புராதன இலங்கையின் வரி முறைமை புராதன இலங்கையின் வரி முறைமை - examsguide.lk

 புராதன இலங்கையின் வரி முறைமை


 கிறிஸ்துவுக்கு முன்னரான 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுப் பதிவுகள் விவசாய நோக்கங்களுக்கான நீர் நுகர்ச்சிக்காக செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் அதிகாரிகளால் அரசாங்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட வரிகள் (தகபதி, போஜகபதி) தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குகின்றன. கனியா, கன்னிகா மற்றும் அதானா ஆகிய இடங்களில் வரிகள் சேகரிக்கப்பட்டன, அதிகாரிகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மையங்களில் வரியினை அறவிட்டு வருகின்றனர். அனுராதபுர ஆட்சிக்காலத்தின் போது அந்நியச் செலாவணியின் முதன்மை மூலமாக காணப்பட்ட முத்துக்குளித்தல் இடம்பெறும் மஹத்திதவில் (மன்னார்) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வைகளின் சேகரிப்புக்கு மஹாபத்துலத்த அதிகாரிகள் பொறுப்பேற்றனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து கொடவாய துறைமுகமானதுஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்கள் மீது வரி அறவிடப்படும் மற்றொரு மையமாக விளங்கியது. கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து காணி வரிகள் அறவிடப்பட்டு வந்துள்ளதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. நகரத்திற்கு வழங்குவதற்காக தானியங்களை ஏற்றி வரும் வண்டிகளுக்கு நகரத்தின் நுழைவாயில் வைத்து வரி அறவிடப்பட்டதுடன் அத்தகைய வரி சேகரிப்புகள் பெளத்த துறவிகளுக்கு தானம் வழங்கும் மண்டபத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1660 ஆம் ஆண்டு தனது கப்பல் மூழ்கியமையால் இலங்கை கரையிலிறங்கிய போது சிங்கள அரசனால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ரொபேர்ட் நொக்ஸ்இருபது வருடங்களின் பின்னர் இலங்கை சிறையிலிருந்து பிரித்தானியாவுக்கு தப்பியோடினான். அவன் பிரித்தானியாவுக்குத் தப்பிச் சென்றதும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டபோது அவன் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருந்தான். ஆண்டொன்றில் மூன்று முறைகள் வரிகள் எவ்வாறு அறவிடப்படுகின்றன என்பது குறித்தும் அவ்வாறு சேகரிக்கப்படும் வரிகள் எவ்வாறு அரசனுக்கு திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது குறித்து விபரமாக தெரிவித்திருந்தார். ரொபர்ட் நோக்ஸ் வேறுபட்ட வரிவீதங்களில் வரிகள் செலுத்தப்படுவதை பதிவு செய்திருந்தான். இரத்தினக்கற்கள், வைன், எண்ணெய், சோளம், தேன், மெழுகு, துணி வகைகள், இரும்பு, புகையிலை, யானைத்தந்தங்கள்என்பன அந்த வகையீட்டினுள் உள்ளடங்குகின்றன. ஒருவரின் மரணத்தின் போது அறவிடும் வரியே மறல் வரியாகும் (மரண வரி). காலனித்துவ ஆட்சியின் போது பொதுமக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமைந்திருந்த வரிகள் நீக்கப்பட்டன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொழிற்பாட்டிலிருந்து நெல் வரியானது 1882 இல் நீக்கப்பட்டது . 1893 இல் கோதுமை மா, அரிசி, சீனி, புகையிலை,பருத்தி (அரசாங்க அதிபர்கள் அறிக்கை -1893, கிழக்கு மாகாணத்தில்) என்பவற்றுக்கு வரி அறவிடப்பட்டது. அனுராதபுர இராஜ்ஜியத்தின் சததிஸ்ஸ அரச வம்சத்தின் கண்டி இராஜ்ஜியத்தின் நரேந்திரசிங்க அரச வம்சத்திற்கு சில வரி வடிவங்களில் அல்லது வேறு வகைகளில் வரி விதிக்கப்பட்டமை தொடர்பில் போதுமான ஆதாரங்கள் உள்ளன. இக்காலப்பகுதிகளில் அரசினால் அவருக்கு அளிக்கப்பட்ட சேவைகளுக்கும், வரி விதிப்பனவுக்குமிடையிலும் நேரடியான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அரசரானவர் தனது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதனால் அவர் மக்களின் உற்பத்தி நிலங்களில் இருந்து ஒரு பகுதியினைப் பெறுவதற்கு உரித்துடையவராவார். அதை வைத்திருக்கும் நிலத்திற்கான நிபந்தனையாக சேவை வழங்குவதற்கான கடப்பாடு உள்ளது.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post