கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் 2016 ஆம் ஆண்டின் பின்னர் எந்தவித நிதி அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் 2016 ஆம் ஆண்டின் பின்னர் எந்தவித நிதி அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை - examsguide.lk

 

கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் 2016 ஆம் ஆண்டின் பின்னர் எந்தவித நிதி அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை





2017, 2018, 2019தரவுகள் அனைத்தும்  அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பு

கோப் குழு கூட்டத்தில் அம்பலம்

வரையறுக்கப்பட்ட இலங்கை கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் 2016ஆம் ஆண்டின் பின்னர் எந்தவித நிதி அறிக்கையும் தயாரிக்கப்படாமை கோப் குழுவில் புலப்பட்டது.

வரையறுக்கப்பட்ட இலங்கை கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் 2015மற்றும் 2016ஆம் நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் (19) பாராளுமன்றத்த்தில் கூடிய போதே இந்தவிடயம் புலப்பட்டது. 

கணினி மென்பொருள் பிரச்சினையால் 2017, 2018, 2019ஆகிய ஆண்டுகளுக்கான தரவுகள் அழிந்துள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். இதனால் நிதியறிக்கை தொடர்பான தகவல்கள் இல்லையென அவர்கள் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, இது தவறுக்காக காரணமல்ல என கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டதுடன் இந்தத் தகவல்களை வேறு ஓர் இடத்தில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்க வேண்டுமெனத் தெரிவித்தார். மேலும், இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நபர்கள் யார் என்பதையும் கோப் குழுவின் தலைவர் வினவினார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தகவல்கள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் இங்கு சிக்கலொன்று காணப்படுவதாக நியாயமான சந்தேகம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் இது தொடர்பில் விரைவாகக் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு கோப் குழு பரிந்துரை வழங்கியது.

விசேடமாக இந்த நிதி அறிக்கைகள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால்  2016ஆம் ஆண்டு முதல் இடம் பெற்ற ஒருசில நிதி நடவடிக்கைகள் தொடர்பில் கோப் குழுவில் உரிய முறையில் கலந்துரையாட முடியாமல் போயுள்ளதாக கோப் குழுவின் தலைவர் இங்கு சுட்டிக் காட்டினார்.

அதேபோன்று, 2018ஆம் ஆண்டில் இலங்கை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 500மில்லியன் ரூபாய் கடன் தொகை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கடனில் அதிகளவு தொகை ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை புலப்பட்டது. இதற்கு முன்னர் இலங்கை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனும் இந்தக் கடன் மூலம் பெறப்பட்ட நிதியால் வழங்கப்பட்டுள்ளமை இதன்போது புலப்பட்டது. ஆனால் அந்தக் கடனை 2023ஆம் ஆண்டு முதல் மீண்டும் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். எனினும், வரையறுக்கப்பட்ட இலங்கை கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் இந்தக் கடனை 2023ஆம் ஆண்டிலிருந்து வழங்குவதற்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதை அறியாமல் உள்ளதாகவும் இங்கு புலப்பட்டது.

அதேபோன்று, வரையறுக்கப்பட்ட இலங்கை கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி முதல் தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக இங்கு புலப்பட்டது. எனினும் இது தொடர்பில் பணிப்பாளர் சபை அனுமதி மற்றும் அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்பதால் அவரது விலகல் சட்டரீதியற்றது எனவும் அதனால் ஏப்ரல் 21ஆம் திகதி அவரை கோப் குழுவுக்கு அழைப்பதற்கு பரிந்துரைப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். 

மேலும் 2017ஆம் ஆண்டு கட்டடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மாணம் காரணமாக நிதி அறிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் இங்கு புலப்பட்டது. 

அதற்கமைய மூன்று மாதங்களுக்குள் 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளுக்கான நிதி அறிக்கைகளை மற்றும் வியாபாரத் திட்டத்தை தயாரிக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரை வழங்கினார்.

இந்தக் குழு கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, மதுர விதானகே, ஜயந்த சமரவீர மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் கலந்து கொண்டனர். 

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post