Losses_ EB Losses_ EB - examsguide.lk


 

நட்டங்கள்



அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள ஒரு நட்டம் FR 102

விட்டு விடுதல் FR 109,113

 

ஓர் அலுவலரது தாமதம் கவனமின்மை  தவறு களவினால் அரசாங்கத்திற்கு விளைவிக்கும் நட்டத்திற்கு அவரே பொறுப்பாளியாவார். அத்தயைக நட்டத்தை அவர் ஈடு செய்தல் வேண்டும். 

ஓர் அலுவலர் எந்த ஒரு செயலையும் பின்வருமாறு செய்ய அனுமதித்தால் அவரே அதற்கு பொறுப்பாளியாவார்.

1.முறையான அதிகாரமின்றி

2.நிதி ஒழுங்கு விதிகள் பிற ஒழுங்கு விதிகள்  பொருத்தமான அறிவுறுத்தல்களுக்கு இணங்காமல்

3.போதுமானளவு கவனம் செலுத்தாமல்

4.களவாக

FR101, 156

1.பணம், முத்திரைகள், பண்டங்கள், உயிர்கள், பயிர்கள், தாவரங்கள், பயணச்சீட்டுக்கள் போன்றவை உட்பட அரச உடமைகளிற்கு ஏற்படும் இழப்பு.

2.அரசாங்கத்தின் உடமையாக இல்லாத போதும் அரசின் பாதுகாப்பிலுள்ள பணப் பெறுமதியுடைய உடமைகளின் நட்டம் அல்லது சேதம்.

3.அரசாங்க உடமைகளுக்கு ஏற்படும் சேதம்.

4.அரச அலுவலர்களது கவனமின்மை, அசட்டை, தாமதம் அல்லது தவறினால் ஏற்பட்ட சேதங்களுக்காக செலவழிக்கப்பட்ட செலவு.

5.மேலதிக, ஒழுங்கற்ற அல்லது தவறான கொடுப்பனவும், தவறான நபர்களுக்கான கொடுப்பனவும்.

6.உபயோகிக்கப்பட்ட, உபயோகிக்கப்படாத அடியிதழ்சேர் புத்தகங்களது இழப்புகள் 

FR102

நட்டங்களினுள் உள்ளடங்காதவை

1.அரசாங்க வர்த்தக முற்பணக்கணக்கு முயற்சிகளினால் ஏற்படும் நட்டங்கள்

2.அரசாங்கச் சொத்துகளின் மதிப்பிறக்கமும் பெறுமானத் தேய்வுகளும்

3.குளக்கட்டுக்கள் அல்லது கல்வெட்டுகள், பாலங்கள், வீதிகள், புகையிரதத் தண்டவாளங்கள், கட்டடங்கள் என்பவற்றிற்கு இயற்கை அனர்த்தங்களால்; ஏற்பட்ட அழிவு.

4.அறவிட முடியாத அரசிறை நிலுவைகள், பிற வருவாய்கள், பட்டியல்களின் குறைவான சேகரிப்புகள், அறவிடமுடியாக் கடன்கள் போன்றவை.

 

குறிப்பு

காய்தல், சுருங்குதல், சீர்கெடுதல் போன்ற காரணங்களால் ஏற்படும் நட்டங்கள். இப்பிரிவின் கீழ் நட்டங்களில் அடங்குவதாகவே கருதப்படும்.

FR102

நட்டங்கள் ஏற்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

1.தேவையானவிடத்து உரிய அதிகாரிகளுக்கு நட்டம் அறிவித்தல் (FR104)

2. களவு, மோசடி, விபத்து போன்றவை தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்தல்

3. விசாரணைகள் செய்யப்பட்டு பொறுப்பு யாருடையதென முடிவு செய்தல் (FR104)

4. சம்மந்தப்பட்ட புத்தகங்கள், பதிவேடுகள் போன்றவற்றின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தல்

5. நட்டப் பதிவேட்டில் பதிவு செய்தல் (FR110) 

6. பொறுப்பான அலுவலர்களிடமிருந்து அறவிடவேண்டிய தொகைகள் தீர்மானிக்கப்பட்டு அவற்றை அறவிட நடவடிக்கை எடுத்தல் (FR105)

7. அதேவிதமான நட்டங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்தல்

8. தேவையானவிடத்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் (FR105(4))

9. காப்புறுதி, உத்தரவாதம் இருப்பின் அறவிட நடவடிக்கை எடுத்தல்

10. பொருத்தமான போது ஒழுங்கு விதிகளுக்கமைய கணக்கு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குறைநிரப்பு ஏற்பாடுகள் தேவைப்படலாம். FR(106,107)

11. பதிவழித்தல் கட்டளை பெற்று பதிவழிப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்; (109(1))

12. முழுத்தொகையும் பொறுப்பான அலுவலர்களிடமிருந்து அறவிடப்பட முடியாவிடின் விட்டு விடுவதற்கான நடவடிக்கை எடுத்தல்

FR103

 

அரசாங்கத்திற்குச் சொந்தமில்லாத பொருட்கள் இழக்கப்படுதல்

 

அரசாங்கத்திற்குச் சொந்தமில்லாத பொருட்கள், உடமைகள் இழக்கப்படும் போது அவற்றிற்குப் பதிவிடல், கணக்கு முறைமைகள் பற்றி அறிவுறுத்தல்களை திறைசேரியிடம் (பொதுநிதித் திணைக்களம்) பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

FR103

விசாரணையும் பொறுப்பினைத் தீர்மானித்தலும்.

நட்டத்தின் தன்மையையும், அதற்கான காரணங்களையும், அதற்குப் பொறுப்பானவர்களையும் அறிவதற்காக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்.

நட்டம் அல்லது சேதத்தின் பெறுமதி 500000 அல்லது அதற்கு மேல் என மதிப்பிடப்படின் பி.க.அலுவலரால் விசாரணைச் சபை நியமிக்கப்பட வேண்டும். 

 

FR104

இழப்புக்களைஅறிவித்தல்.

கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கும், பி.க.அலுவலருக்கும் இழப்புகள் அறிவிக்கப்பட வேண்டும். 

அறவிட வேண்டிய பெறுமதி 500000 அல்லது அதற்கு மேல் இருப்பின் திறைசேரி பொது நிதித் திணைக்களத்திற்கும் பிரதி அனுப்பப்பட வேண்டும்.

 

FR104

அறிவிக்கத் தேவையற்ற நட்டங்கள்

பின்வரும் இழப்புகள் களவு, கவனமின்மை அல்லது பிற தவறு ஏதும் சம்மந்தப்படாததாயின் அறிவிக்க வேண்டியதில்லை.

பதிவழித்தல் தேவையற்றதும் 500 இற்கு மேற்படாததுமான செலவாகு பொருட்களின் இழப்பு.

•500ஃஸ்ரீ இற்கு மேற்படாததும் முற்றாக அறவிடப்பட்டதுமான நட்டங்கள். 

 

இது பண உறுதிச்சீட்டுகள் வேதனப்பட்டியல், பயணச் செலவுக் கோரிக்கைகள் என்பவற்றில் ஏற்பட்ட மேலதிகக் கொடுப்பனவு அல்லது பிழையான கொடுப்பனவு என்பவற்றை உள்ளடக்கும். 

இந்த நட்டங்களை முழுமையாகவும், உடனடியாகவும் அறவிடத் தவறினால் நட்டத்திற்கு அல்லது அறவிடப்படாமைக்கு அல்லது இரண்டுக்கும் பொறுப்பான அலுவலரிடமிருந்து அப்பணம் அறவிடப்படலாம்.

 

கீழ்க்காணும் எல்லைகளுக்கு உட்பட்டதும், முழுமையாக மீள் நிரப்பப்பட்டதுமான காசு, பயணச்சீட்டுக்கள், முத்திரைகள் போன்றவற்றில் ஏற்படும் குறைவுகள்.

நாள்தோறும் முற்றாகச் சரிபார்க்கப்படும் இடங்களில்250 இற்கு மேற்படாத குறைவு

ஏனைய இடங்களில் 25 விற்கு மேற்படாத குறைவுகள்.

மேற்கூறப்பட்ட விதி விலக்குகள் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக மட்டுமே தவிர, தேவையானவிடத்து ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்

FR104

தொடக்க அறிக்கை.

முழு அறிக்கை அனுப்புவதற்கு ஏழு நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுமிடத்து தொடக்க அறிக்கை உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.

இயலுமானவரை ஆரம்ப அறிக்கையானது

நட்டத்தின் தன்மையும் அளவும் (தொகைஃபெறுமதிஃஇரண்டும்) 

சம்மந்தப்பட்டஅலுவலரின் பெயரும், பதவியும்

விசாரணையின் போக்கு

 

போன்ற முக்கியமான விபரங்களைக் குறிப்பிட வேண்டும். 

தொடர்புடைய புத்தகங்கள் ஏடுகள் போன்றவற்றின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

 

FR104

முழு அறிக்கை

விசாரணை முடிவில், நட்டம் ஏற்பட்ட அல்லது அது கண்டு பிடிக்கப்பட்ட திகதியிலிருந்து 03 மாதங்களுக்குள் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும். 

தேவைக்கேற்ப அவ்வறிக்கை பின்வருவனவற்றை கொண்டிருக்க வேண்டும்.

1.இழக்கப்பட்டஉடமையின் மொத்த மூல விலை அல்லது பணம், முத்திரைகள் போன்றவற்றின் பெறுமதி.

2.இழக்கப்பட்ட போது உடமையின் அண்ணளவான அல்லது மதிக்கப்பட்ட பெறுமதி.

3.குறித்த பொருளை பதிலிடுவதற்கான அல்லது பழுது பார்ப்பதற்கான செலவு

4.பொருத்தமாயின் எண்ணிக்கையும், ஒவ்வொன்றின் பெறுமதியும்

5.நட்டம் ஏற்பட்டமைக்கான காரணம்.

6.நட்டத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோபொறுப்பாக இருந்த அலுவலர்களது பெயர்கள், பதவிகள்

7.களவு, கவனமின்மை, தாமதம், தவிர்ப்பு, வேறு குற்றம் ஏதாவது இதில் சம்மந்தப்பட்டுள்ளதா என்ற விபரம்.

8.நட்டத்தினை அறவிடுவதற்கான விதப்புரையும், ஏதாவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதா என்ற விபரமும்

9.இது தொடர்பான நீதிமன்ற வழக்கு உள்ளதா? அதன் தீர்ப்புஎன்ன? என்பது தொடர்பானவிபரம்.

10.நட்டம் காப்புறுதியின் அல்லது உத்தரவாதத்தின் கீழ் வருகிறதா? அப்படியானால் அறவிடக் கூடிய தொகை

11.இவ்வாறான நட்டங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அல்லது உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கை

 

FR104

நட்டத்தை அறவிடக்கூடிய உச்சப் பெறுமதி

காசு, காசோலை, வங்கிக்கட்டளை போன்றவற்றின் விடயத்தில் ஏற்பட்ட உண்மையான நட்டம்.

முத்திரை, சீட்டுக்கள் போன்றவை

 

அவற்றின் முகப்பெறுமதி (முகப்பெறுமதி இல்லாவிடில் அவற்றை வழங்குவதால் பெறக்கூடிய ஆகக்கூடிய பெறுமானம்).

ஏனைய அரச உடமைகளுக்கான நட்டம் புதுப்பொருளால் பதிலிடுவதற்கான செலவு. சுங்கத்தீர்வை நடைமுறையிலுள்ள ஏனைய வரிகளுடன் பதிலிடுவதற்கான செலவின் 25% திணைக்களச் செலவு.

அரச உடமைகளுக்குச் சேதம் 

பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான திருத்தச் செலவும் இடைநேர்செலவுகளும் 

திருத்த முடியாத சேதமெனில் பொருளின் மதிக்கப்பட்ட பெறுமதி அல்லது புதிய பொருளால் பதிலிடுவதற்கான பெறுமதி என்பவற்றில் கூடிய தொகையுடன் திணக்களத்தால் மதிப்பிடப்பட்ட இடைநேர் செலவுகளும்.

 

மிருகங்கள், பறவைகள், மீன்கள், தாவரங்கள் 

மதிப்பிடப்பட்ட பெறுமதியுடன் சுங்கத்தீர்வை வரிகள், மற்றும் மதிப்பிட்ட பெறுமதியின் 25% திணைக்களச் செலவு.

அடியிதழ் சேர் புத்தகங்களின் இழப்பு

 

இழக்கப்பட்ட தாள்கள் மூலம் பெறப்பட்டிருக்கக் கூடிய உச்சப் பெறுமதி. தவறாகப் பயன் படுத்தப் படவில்லை, நிதி இழப்பு ஏற்படவில்லை என திணைக்களத் தலைவர் திருப்திப் பட்டால் அறவிடத் தேவையில்லை(FR 343)

FR105

 

 

பணம், சீட்டுகள், முத்திரைகள் என்பவற்றின் நட்டங்கள்

குறைவு, கையாடல் அல்லது வேறு காரணங்களால் காசு, சீட்டுகள், முத்திரைகள் போன்றவை இழக்கப்படும் போது அந்த நட்டம் உடனடியாக ஈடு செய்யப்பட வேண்டும். 

பொறுப்பான அலுவலரிடமிருந்து உடன் அறவீடு செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் திறைசேரியிடமிருந்து (அரசகணக்குத் திணைக்களம்) முற்பணத்தைப் பெற்று அம்முற்பணக் கணக்கில் பற்று வைப்பதன் மூலம் நட்டம் சீர்செய்யப்படும்.

நட்டம் பின்னர் அறவிடப்படும் போது திறைசேரியின் முற்பண கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.  FR105

 

நட்டங்களைக் கையாளும் அதிகாரிகள்

அமைச்சின் செயலாளரான பிரதான கணக்கீட்டு அலுவலர்

திறைசேரியால் விதிக்கப்பட்ட சதவீதங்களுக்குட்பட்ட சாதாரண சுருங்கல், தேய்தல், வற்றல் முதலியன.

கடல் அல்லது ஆகாய சம்மந்தமான இழப்புகள் -5,000,000

வியாபாரிகள், கப்பற்காரர், கப்பல் முகாமையாளர், பொருள் இறக்கும் கம்பனிகள் என்பவற்றின் ஒப்பந்தத் தவறுகையால் எழுந்த நட்டம். -5,000,000

ஏனைய நட்டங்கள் -2,000,000 மோசடி அல்லது குறித்த முறையில் குறைபாடு இல்லாதவிடத்து-5,000,000

 

அமைச்சின் செயலாளரல்லாத பிரதான கணக்கீட்டு அலுவலர்

1,000,000 இற்கு மேற்படாத நட்டங்கள் 

 

கணக்கீட்டு அலுவலர்.

அறிவிக்க வேண்டியவையல்லாத நட்டங்கள் 

250,000 இற்கு மேற்படாத பிற நட்டங்கள்

 

குறித்த எல்லைக்கு மேற்பட்டவை திறைசேரியின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்

இது அலுவலர்கள் மீது மேலதிகக் கட்டணம் அறவிடவும், பிணைப்பணம், காப்புறுதி முதலியவற்றிலிருந்து அறவிடும் அதிகாரமளிக்கவும், பதிவழிக்கும் இறுதிக்கட்டளை அளிக்கவும், விட்டு விடுதல் கட்டளை அளிக்கவும் தேவையான அதிகாரத்தை உள்ளடக்குவதாகும்.

FR105

 

ஆரம்ப அறிக்கை–பொது 283

இறுதி அறிக்கை–பொது 284

பதிவழித்தல் கட்டளை பெறுவதற்கு-பொது 285

 

பதிவழித்தற்கான கட்டளை

அறவிடுவதற்காக நிர்ணயிக்கப்படும் தொகையைக் கழித்து மிகுதியை நீக்கி விடுவதற்கும், குறித்த நட்டம் அரசாங்கத்தால் ஏற்கப்பட்டதெனவும், பொருட் பதிவேடுகள், கையிருப்புப் பதிவேடுகளில் காணப்படும் குறித்த பதிவுகள் நீக்கப்படலாம் எனவும் அதிகாரம் அளிக்கும் கட்டளை

பதிவழிப்பதற்கான கட்டளையின் பிரதி கணக்காய்வாளர் அதிபதிக்கு அனுப்பப்பட வேண்டும்.

பொருட் பதிவேடுகள் போன்றவற்றிலிருந்து ஒரு பதிவை அழிக்கும் போது பதிவழித்தற்குரிய கட்டளை குறிப்பிடப்படல் வேண்டும்.

FR109

 

விட்டு விடுதல்களுக்கான கட்டளை

தொகையை அறவிடுவதற்காக எல்லாவிதமான வழிவகைகளும் கையாளப்படல் வேண்டும். முழுமையாகவோ, பகுதியாகவோஅறவிட முடியாத சந்தர்ப்பத்தில் குறித்த நட்டத்தை கையாளுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர் விட்டு விடுதலுக்கான கட்டளையைப் பிறப்பிக்கலாம்.

 

நட்டங்களின் பதிவுகள்

பின்வரும் விபரங்களைக் கொண்ட பதிவேடு; உபயோகிக்கப்பட வேண்டும்.

1.நட்டம் ஏற்பட்ட திகதி

2.நட்டத்தின் விபரம்

3.மூலவிலை(கிடைக்குமாயின்) 

4.இழக்கப்பட்ட நேரத்தில் பெறுமதி

5.பதிலிடுவதற்கான அல்லது திருத்துவதற்கான செலவு

6.அறவிடத்தக்க ஆகக்கூடிய உச்சப்பெறுமதி

7.அறவிடுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகை

8.திணைக்களப்பத்திரங்களின் தொடர்பு

9.இறுதி அறவீடு செய்த திகதி

10.பதிவழித்தற்கான அதிகாரம்

11.பதிவழித்த திகதி. 

 

FR110

 

 

 

 

விட்டு விடுதல்கள்.

அரசாங்கத்திற்கு வருமதியான ஒரு தொகையை கைவிடுதல் அல்லது பதிவுகளிலிருந்து அழித்தலே விட்டுவிடுதல் ஆகும்.

நட்டங்களிலிருந்து வருவனவல்லாத விட்டு விடுதல்கள் பின்வருமாறு இரு வகைகளில் அடங்கும்.

நியதிச்சட்ட முறையான விட்டு விடுதல்கள்

பிற விட்டு விடுதல்கள்.

 

FR113

 

நியதிச்சட்ட முறையான விட்டு விடுதல்கள்

நியதிச் சட்டங்கள் அரசாங்கத்திற்குரிய சில அரசிறை இனங்களைஃபிற வருமதிகளை விட்டு விடுவதற்கு அதிகாரம் அளிக்கும் போது அதிகாரம் பெற்ற அலுவலர்கள் அரசாங்க வருமதிகளை விட்டு விடுவதற்கு தீர்மானிக்கலாம்

எனினும், திறைசேரியானது தனக்குத் தேவையான தகவல்களை கோரிப் பெற உரிமையுடையது.

அத்துடன் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை குறை நிரப்பவதற்காக அத்தகைய விட்டு விடுதல்கள் தொடர்பான பொதுப் பணிப்புரைகளை வழங்கலாம்.

 

FR113

 

பிற விட்டு விடுதல்கள்

நியதிச்சட்ட முறையால் அரசிறையைச் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஒரு கோரிக்கையை விட்டு விட ஏற்பாடு இல்லாவிடில், அதனை விட்டு விடுதல் அவசியமெனக் காணப்பட்டால், திறைசேரிச் செயலாளரின் அதிகாரம் பொதுநிதித் திணைக்கள பணிப்பாளருக்கூடாகக் கோரப்படல் வேண்டும். 

பொருத்தமான சந்தர்ப்பத்தில் திறைசேரிச் செயலாளர் இந்த அதிகாரத்தை க.அலுவலருக்கும், பி.க.அலுவலருக்கும் விதிக்கப்பட்ட எல்லைக்குள் கையளிக்கலாம்.

 

விட்டு விடுதலுக்கு அதிகாரம் பெற்றுள்ள அலுவலர்கள் (தி.செ, பி.க.அ, க.அ) அத்தகைய அதிகாரத்தை வழங்கும் கடிதத்தின் பிரதிகளை கணக்காய்வாளர் அதிபதிக்கு அனுப்புதல் வேண்டும். 

க.அஃபி.க. அலுவலரால் அதிகாரம் வழங்கப்படுமிடத்து, பிரதி பொது நிதித் திணைக்களப் பணிப்பாளர் அதிபதிக்கும் அனுப்பப்படல் வேண்டும்.

பல விட்டு விடுதல்கள் ஏற்படும் போது (உள்நாட்டு இறைவரி திணைக்களம் போன்றவற்றில்) அவற்றின் நிரல் ஒன்றை காலாண்டுக்கொரு முறை அனுப்பி வைக்கலாம். ஆனால் பொதுநிதிப் பணிப்பாளர் அதிபதி அங்கீகரித்தல் வேண்டும்.

 

அரச ஊழியர் முற்பணக் கணக்கில் ( பீகணக்கு) அறவிட முடியாக் கடனை விட்டு விடுதலுக்கும் இதேமுறை பின்பற்றப்படவேண்டும்

•25,000 ரூபாவுக்குமேற்படாதவிட்டுவிடுதல் அதிகாரம் பி.க.அலுவலருக்கு கையளிக்கப் பட்டுள்ளது

FR113

 

 













Download Pdf

நட்டங்கள்


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post