Sneha's achievement in sports Sneha's achievement in sports - examsguide.lk

 Punduloya Sneha's achievement in sports

பூண்டுலோயா பி. சிநேகா விளையாட்டு துறைகளில் சாதனை

பூண்டுலோயா பி. சிநேகா என்ற மாணவி பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சாதனைகளை நிலை நாட்டிவரும் ஒருவர். இவர் ஆரம்ப கல்வி முதல் க. பொ. த. சாதரண தரம் வரை பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.
இவர் 2021 ஆண்டு தெற்காசியா விளையாட்டுப் போட்டி நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்றது “ இதில் அட்டையா பட்டையா ” என்கின்ற விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணிசார்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை தேடித் தந்த ஒருவர்.
அட்டையா பட்டையா என்னும் விளையாட்டு இலங்கையில் விளையாடும் கிளித்தட்டு விளையாட்டைப் போன்றதாகும். இலங்கை சார்பாக கலந்து கொண்ட மலையக அணி ஏனைய நாடுகளுடன் விளையாடி இறுதியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய போது இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் கபடி விளையாட்டு அணியில் விளையாடிய ஒருவர். அந்த அணியினரே இந்த அட்டையா பட்டையா என்கின்ற விளையாட்டில் கலந்து கொண்டனர்.
இரு பக்கமும் எட்டுப் பெட்டிகள் போட்டு இருப்பார்கள். கிளித் தட்டுவிளையாட்டு பயிற்று விப்பாளர் அந்தோனி செபஸ்தியன்ராஜ் தான் இதற்கான பயிற்றுவிப்பாளராக கடமையாற்றினார்.



Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post