Current Affairs 1 Current Affairs 1 - examsguide.lk

 Current Affairs

1) 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் போட்டி, 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டி, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற அவுஸ்ரேலிய ஓபன் போட்டி ஆகிய 3 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவுப் பட்டத்தினை வென்ற தனது 25 ஆவது வயதிலேயே ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ள உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை யார்? 

2) 1936 ஆண்டு நவம்பர் முதல் அமுலில் உள்ள அவுஸ்ரேலியா பல்கேரியா,பிரான்ஸ்,கிரிஸ்,ஜப்பான், ரோமானியா,யுகோஸ்லாவியா,ஐக்கிய இராட்சியம்,சோவியத் ஒன்றியம்,துருக்கி ஆகிய நாடுகளால் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பெயர் யாது? உக்ரைனில் சூழ்நிலை போர் நிலவரமாக மாறி விட்டது என்பதால் துருக்கி நாட்டிற்கு இவ் உடன்படிக்கையினை செயற்படுத்தி பாஸ்போரஸ் மற்றும் டார்டனெல்ஸ் ஆகிய நீர்ச்சந்திகள் வழியே ரஸ்ய போர்க்கப்பல்கள் கருங்கடலினுள் நுழைவரை தடை செய்வதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

3) 2012 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி மேம்பாட்டு தீர்வுக்கான பிணையத்தினால் உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்படுகின்றது.2022 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் உலக மகிழ்ச்சி அறிக்கையில் இரண்டாமிடம், மூன்றாமிடத்தை பெற்ற நாடுகள் எவை? இலங்கை பெற்ற தரவரிசை யாது? தொடர்ந்தும் ஐந்தாவதாது ஆண்டாக முதலிடத்தை பெற்ற நாடு எது? இந்த அறிக்கையானது 146 நாடுகளைத் தரவரிசைப்படுத்துகின்றது. உலகில் மகிழ்ச்சியற்ற நாடாக தரவரிசையில் 146ஆவது இடத்தை பெற்ற நாடு?

4) தற்போது உலகில் அதிகளவில் தடை விதிக்கப்பட்ட நாடாக ரஸ்யா திகழ்கின்றது. இதற்கு முன்பாக அதிகளவில் தடை விதிக்கப்பட்ட நாடு?

5) கிலோநோவா எனும் நிகழ்வானது சூப்பர்நோவா வெடிப்புக்களின் போது அழிந்த நட்சத்திரங்களின் எச்சங்களான அதிக அடர்த்தி கொண்ட இரு நியுட்ரான் நட்சத்திரங்களுடன் மோதும் போது நிகழ்கிறது. எக்ஸ் கதிரில் நிகழும் இந்த மின்னொளி நிகழ்வானது எவ்வாறு குறிப்பிடப்படுகின்றது? 

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post