Sri Lanka Coffee Festival Sri Lanka Coffee Festival - examsguide.lk

 Sri Lanka Coffee Festival 

முதன்முறையாக இடம்பெற்ற இலங்கை கோப்பி திருவிழா அவுஸ்திரேலிய

அரசாங்கத்தின் நிதியுதவியுடனான Market Development Facility (MDF)

ஆனது, இலங்கையின் கோப்பி தொழிற்துறையுடன் இணைந்துஇலங்கையின்

கோப்பிதுறையைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை

ஒன்றிணைத்து முதன்முதலாக Sri Lanka Coffee Festival

(இலங்கைகோப்பித்திருவிழாநிகழ்வை நடாத்தியிருந்தது.

இலங்கையில் தனித்துவமாக வளரும் விசேடத்துவம் கொண்ட கோப்பி மற்றும்

மீளவளர்ந்து வரும் கோப்பிக் கலாச்சாரத்தின் கொண்டாட்டத்தை குறிக்கும்

இவ்விழாவானது, இத்துறையின் மீதான அஸ்திரேலியாவின் தொடர்ச்சியான

ஆதரவை எடுத்துக்காட்டுகிறது. இலங்கை கோப்பியின் எதிர்காலம் குறித்து

கலந்துரையாடுவதற்காக, அரசாங்க மற்றும் தனியார் துறையிலுள்ள

அனைவரையும் ஒன்றிணைத்து, கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கான

வாய்ப்பை வழங்கும்வகையில்உள்ளூர் கோப்பிதுறையில் உள்ள பல்வேறு

மட்டத்திலான பங்குதாரர்களை மையப்படுத்தி இந்நிகழ்வு ஏற்பாடு

செய்ப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அரச மற்றும் தனியார் துறையைச்

சேர்ந்தவர்களுக்கு இடையிலான குழுரீதியான கலந்துரையாடல்கள், சர்வதேச

கோப்பி நிபுணர்களின் விளக்ககாட்சிகள் மற்றும் உள்ளூர் விசேட கோப்பி

வர்தக நாமங்களை காட்சிப்படுத்தும் கோப்பி எக்ஸ்போ ஆகியன

இடம்பெற்றன. நிகழ்வின் ஒருபகுதியாக, இலங்கையின் விசேடத்துவமான

கோப்பி பற்றிய MDF-Roar Media ஆவணப் படத்தின்வெளியீடு மற்றும் MDF இன்

Arabica Coffee Value Chain Analysis’  அறிக்கையும் வெளியிடப்பட்டது.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post