EB Exam_Computer_Test EB Exam_Computer_Test - examsguide.lk

EB Exam_Computer_Test


தரவுத் தளத்தை ஆக்குவதற்குக் கணினி மென்பொருளைப்
பயன்படுத்த காரணங்கள்

 

• அளவு அதிகரிக்கும்போது அட்டவணையை அமைத்தல் சிரமமாதல்.

பதிவின் அளவு அதிகரிக்கும்போது பெரிய அட்டவணையை அமைக்க

வேண்டியிருத்தல்.

 

• தரவு அட்டவணையைச் சேமித்து வைப்பதற்குப் பெரிய அளவு இடவசதி

தேவைப்படுதல்.

 

தரவு அட்டவணையை நெடுங்காலத்திற்குப் பாதுகாத்து வைத்தல் சிரமமாக இருத்தல்.

 

• பதிவை மறுபடியும் கையாளல் அல்லது புதிதாகச் சேர்த்தல் சிரமமாக இருத்தல்

 

• பதிவை நீக்குதல் சிரமமாக இருத்தல்.

 

• பதிவை இற்றைப்படுத்தல் (Updateசிரமமாக இருத்தல்.

 

• பதிவைத் தேடல் சிரமமாக இருத்தல்.

 

• பதிவைத் தேவையான ஒழுங்குமுறையில் வரிசைப்படுதல்(Sort)  சிரமமாக இருத்தல்.

 

• தேவையான பதிவை மாத்திரம் பெறுதல் கடினமாக இருத்தல்.

 

ஆகவேதரவு அட்டவணையை அமைப்பதற்கு இலத்திரனியல் ஊடகத்தைப்

பயன்படுத்துவதன் மூலம் மிகக்கடினமானவறறையும் மிக எளிதாக மாற்றலாம்.

 

தரவுத்தளம்(Database)

பல அட்டவணைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட தரவுச்சேமிப்பகம்தரவுத்தளம் (Database) எனப்படும்.

 

 

Database Management System

 

கணினிகள் தொடர்பாகத் தரவுத் தளத்தை அமைத்தல் முகாமித்தல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதே  Database Management System எனப்படும்.

கணினித்துறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் சில தரவுதள முகாமை மென்பொருள்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

Access, Oracle, MYSQL

MS Access

MS Access ஆனது ஓர் தரவுத்தள முகாமை மென்பொருளாகும். இதில் பின்வரும் Object கள் காணப்படும்.

1. Table

2. Query

3. Form

4. Report

5. Macro

 

Table -இது தரவுகளை தொகுத்து வைக்க பயன்படுகின்றது. நாம் உள்ளீடுசெய்யும் தரவுகள் Table இனுள்ளேயே சேமிக்கப்படுகின்றது.

 

Query – Table இனுள் உள்ள தரவுகளிலிருந்து தேவையான தரவுகளை பிரித்தெடுத்துக்கொள்ள இது பயன்படுகின்றது.

Form – Table இனுள் தரவுகளை Input / Edit /Delete  செய்துகொள்ள இது பயன்படும்.

Report – Table / Query இலுள்ள Data இனை Print செய்துகொள்ள இது பயன்படும்.

Access ல் Table இனை உருவாக்க 2முறைகள் பின்பற்றப்படும்.

1. Entering Data

2. Table Design View

Design View ஊடாக Table இனை உருவாக்குதல்

Create  Table Design என்பதை தெரிவுசெய்தவுடன் Table Design View Window தோன்றும்.

 

 

இதில்  Field Name  என்ற பகுதியில் Table வரவேண்டிய Field Name (Column Name)  இனை வழங்கிகொள்ள வேண்டும்.

Data Type என்ற பகுதியில் குறித்த Field  இனுள் உள்ளீடுசெய்யவுள்ள தரவு வகையினை தெரிவுசெய்யவும்.

Description என்பது குறித்த field தொடர்பான விளக்கத்தினை வழங்கிகொள்ள பயன்படுகின்றது.

 

Data Type

Data type பகுதியில் பின்வரும் Data Type  கள் காணப்படும்.

1. Text

2. Number

3. Memo

4. Date / Time

5. Currency

6. Yes / No

7. OLE Object

8. Hyperlink

9. Attachment

10. Lookup wizard

Text

இது குறித்த field இனுள் Text / Number இனை உள்ளீடுசெய்ய அனுமதிக்கும். Maximum  – 255 எழுத்துக்கள்

Number

இது குறித்த Field இனுள் இலக்கங்களை மட்டும் உள்ளீடு செய்ய அனுமதிக்கும்.

 

Date / Time

குறித்த  Field  இனுள் Date அல்லது Time இனை உள்ளீடு செய்ய அனுமதிக்கும்.

உதாரணமாக Date_of_Birth, App_Date போன்ற Field களிற்கு இது பொருத்தமானதாகும்.

Currency

 

இது குறித்த Field இனுள் Currency இனை மட்டும் உள்ளீடு செய்ய அனுமதிக்கும்.

Price, Salary போன்ற Field களிற்கு இது பொருத்தமானதாகும்.

Yes / No

 

இது குறித்த Field  இனுள் yes அல்லது No ஆகிய தரவுகளை மட்டும் உள்ளீடு செய்ய அனுமதிக்கும். Married  எனும் Field இதற்கு பொருத்தமானதாகும்.

 

OLE Object

 

இது குறித்த Field இனுள் படங்கள் (Photo), Audio, Video file களினை இணைத்துக்கொள்ள அனுமதிக்கும்.

Hyperlink

இது குறித்த Field இனுள் Webpage, Email Address  ஆகியவற்றுக்கு Link செய்துகொள்ள முடியும்.

 

Attachment

இது குறித்த Field இனுள் File களினை இணைத்து வைத்துக்கொள்ளலாம்.

Lookup Wizard

இது குறித்த  Field  இனுள் Selected List  இனை இணைத்துக்கொள்ள பயன்படும்.

 

 

Field Properties

Field Properties பகுதியில் பின்வரும் விபரங்கள் காணப்படும்.

1. Field Size

2. Format

3. Input Mask

4. Validation Rule

5. Validation Text

 

Field Size

குறித்த கநைடன இனுள் உள்ளீடுசெய்யவேண்டிய எழுத்துக்களின் எண்ணிக்கையை வழங்கி கட்டுப்படுத்தலாம்.

 

Format

குறித்த  field  இனுள் உள்ளீடுசெய்யப்படும் தரவுகளிற்கு Format இனை வழங்கிக்கொள்ளலாம்.

   

தரவு வகை 

 வழங்கக்கூடிய Format

Text

 

Color - @[red]

 

Number

 

Color - #[Green]

Currency

 

“Rs.”#,###.00

 

Date

DD/MMM/YYYY

 

 

Input Mask

குறித்த field இனுள் உள்ளீடுசெய்யப்படும் தரவுகளிற்கு வரையறையினை வழங்கிக்கொள்ளலாம்.

உதாரணமாக

Field

 

Input Mask

 

Name

 

>?.?<?????????????

 

NIC No

 

9966700243

 

TPNo (021)222-1254

 

“(“000”)”000 “-“ 0000

 

Validation Rule

குறித்த  field  இனுள் உள்ளீடு செய்யப்படும் தரவுகளிற்கு நிபந்தனையினை வழங்கி கட்டுப்படுத்தலாம். நிபந்தனை மீறப்படும்போது தோன்ற வேண்டிய பிழை செய்தியினை Validation Text பகுதியில் வழங்கலாம்.

உதாரணமாக : Marks என்ற Field  இற்கு Validation Rule பகுதியில் “Between 0 And 100”  என வழங்கினால் Marks Field  இனுள் இற்கும் 100 இற்கும் இடைப்பட்ட இலக்கத்தினையே உள்ளீடுசெய்ய முடியும்.

 

Primary Key

ஒரு Table ஆனது Primary key  இனை கொண்டிருப்பது நல்லது. Primary key  ன் தொழிற்பாடு என்னவெனில் குறித்த Field இனுள் Duplicate Entry Input  செய்யாதவாறு தடுக்கும். அதேபோன்று தரவுகளை தேடிக்கண்டுகொள்ளும்போது குறித்த தகவல்களை தனித்துவமாக இனங்காணும்.

 

Table Relationship

தொடர்புடைய Tableகளிற்கு இடையே ஓர் Link இனை ஏற்படுத்திக்கொள்வதை Relationship என அழைக்கிறோம். இது வகைப்படும்.

1. One to One Relationship

2. One to Many Relationship

3. Many to Many Relationship

 

வினாக்கள்

1) Access 2007 இன் Extension யாது?

a) .mdb b) .xmlx c) .accdb d) .pptx

 

2) ஒரு Database  ன் ஒவ்வொரு Column இலும் சுட்டிக்காட்டுவது

a) Record b) Fild c) Database d) Table

 

3) ஒரு  Datasheet  ல் ஒவ்வொரு Row இலும் சுட்டிக்காட்டுவது

a) Recor b) Field c) Database d) Table

 

4) Form ஒன்றினை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் Object கள் யாவை?

a) Table & Query b) Table & Report

c) Table Only d) Query and Report

 

5) Query ஐ தயாரிக்க பயன்படும் Tool எது?

a) Database Wizard b) Query Wizard

c) Simple Filter Wizard d) Table Query Wizard

 

6) பின்வருவனவற்றுள் MS Access  இன் சரியான Data type எது?

a) Number b) Currency c) Text d) மேற்கூறிய எல்லாம்

 

7) 842080762V எனும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை வழங்குவதற்கான சரியான Data Type  எது?

a) Text b) Auto Number C) Number d) Currency

 

8) Report ன் Footer பகுதியில் இடுவதற்கு மிகப்பொருத்தமானது

a) Grand Total b) Sub Total

C) Column Heading 4) Page Number

 

9) Form ஒன்றில் Calculation களை மேற்கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய பகுதி எது?

a) Command Button b) Combo Box

c) Text Box d) List Box

 

பகுதி II வினாக்கள்

1.       Database management System  என்பதிலிருந்து விளங்கிகொள்வது எது?

2.       MS Access  இனை பயன்படுத்தி தரவுகளை தயார் செய்வதால் எற்படக்கூடிய அனுகூலங்கள்.

3.       பின்வருவனவற்றின் பயன்பாடுகள் பற்றி விளக்குக.

1. Table

2. Query

3. Forms

4. Report

 

4. MS Access y; Primary key (முதன்மைச்சாவி) இனை பயன்படுத்துவதற்கான காரணம்.

5. உமது திணைக்கள தலைவர் உமது திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் தரவுகளை கணனிமயப்படுத்திப் பெற்றுக்கொள்ள எண்ணுகின்றார்.

1. தரவுத்தள முகாமை மென்பொருளுக்கு உதாரணம் தருக.

2. மேற்குறித்த தரவுத்தளத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு அட்டவணைகளை இனம்கண்டு ஒவ்வொரு அட்டவணையிலும் பயன்படுத்தப்படும் புலங்களை தருக. (இரண்டு அட்டவணைக்குமான மொத்த புலங்களின் எண்ணிக்கை 10இற்கு மேற்படல் வேண்டும்)

3. மேற்குறித்த புலங்களிற்கு பொருத்தமான தரவு வகைகளை தருக

4. மேற்குறித்த புலங்களில் முதன்மைசாவியாக பயன்படுத்ததக்க புலங்களின் பெயரினை தருக.

5. முதன்மைசாவியை பயன்படுத்துவதன் நன்மைகள் தருக. 



Click Here Download PDF 

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Now EB Exam Computer Test




 



 


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post