Petti-cash, Bank Reconciliation, Bank Account, Cheque, Over draft Petti-cash, Bank Reconciliation, Bank Account, Cheque, Over draft - examsguide.lk

சில்லறைக்காசேடு

  அலுவலகம் ஒன்றிலே ஏற்படும் சிறிய பெறுமானமுடைய காசுக் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்யும் மூல ஏடு

சில்லறைக் காசேடு என அழைக்கப்படும்.

  இவ்வாறான செலவுகளைச் செய்வதற்கென பிரதான காசாளரினால் சில்லறைக் காசாளர் நியமிக்கப்படுவார்.

  அவரிடம் சிறு செலவுகளை மேற்கொள்ளவென

குறிப்பிட்டதொரு சிறுதொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கும்.

அதனை கணக்கியலில் சில்லறைக்காசு வசக்கட்டு என

அழைப்பர்

சில்லறைக் காசாளர் தான் மேற்கொள்ளும்

கொடுப்பனவுகளை சில்லறைக் காசேட்டில் பதிவு செய்து

கொள்வார்.

  மாதமுடிவில் அம்மாதத்தில் தான் செலவுசெய்த தொகையினை பிரதான காசாளரிடமிருந்து பெற்று

சில்லறைக்காசு வசக்கட்டில் மீள் நிரப்பிக்கொள்வார்



  அரச உத்தியோகத்தர் ஒருவரினால் தனது பொறுப்பிலிருக்கும் பணம் தொடர்பாக செய்யக்கூடாத நடவடிக்கைகள் 5 கூறுக?

  சில்லறைக்காசு கொடுப்பனவு என்பது யாது?


வங்கிக் கணக்கும் வங்கிக்கணக்கிணக்கக் கூற்றும்

  கொடுக்கல்வாங்கல்களை இலகுவாகவும் பாதுகாப்புடனும்

மேற்கொள்வதற்காக வங்கியில் நடைமுறைக் கணக்கொன்றினை

ஆரம்பிப்பர்.

  இக் கணக்கினையே வங்கிக்கணக்கு என அழைக்கப்படும்.

  நடைமுறைக் கணக்கு வைத்திருப்பவர்கள் காசோலை மூலம்

கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்


வங்கிக் கணக்கு

 வங்கிக் கணக்கினூடாக மேற்கொள்ளும் கொடுக்கல்

வாங்கல்களை நாம் காசேட்டில் பதிவுசெய்வோம்.

  நடைமுறை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு

மாதமும் வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்

விபரங்கள் அடங்கிய பொழிப்பு ஒன்று அனுப்பப்படும்.

அதனை வங்கிக்கூற்று என அழைக்கப்படும்.


வங்கிக் கணக்கிணக்கக்கூற்று

  மாத முடிவின்போது எம்மால் தயாரிக்கப்பட்ட

காசேட்டின்படியான வங்கி இறுதி மீதியும்இ வங்கியினால்

அனுப்பப்பட்ட வங்கிக்கூற்றின் இறுதி மீதியும் அதிகமான

சந்தர்ப்பங்களில் சமனாக காணப்பட மாட்டாது.

  இவ்வேறுபாட்டிற்கான காரணங்களை கண்டுபிடித்து இவ் இரு மீதிகளையும் இணங்க வைப்பதற்காக தயாரிக்கப்படும்

கூற்றே வங்கிக் கணக்கிணக்கக் கூற்றாகும்.


வங்கிக்கணக்கிணக்கக்கூற்று தயாரிக்கும்போது திருத்திய

காசேட்டு மீதியுடன் மாற்றப்படாத காசோலைக்குரிய தொகை

கூட்டப்பட்டு வசூலிக்கப்படாத காசோலைக்குரிய தொகை

கழிக்கப்பட்டு வங்கிக்கூற்றின்படி வங்கிமீதிக்கு இணக்கம்

செய்யப்படும்.


காசேட்டு வங்கி மீதியும் வங்கிக்கூற்று வங்கி

மீதியும் வேறுபடுவதற்கான காரணங்கள்


  மாற்றப்படாத காசோலை

  வசூலிக்கப்படாத காசோலை

  வங்கி அறவீடுகள்

  நேரடி வைப்பு

  நிலையான கட்டளைக் கொடுப்பனவு

  வங்கியினால் விடப்படும் தவறுகள்

  காசேட்டில் விடப்படும் தவறுகள்


காசோலை ஒன்றில் காணப்படும்

விடயங்கள்

  திகதி இடப்பட்டிருத்தல் வேண்டும்

  காசோலை யாருக்கு வரையப்படுகின்றதோ அவருடைய

பெயர் சரியாக இருத்தல் வேண்டும்.

  தொகை எண்ணிலும் எழுத்திலும் சரியாக இருத்தல்

வேண்டும்.

  கையொப்பம் காணப்படல் வேண்டும். (அலுவலகங்களில்

காசோலைக் கொடுப்பனவு மோசடிகளை தவிர்ப்பதற்கு

இருவர் கையொப்பமிடுவர்)


  காசோலையின் பாதுகாப்பு கருதி குறுக்குக்கோடு

இடப்பட்டிருக்கும்.

  காசோலை இலக்கம்இ வங்கி இலக்கம்இ வங்கிக்கிளை

இலக்கம் என்பன காசோலையின் அடியில் காணப்படும்.

  காசோலையின் கீழ்ப்பகுதியில் எதுவித எழுத்துக்களோஇ

ஒப்பங்களோ காணப்படலாகாது.


காசோலைக் குறுக்குக்கோடிடுதல்


  காசோலையின் பாதுகாப்பு கருதி காசோலையின்

முகப்பில் இரு சமாந்தரக் கோடுகளை வரைதல்

அல்லது சமாந்தரக் கோட்டினுள் ஏதாவது எழுதுதல்

காசோலைக் குறுக்குக்கோடிடல் எனப்படும்.

  குறுக்குக்கோடிடப்பட்ட காசோலையினை வங்கிக்

கணக்கில் வைப்பிலிட்டே பணமாக்க முடியும்.


குறுக்குக்கோடிடலின் வகைகள்

வெற்றுக் குறுக்குக் கோடிடல்

இக் காசோலையினை வங்கியில் வைப்பிட்டு பணமாக்கலாம். அல்லது இன்னொருவருக்கு கைமாற்றலாம்.

 





காசோலை ஒன்றின் செல்லுபடியாகும் காலம்

சாதாரணமாக காசோலை ஒன்றின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களாகும்.

• பொதுவாக அரச திணைக்களங்களின் காசோலைகள்

வரையப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

விசேட தேவைகளுக்காக கணக்காளரால் செல்லுபடியாகும்

காலத்தை நீடிக்க முடியும். இதன்போது காசோலையில் திருத்தம்

மேற்கொண்டமைக்காக மேலதிக கையொப்பம் இடப்பட வேண்டும்.


 




வங்கி மேலதிகப் பற்று

  காசோலையின் மூலமாக கொடுப்பனவுகளை

மேற்கொள்ளும்போது வங்கியிலுள்ள மீதியிலும்

அதிகமான தொகைக்கு காசோலை வரையப்பட்டு அக்

கொடுப்பனவு வங்கியினால் செலுத்தப்படும்போது

பற்றாக்குறையாகவுள்ள தொகையினையே வங்கி

மேலதிகப்பற்று என அழைக்கின்றோம்.

  இத் தொகை ஒரு குறுங்கால கடனாக

கருதப்படுவதுடன் அதிக வட்டியும் அறவிடப்படும்.

Download PDF



Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post