Operating_System Operating_System - examsguide.lk

 

Operating System

பணி செயல்முறைமை

WINDOWS OPERATING SYSTEM



 


கணனியினை ஆரம்பித்தல்


கணனியினை on செய்தவுடன் முதலில் கணனியானது இயங்குவதற்கு தயாராக உள்ளதா என பரிசோதிக்கும். இதனை POST  என அழைக்கப்படும்.



POST –Power On Self Test

POST செயற்பாடு முடிந்ததும் BOOTING இடம்பெறும்.

கணனியில் Desktop வரும் வரையான செயற்பாட்டினை BOOTING என அழைக்கின்றோம்.



Desktop என்பது முகப்புத்திரை என அழைக்கப்படும்



Desktop ல் காணப்படும் உருப்படிகள்

Icon, Taskbar, Start Button, Menu, Dialog Box, Command Buttons

Start Menuஇனை பெற்றுக்கொள்வதற்கான சுருக்குவிசை Ctrl+Esc

சில சந்தர்ப்பங்களில் கணனியானது திடீரென செயற்படுவதை நிறுத்தும் சந்தர்ப்பங்களில் அதனை மீண்டும் செயற்பட வைக்க Ctrl+Alt+Del  ஆகிய சாவிகளை பயன்படுத்தலாம்.

கணனியினை Shutdown செய்வதற்கு  ALT+F4 Key இனை பயன்படுத்தலாம்


Start Button & Start Menu

Windows+Esc


Clipboard –Cut / Copy / Paste


கோப்புக்களையும், கோப்புறைகளையும் நகலெடுப்பதற்கு இவை பயன்படும்.

கோப்பினை Copy செய்து Paste செய்வதன் மூலம் அதனை நகலெடுக்கலாம்

Cut செய்து Paste செய்வதன் மூலம் கோப்பினை நகர்த்திக் கொள்ளலாம்

சுருக்கு விசைகள்:

Cut –Ctrl+X

Copy –Ctrl+C

Paste –Ctrl+V



File

தரவுகளின் தொகுப்பு File  எனப்படும். File  ஆனது Name இனைக் கொண்டிருக்கும். Name இரு பிரிவுகளாக காணப்படும்.

1.Name         2. Extension (நீட்சி)


உதாரணம்: biodata.docx     -இங்கு biodata என்பது file name ஆகவும் docx  என்பது கோப்பு நீட்சியாகவும் காணலாம். சிலநீட்சிகள் வருமாறு

doc/docx –Word

xls/xlsx –Excel

ppt/pptx –PowerPoint

.jpg/.bmp –Image

Fileஇற்கு Read Only, Hidden  ஆகிய பண்புகள் காணப்படும்.

File Name இனை மாற்றுவதற்கு (Rename) F2 Key  பயன்படும்


Delete

கோப்புக்களையும், கோப்புறைகளையும் அழிப்பதற்கு இவை பயன்படும். Delete  செய்யப்படும் கோப்புக்கள் RecycleBinஇற்குள் சென்று கொள்ளும்.

RecycleBinஇலுள்ள கோப்பின்மீது right click  செய்து Restore செய்வதன் மூலம் அழித்த கோப்பினை மீளப்பெறலாம்

RecycleBinஇற்குள் நகர்த்தாது கோப்புக்களை நிரந்தரமாக நீக்கிக்கொள்ள Shift+Del  ஆகிய விசைகளை அழுத்துதல் வேண்டும்.



 

Pdf download 

 


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post