Beast திரை விமர்சனங்கள் முகநூலிலிருந்து Beast திரை விமர்சனங்கள் முகநூலிலிருந்து - examsguide.lk

 Beast திரை விமர்சனங்கள் முகநூலிலிருந்து




பீஸ்ட்' - திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து:

தனது முந்தைய தாக்குதல் ஒன்றின் தொடர்பில் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவரிடம் போகும் சகல வித்தைகளும் தெரிந்த அசகாயசூர 'ரா' உளவாளி ஒருவன் காதல் தொடர்பினால் நகரின் வணிக வளாகம் ஒன்றிற்குள் நுழைந்த வேளையில், மக்கள் நிறைந்த அந்த வணிக வளாகத்தை
வல்லமை கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினால், நம் உளவாளி தீவிரவாதிகளுக்கே தீவிரவாதியாக எழுந்து 'பீஸ்ட்' ஆக நின்றால் எப்படி இருக்கும், அதை சீரியஸ் காட்சிகளுக்கு நடுவே காமெடி கலந்து நெல்சன் தந்தால்... 'பீஸ்ட்' 

விஜய் அழகாக இருக்கிறார், பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார், அழகாக ஆடுகிறார், நன்றாக பாடுகிறார், எல்லாமும் வீணாகப் போகிறது இந்தத் திரைக்கதையில்.

பூஜா ஹெக்டே அழகு.  செல்வராகவன் நன்று. தொடக்கத்தில் வரும் பாடல், படம் முடியும் போது வரும் பாடல் என இரண்டிலும் அனிருத் நிற்கிறார், நடனம், காட்சிப்படுத்துதல் இரண்டும் நன்று.

அவ்வளவு வல்லமை பொருந்திய தீவிரவாதி, தன் நாட்டிற்கே திரும்பிவிட இருப்பதாக சொல்லும் இடத்திலும் அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் அந்தப் பாத்திரமும் விழுகிறது, படமும் விழுகிறது. 

இந்திய அரசின் உயரதிகாரி, பணியின் போது நடந்த நிகழ்வு ஒன்றினால் உணர்ச்சி சமநிலை்இழந்து மனநல மருத்துவரிடம் போகிறார் என்னும் கதையமைப்பு, அல்லு அர்ஜூன் நடித்த முந்தைய தெலுங்குப் படத்தை அப்படியே கண் முன் கொண்டு வருகிறது. 

சீரியஸ் ட்ராக்கில் காமெடி என்னும் ஒரே ஸ்டீரியோவாகவே பண்ணுவாரோ நெல்சன் என்ற கேள்வி எழுகிறது. 

வி - டாக்கீஸ் வெர்டிக்ட்: 'பீஸ்ட்' - நோயுற்ற வீரியம் குறைந்த பீஸ்ட். பார்க்கலாம். 

- திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து



கடந்த பத்து வருஷமா வந்த எல்லா விஜய் படத்துக்கும் விமர்சனம் காலைல நெகடிவ்வாவும் மதியம் mixedஆவும் நாள் முடியும் போது பாஸிட்டிவ்வா தான் வரும். 
நல்லா கவனிச்சு பாருங்க.

அதே போல தான் இதுவும்..
நிச்சயம் பெரிய வெற்றி அடையும்.
படம் நல்லா இருக்கு.
பார்த்துட்டு முடிவு செய்யுங்க.



எல்லா நேரங்களிலுமே அறிவை சுமந்து கொண்டே இருக்க முடியாது. அது பெருஞ்சுமையும் கூட. லாஜிக் பார்த்து, கதை பார்த்து, திரைக்கதை எப்படி என்று அலசி ஆராய்ந்து,  பேசவும், எழுதி சிலாகிக்கவும்  சில படங்கள் அவை ஒரு பக்கம். எதையுமே யோசிக்காம எத்தனை புல்லட் பறந்தாலும், ஒரு புல்லட்டும் லேசா கூட  உரசாத, சூப்பர் ஹீரோக்கள் படம் இன்னொரு பக்கம். 

சமூகத்துக்கு என்ன சொல்ல வருது எது இலக்கியம் இப்படி எதையும் யோசிக்காம ஒரு இரண்டரை மணிநேரம் ஜாலியா சிரிச்சிட்டு வரும் படங்களும் இல்லாட்டி, இந்த ரொட்டீன் லைஃப் போரடிச்சிடாது??

பீஸ்ட்...நல்ல எண்டர்டெயின்மெண்ட். உம்மனா மூஞ்சி ஆளுங்களக் கூட்டிட்டுப் போகாம, விசிலடிச்சு கைதட்டும் ஜாலியான செட்டோட போங்க. சீரியஸான சிச்சுவேஷன்னு இதுவரை தமிழ் சினிமாக்களில் கேப்டன், சரத்குமார்லாம் கண்ணை உருட்டி, நரம்புகளை ஓட விட்டு  மிரட்டின படத்தை ஜாலியா பார்த்த ஃபீல். 

நல்ல எண்டர்மெயிண்ட்டா இருந்தது. எஞ்சாய் பண்ணி  பார்த்திட்டு வந்தேன்.  ஜாலியா போய்ட்டு வாங்க. ஏன் எப்பப் பார்த்தாலும் வெரப்பாவே இருக்கணும்.
I love beast❤❤

இந்த  மலையாளப்படம், பெங்காலிப் படம் தான் பெஸ்ட்டு, கலை, இலக்கியம் அது இதுன்னு சொல்றவங்க வீட்லேயே இருந்துக்கோங்க.

Kavitha Senthilkumar

Beast விமர்சனம் ~

இதுல என்ன ஒரு கெட்ட விஷயம்னா தியேட்டருக்குள்ள நம்ம பசங்க பூரா மாட்டிக்கிட்டிருக்காங்க…

கிராமத்து கிருஷ்ணா

சும்மா சும்மா நெகட்டிவ் விமர்சனம் பண்ற ஆள் நானில்ல
தியேட்டர், மற்றும் வினியோகஸ்தர்கள் ரிப்போர்ட்களையும்;
விஜய் ரசிகர்களின் எழுச்சியையும் பார்க்கும்போது
இன்று நள்ளிரவே
300 கோடி வசூலை தாண்டுமென்றே கோடம்பாக்கம் வட்டாரம் பேசிகொள்வதை நம்மால் கேட்க முடிகிறது
இது
ஆங்கிலப்படமான Gravity யின் வசூலை முறியடிப்பதுடன்

தமிழ் பட இன்ட்ஸ்ட்ரி வசூலையே முறியடிப்பது உறுதி;
அப்படியெனில் 3000 கோடி வசூலை தாண்டுவது நிச்சயம்

Beast is best

ஆயிசா அலி

BEAST விமர்சனம்

முதல் நாள்: தெறி மாஸ்
இரண்டாம் நாள்: ரசிகர்களுக்கு பிடிக்கும்
மூன்றாம் நாள்: ஓகே! ஒரு முறை பார்க்கலாம்
நான்காம் நாள்: பேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்கும்
ஐந்தாம் நாள்: குழந்தைகளுக்கு பிடிக்கும்

அதானே?🤔😃

Saravanan Ks

அந்த காலத்தில் கல்கண்டு magazine லே கடைசி பக்கத்தில் சினிமா விமர்சனம் வரும். ரொம்பவே அசத்தலாகவே இருக்கும். இன்னும் கூட நினைவில் இருக்கு. 

சட்டம் - மட்டம்
தங்கமகன் - பித்தளை மகன்

இப்படியெல்லாம் ஒரு வரி விமர்சனத்தில் முடிப்பார்கள்.

இப்போதெல்லாம் twitter ரெவ்யூ படு சூப்பர். அசத்தலாவே இருக்கும்.

இன்றைய விமர்சனம், காமெடியா இருந்தாலும் ரசிக்கும் படியே இருக்கே..

Beast - No taste

Ramkumar G Krish

#Beast ஒரு வரி விமர்சனம்

சுறா குருவி யை விட பெரிய மொக்கையாம்

Keba Josiah Kemuel

போதிதர்மர் தனது பணம் மீதப்பட்டு விட்டது என்பதை உணர்கிறார்😌
Beast review
Don't miss end scene 😂

காகிதக் கப்பல் - தமிழ் உலாவி


பயணம் கூர்க்கா ஆக் ஷன் பழைய விஜயகாந்த் திரைப்படம் சில இவை அனைத்தும் சேர்ந்த கலவை தான் இந்த beast 😔😔😔ஷாப்பிங் காம்ப்லெஸ் லேயே முடிச்சிட்டான் நெல்சன் தரமான செய்கை 😡😡😡ட்ரைலர் பார்த்தவே முழு  படம் பார்த்த மாறி தான் 🙄🙄ப்ளூ சட்டை மாறனுக்கு  செம தீணி இருக்கு 😄😄😄

பாக்கிஸ்தான் ல போய் தீவிரவாதியை  கைது பண்ணி இந்தியாவுக்கு கூட்டிட்டு வராரு  இதை நம்ம எந்த விஜயகாந்த் படத்துலயும் பாக்கல ல 😡😡😡


 Gilli Deva 

மக்களே இதுவரை வந்த விமர்சனம் only interval block scence மட்டும் தான்... இதைத்தவிர 🐢 களுக்கு விமர்சிக்க எதும் கிடைக்கல.. that's all.. இது India's biggest action thriller oh.. குடும்பங்கள் கொண்டாடும் படம் நு சொல்லவில்லை... நீங்க பார்த்து நீங்களே தெரிஞ்சுக்கொள்ளுங்கள் 👍 #EverYoungVijay #Beast 🔥 #Feast 🔥

Kumaravel Muthu

விஜய் நெல்சன் உள்ளிட்ட திரைப்பட பயங்கரவாதிகளுக்கு தரமான செருப்படி 🔥🔥🔥

முஸ்லிம்களை மட்டுமே தீவிரவாதிகளாக காட்டி அப்படி என்னத்த டா பண்ண போறீங்க பிணம் தீன்னி பசங்களா

 Ravanai Hussain

Beast விமர்சனம்:
***********************
கதை: இந்தியாவில் பணயக்கைதியாக இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதியை விடுவிக்க சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தை சுற்றி வளைத்து அதில் இருக்கும் மக்களை பிடித்து வைத்து மிரட்டும் தீவிரவாதிகள்.
அதே வளாகத்தில் உள்ளே இருக்கும் RAW பிரிவின் முன்னாள் அதிகாரி விஜய் எப்படி காப்பாற்றினார், அந்த பாகிஸ்தான் தீவிரவாதி என்ன ஆனார் என்பதே கதை.

கதை கேட்க ஒரு மாதிரி, நல்லா இருக்கிறமாதிரி இருக்குல்ல, அப்படி நம்பி ஏமாறாதீர்கள். திரைக்கதை மகா சொதப்பல். படத்தில் கைத்தட்டல் வாங்கின காட்சியே Tilte Card தான். விஜய் பெயர் வரும்போது அவரது ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். அவ்வளவுதான், அதற்கு பிறகு அவ்வளவு silent mode .  
விஜய்யின் Intro scene எந்தவித தாக்கமும் இல்லை. படத்தில்  99% காட்சிகள் மிகவும் செயற்க்கையாகவே இருக்கிறது. அந்த காட்சியும் மனதில் ஒட்டவில்லை. 

கதாநாயகி பூஜாஹெக்டே எதற்கு அவரது கதாபாத்திரம் என்பதே தெரியவில்லை. Youtube இல் அதிக பார்வையாளர்களை பெற்ற "ஹலமத்தி ஹபீபோ" படத்தில் சுத்தமாக ஒட்டவில்லை. 
இயக்குனர் நெல்சன்க்கு திருஷ்டி கழித்தது போல இந்த படம், அவர் இன்னும் Doctor படத்தை விட்டு வெளிவரவில்லை.
அதே போல காமெடி முயற்சி செய்து தோற்று போய் நம்மளையும் நோகடித்தது தான் மிச்சம்.

VTV கணேஷ் மட்டும் ஆங்காங்கே சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் சொதப்பலின் உச்சம்.
இசையும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை, இரைச்சல் தான் அதிகம்.

மொத்தத்தில் விஜய்யின் படுமொக்கை படங்களான சுறா, புலி படங்களை வீழ்த்தி Beast முதலிடம் பிடித்தது.

One Word Review:  Beast - WASTE 👎
 Rajkumar Kaliaperumal 

13.04.2022
விஜய் நடித்த பீஸ்ட் (BEAST) திரைப்பட விமர்சனம்.

இந்து சகோதரர்களின் கருத்து.

சதா எப்போது பார்த்தாலும்; இஸ்லாமிய சமூகத்தை தீவிரவாதிகளை போல் சித்தரிப்பது அருவருப்பாக உள்ளது!

இது விஜய்க்கு தேவையில்லாத அரசியல்! அழகல்ல!!

அப்படியே அரசியலுக்கு வந்தாலும், முஸ்லிம்களின் ஒரு ஓட்டு கூட உங்களுக்கு (விஜய்க்கு) விழாது!!

இன்னும் எத்தனை நாள் வரைதான் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் காட்டுவீர்கள்? 

இது ஒரு பிழைப்பா என்பது போல்
தொப்புள்கொடி உறவுகளே கண்டிக்கின்றனர்!

*BEAST - WORST*

"30 வருடத்திற்கு முன்னரே விஜயகாந்த், அர்ஜுன் கழட்டிக் காயப்போட்ட பழைய ஜட்டியை விஜய்க்கு மாட்டி விட்டு வெறுப்பு அரசியல் பேசியிருக்கிறார் நெல்சன்". 

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர்..
உமர் ஃபாரூக்..
இஸ்லாமிய தீவிரவாதிகள்..
இன்ஷா அல்லாஹ்..

நேர்மையான தேசப்பற்று மிக்க அல்டாஃப் எனும் இஸ்லாமிய அதிகாரி.. 

இஸ்லாமிய குழந்தைகள் மீதான நாயகனின் கழிவிரக்கம்..

என படம் நெடுக தேர்ந்த ஆர்.எஸ்.எஸ்  மூளையோடு படமாக்கியிருக்கும் 
நெல்சனுக்கு கடும் கண்டனங்கள். 

விமர்சனம் எழுதக்கூட தகுதியற்றக் குப்பை தான் இந்த beast., 

நாடே இந்துத்துவ தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் தற்போதைய சூழலில்., அதிலும் வடக்கில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டும் கூட இப்படியொரு படம் எடுக்க முடிகிறதென்றால் நெல்சன் போன்றவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.

*BEAST - WORST*

FIR படத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மற்றுமொரு நச்சுக் குப்பை தான் இந்த Beast. இது போன்ற படங்களைத் தொடர்ந்து வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் கொள்கைப் பற்று மயக்கமடைய வைக்கிறது., 

பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர்
உமர் ஃபாரூக்
இஸ்லாமிய தீவிரவாதிகள் 
இன்ஷா அல்லாஹ் 
நேர்மையான தேசப்பற்று மிக்க அல்டாஃப் எனும் இஸ்லாமிய அதிகாரி 
இஸ்லாமிய குழந்தைகள் மீதான நாயகனின் கழிவிரக்கம் 

என படம் நெடுக தேர்ந்த ஆர்.எஸ்.எஸ்  மூளையோடு படமாக்கியிருக்கும் நெல்சனுக்கு கடும் கண்டனங்கள். 30 வருடத்திற்கு முன்னரே விஜயகாந்த், அர்ஜுன் கழட்டிக் காயப்போட்ட பழைய ஜட்டியை விஜய்க்கு மாட்டி விட்டு வெறுப்பு அரசியல் பேசியிருக்கிறார் நெல்சன் 

கேவலங்கள் 

சரி உருவாக்கம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் முதல் பாதி கொடூர மொக்கையாக இருக்கிறது இரண்டாம் பாதி முதல் பாதியை விட மும்மடங்கு கொடூர மொக்கையாக இருக்கிறது. தியேட்டர் உள்ளே உக்கார்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள செல்போனை நோண்டி தப்பிப்பதே அத்தியாவசியமாகிறது

படத்தை அக்குவேராக ஆய்ந்து நாறடிக்க ஆசைதான் என்றாலும் இது போன்ற கொடூர நச்சுக் குப்பைகளை ஒதுக்கித் தள்ளுவதே சாலச் சிறந்தது எனும் முடிவால் கை விடுகிறேன்.

விமர்சனம் எழுதக்கூட தகுதியற்றக் குப்பை தான் இந்த beast., 

நாடே இந்துத் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் போது அதிலும் வடக்கில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டும் கூட இப்படியொரு படம் எடுக்க முடிகிறதென்றால் நெல்சன் போன்றவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது., 

BEAST - WORST

-ப.பிரபாகரன்

~ Beast Movie : டைட்டில் கார்டு BGM செமையா இருக்கு இனிமே எல்லா விஜய் மூவிக்கும் இதையே யூஸ் பண்ணுங்கடா. விஜய் மூவினாலே மாஸ் இன்றோ&இன்டர்வல் இருக்கும் இரண்டும் இல்லை சொதப்பல். அனிருத் மூவிய Save பண்ணிட்டான் சொல்லலாம். பைட் சீன் சாங்ஸ் எல்லாம் நல்லா இருந்துச்சு. ரொம்ப மோசம்லாம் இல்ல  கண்டிப்பா ஒரு வாட்டி பாக்கலாம். கலவையான விமர்சனம் தான் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை..

Fafdu Mathi

பீஸ்ட் ஒரு வரி விமர்சனம்:-

படம் தொடங்கி பத்தாவது நிமிசம் விஜய்ணா, படத்துல ஒரு குழந்தைய கொல்லுறாரு... 

அடுத்த ரெண்டு மணி நேரம் படம் பாக்க போன ஆடியன்ஸ கொல்லுறாரு☹️

 பிரணவ் பொறியாளன்

Beast விமர்சனம் ~

இதுல என்ன ஒரு கெட்ட விஷயம்னா தியேட்டருக்குள்ள நம்ம பசங்க பூரா மாட்டிக்கிட்டிருக்காங்க…

Girish Kumar

#beast  

ஒரு வரி விமர்சனம் 

பீஸ்ட் னு பேர் வச்சதுக்கு வேஸ்ட் னு வச்சிருக்கலாம்

வேதை அப்பு

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post