Distant star observation Distant star observation - examsguide.lk

 Distant star observation

அதிக தொலைவிலுள்ள நட்சத்திரம் அவதானிப்பு

இதுவரை அவதானிக்கப்பட்டதில் மிகத் தொலைதூர நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் இதுவரை தெரியாத ரகசியங்களை விடுவிக்க உதவும் என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நட்சத்திரத்தில் இருந்து பூமிக்கு ஒளி வந்து சேர சுமார் 12.9 பில்லியன் ஆண்டுகள் எடுக்கின்றன. இது முன்னர் அவதானிக்கப்பட்ட தொலைதூர “சுப்பர்ஜெயன்ட்” நட்சத்திரத்தை விடவும் ஒன்பது பில்லியன் ஒளியாண்டுகள் அதிக தொலைவில் உள்ளது.
ஏரெண்டல் என்று விஞ்ஞானிகளால் பெயரிடப்பட்டிருக்கும் இந்த நட்சத்திரம் ஹப்பிள் விண்வெளி ஆய்வகத்தின் மூலம் இயற்கை நிகழ்வொன்றை பயன்படுத்தி தனியாகக் கண்டுபிடித்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் விரிவான விபரம் ஜர்னல் நேச்சர் சஞ்சிகையில் கடந்த புதன்கிழமை வெளியானது.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post