Flying boat - பறக்கும் படகு Flying boat - பறக்கும் படகு - examsguide.lk

 

உலகின் முதல் முறையாக பறக்கும் படகு துபாயில் அறிமுகம்





உலகின் முதல் முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும்

பறக்கும் படகு துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு

ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தி ஜெட் (The Jet) என்ற பெயருடைய பறக்கும்

படகு, சுவிஸ்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம், ஐக்கிய அரபு

 எமிரேட்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

சொகுசு படகாக உருவாக்கப்பட்டுள்ள இதில் 8 முதல் 12 பேர் வரை

பயணம் செய்ய முடியும். தண்ணீருக்கு 80 செ.மீ உயரத்திற்கு மேல் பறந்து

செல்லும். இதில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படகு மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடையது.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் இதில் இருந்து புகை போன்ற

உமிழ்வுகள் வெளியேறுவதில்லை.எனவே இந்த படகு சுற்றுச்சூழலுக்கு

மிகவும் உகந்ததாக இருக்கும் என அதன் தயாரிப்பாளர்கள்

தெரிவித்துள்ளனர்

Alain Thébault, Founder of THE JET Zero Emission: Pleased to make this announcement from Dubai, and be able to manufacture and launch ‘THE JET’, which is going to be the world’s first boat to sail without noise, waves, or emissions and capable of flying 80cm above the waters



























































Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post