப்படும் விண்ணப்படிவம் எது? பொது 125 (அ)


16) அரச அலுவலர்களால் காலங்கடந்த விடுமுறையினை பெற்றுக் கொள்ளக் கூடிய அதி கூடிய நாட்கள் எத்தனை? 48 நாட்கள்


17) அரச சார்பற்ற நிறுவனங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அல்லது வெளிநாட்டு முகவர் நிறுவனம் ஒன்றில் அரச உத்தியோகத்தர் தொழில் புரிய விடுமுறை எடுக்க கூடிய அதி கூடிய நாட்கள் எத்தனை? அதிக பட்சம் 5 வருடங்கள் சம்பளமற்ற விடுமுறை வழங்கலாம்


18) வினைத்திறன் தடைதாண்டல் பரிட்சைக்கு முதன் முறையாக தோற்றும் அரச உத்தியோகத்தர் பெறக் கூடிய கடமை விடுமுறை எத்தனை?


19) இணைந்த படி என்றால் என்ன? கடமை பிரயாணத்தின் போது ஏற்படும் நாளாந்த செலவுகளை ஈடு செய்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு இணைந்த படி எனப்படும்.


20) எந்த 3 நோய்களுக்கு அரச ஊழியர்களுக்கு விசேட முறை முழுச்சம்பளத்துடன் வழங்கப்படும்?

அம்மை சின்னம்மை

கொலரா

மஞ்சள் காமாலை


21) உத்தியோகத்தர் ஒருவர் கடனிற்கு விண்ணப்பிக்கும் போது அவ் அலுவலரின் மேலதிக படிகள் தவிர்ந்த சம்பளத்தின் எத்தனை வீதம் அறவீடு செய்வதற்கு சிபார்சு செய்யப்படும்? 40 வீதம்


22) நியமன கடிதத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய விடயங்கள் யாவை? 

நியமனத்தின் பதவிப் பெயர்

நியமனத் தரம்  வகுப்பு

சம்பள அளவுத்திட்டம்

விதவை அநாதைகள் திட்டத்திற்கு பணம் செலுத்துதல்

பொதுச்சேவை சகாய நிதியத்திற்கு பணம் செலுத்துதல்

ஓய்வுதியத்தை பெறுவதற்கான தகைமைகள்

குடியரசின் ஒழுங்கு விதிகள்

பிணைப்பணம்

தீவின் எப்பகுதியிலும் சேவையாற்ற வேண்டும்

உடற் தகுதி மருத்துவ பரிட்சை

அரச மொழிக் கொள்கை

தகுதி காண் காலம்

உடன்படிக்கை


23) அரச சேவையில் நியமிப்புக்கள் யாவும் யாரால் மேற்கொள்ளப்படல் வேண்டும்? அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டவாறு அல்லது பொது நிர்வாக அமைச்சரினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டவாறு ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கும் பதவியுயர்வு திட்டத்திற்கும் அமைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.


24) காலங்கடந்த விடுமுறை என்பது யாது?

உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட ஓய்வு லீவை குறிப்பிட்ட ஆண்டில் பயன்படுத்தாது சேமித்து வைத்து அதனை எதிர்காலத்தில் பயன்படுத்துவது காலங்கடந்த விடுமுறை ஆகும்.


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post