Russia suspended From the Human Rights Council Russia suspended From the Human Rights Council - examsguide.lk

Russia suspended From the Human Rights Council-2022 

 மனித உரிமைகள் 

பேரவையில் இருந்து

 ரஷ்யா 

இடைநிறுத்தம் 

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதன் மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவைத் இடைநிறுத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதன் விளைவாக ரஷ்யா அந்த அமைப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. பொதுச் சபையின் வாக்கு சட்டவிரோதமானது என்றும் அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்றும் ரஷ்யா சாடியது. மனித உரிமை பேரவையில் இருந்து ரஷ்யாவை நீக்கும் தீர்மானத்தை அமெரிக்கா வழிநடத்தியது. உக்ரைன் மீது படையெடுத்ததற்கு ரஷ்யாவுக்குக் கிடைத்த பதிலடி அது என்று அமெரிக்கா கூறியது. ரஷ்யாவுக்கு எதிராக 93 உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக 24 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். உக்ரைனில் ரஷ்யாவின் பிடியில் இருந்த தலைநகர் கியேவுக்கு அருகில் உள்ள புச்சா நகரில் பொதுமக்களின் சடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தரும்படி உக்ரைன் தூதுவர் செர்கி கிஸ்லிட்சியா உறுப்பு நாடுகளை வலியுறுத்தினார். இதில் இந்தியா, இலங்கை 54 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டன. 58 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது நாடு ரஷ்யா. 2011இல் லிபியா அதிலிருந்து நீக்கப்பட்டது.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post