Discovery of the remains of a flying animal in Chile Discovery of the remains of a flying animal in Chile - examsguide.lk

 Discovery of the remains of a flying animal in Chile-2022

பறக்கும் விலங்கின் எச்சம் சிலி நாட்டில் கண்டுபிடிப்பு

அடகாமா பாலைவனத்தில் சுற்றித்திரிந்த புராதன, அரியவகை ஊரும் விலங்கின் பாதுகாக்கப்பட்ட எலும்புகளைக் கண்டுபிடித்திருப்பதாக சிலியின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அவை 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் பழைமையானவை என்று கூறப்படுகிறது. அவை டைனோசர்களுடன் வாழ்ந்த டெரோசர்ஸ் எனும் பறக்கும் விலங்கின் எலும்புகள் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவை டைனோசர்களைப் போன்று நீண்ட இறக்கைகளைக் கொண்டிருந்ததாகவும், நீண்ட மெல்லிய பற்களைக் கொண்டு தண்ணீரை உறிஞ்சிக் குடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய கண்டுபிடிப்பு மிக அரிது என்பதால் இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்று நம்பப்படுகிறது.

கண்டுபிடிப்பால் டெரோசர்ஸின் உடற்கூற்றை மட்டுமின்றி, அதன் வழக்கங்களையும் ஆராய முடியும். இந்த எலும்புகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்தன. பெரும்பாலும் இத்தகைய எலும்புகள் தட்டையாக, உடைந்த நிலையில் காணப்படும். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பில் முப்பரிமாண வடிவில் பாதுகாக்கப்பட்ட எலும்புகள் கூட கண்டெடுக்கப்பட்டதாய் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post