EB Exam preparation EB Exam preparation - examsguide.lk

 EB Exam preparation

திணைக்களம் என்றால் என்ன?

தலைப்பு என்றால் என்ன?

•திணைக்களம் என்றால் குறித்த பணிகளை நிறைவேற்றுகின்ற

அமைச்சின் நியதிச்சட்ட உட்பிரிவுகளாகும். இவற்றிக்கு

செலவினத் தலைப்பு ஒன்று உண்டு. தலைப்பு வரவு

செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் பிரதான கணக்கீட்டுக்

கூறாகும்.

(Head is a Main Accounting Unit.)

•ஓவ்வொரு திணைக்களத்திற்கும் ஒவ்வொரு தலைவர்

இருப்பார். திணைக்களத்தின் செலவினங்களுக்கு

தலைவர் கணக்கீட்டு உத்தியோகத்தராகவும் அவ்

திணைக்களத்தின் அமைச்சின் செயலாளர்

செலவினங்களுக்கு பிரதான கணக்கீட்டு

உத்தியோகத்தராகவும் கடமைபுரிவார்கள்.

அமைச்சர்களின் அலுவலகங்கள் இராஜாங்க

அமைச்சர்களின் அலுவலகங்கள் என்பன

திணைக்களங்களாகும்.


பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் நி.பி.124 -(2)

Chief Accounting Officer


➢ அரச நிதி சார்பான நடவடிக்கைகள் அனைத்திற்கும் நிதி

அமைச்சரே பொறுப்புடையவராவர்.

➢ இவைகளைக் கவனிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்,

நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி அமைச்சின் கீழ் உள்ள

பொதுத் திறைசேரி பொறுப்பாக உள்ளது.

➢ நிதி சார்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக அந்தந்த

அமைச்சின் செயலாளர்களை பிரதான கணக்கீட்டு

உத்தியோகத்தர்களாகவும் அமைச்சின் கீழ் உள்ள

தினைக்களத்திற்கும் ஏனைய திணைக்களங்களுக்கும்

தலைவர்களை கணக்கீட்டு உத்தியோகத்தர்களாகவும் நிதி

அமைச்சர் நியமித்துள்ளார்.

➢ மாகாணசபைகளை பொறுத்தமட்டில் பிரதம செயலாளரே

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தராவார்.

கணக்கீட்டு அதிகாரி ஒருவர் பிரதான கணக்கீட்டு அதிகாரிக்கு பொறுப்பு கூறவேண்டிய விடயங்கள்.

1. நிதிப் பிரமாணம் 50 ன் படி மதிப்பீடு தயாரிக்கும் பொறுப்பு .

2. தேசிய கொள்ளைகளுக்கு அமைவாக செயற்றிட்டங்களை ஆண்டு

மதிப்பீட்டுக்கு அமைவாக நிறைவேற்றுதல்.நி.பி.128 (1)

3. தனக்கு கீழ் உள்ள தகுதியுடைய உத்தியோகத்தர்களுக்கு நி.பி 135க்கு

அமைவாக தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பகிர்ந்தளித்து

அவற்றுக்கான பட்டோலை வழங்கி அதுபற்றி பிரதாண கணக்கீட்டு

உத்தியோகத்தருக்கு அறிவித்தல்.

4. காலத்துக்கு காலம் திறைசேரியினால் விதிக்கப்படும் சுற்றறிக்கைகளுக்கு

அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்வதொடு முற்பணக்கணக்குகளினட

வளர்ச்சிக்காக காலாண்டு முடிவின் மறுமாதம் 15ந் திகதிக்குள் அறிக்கையை

நி.பி. 504 க்கு அமைவாக பிரதாணகணக்கீட்டு உத்தியோகத்தாருக்கு

அனுப்பிவைத்தல் வேண்டும்.

5. மாதாந்த கணக்குப் பொழிப்பறிக்கை வங்கி கணக்கிணக்க கூற்று ஆளணி

கூற்று என்பவற்றை பிரதாணகணக்கீட்டு உத்தியோகத்தாருக்கு

அனுப்பிவைத்தல். அதன் பிரதி கணக்காய்வுக்கு அனுப்பி வைத்தல்.

திறைசேரிக்கு அனுப்பி வைத்தல். நி.பி.128(1)

6. நி.பி.103க்கு அமைவாக நட்டங்கள் ஏற்படடபோது நடவடிக்கை எடுத்தல்

வேண்டும்.

7. நி.பி.108க்கு அமைவாக நட்டங்களை பதிவழித்தற்கான நடவடிக்கை எடுத்தல்.



Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post