Budget for India-China border security more than last year Six-fold increase Budget for India-China border security more than last year Six-fold increase - examsguide.lk

Budget for India-China border security more than last year Six-fold increase

கடந்த ஆண்டை விட இந்தியா - சீனா எல்லைப் பாதுகாப்பிற்கான பட்ஜெட் ஆறு மடங்கு அதிகரிப்பு

எல்லை உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தின் கீழ் இந்தியா-சீனா எல்லைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு நடப்பு நிதியாண்டில் ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு  செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.

பாஜக எம்பி திலீப் சைகியா கேட்ட கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

BIM-ன் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பட்டியலிட்டு, MHA கடந்த ஆண்டை விட 2020-/21 இல் இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளுக்கான BIM நிதியை 42.87 கோடி ரூபாயில் இருந்து 2021-/22 இல் 249.12 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது என்றார். சுமார் ஆறு மடங்கு அதிகம். அதேசமயம் 2019--/20க்கான நிதி 72.20 கோடி ரூபாயாக இருந்தது.

2019-/2020 ஆம் ஆண்டில் இந்திய-மியான்மர் எல்லைக்கு அரசாங்கம் 20 கோடி ரூபா ஒதுக்கியது, இது 2020-/21 இல் ரூ 17 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது, ஆனால் மீண்டும் 2021-/22 இல் ரூ 50 கோடியாகக் குறைந்தது.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post