எந்த ஒரு வருட திகதிக்கும் கிழமை காணும் எளிய முறை எந்த ஒரு வருட திகதிக்கும் கிழமை காணும் எளிய முறை - examsguide.lk
எந்த ஒரு வருட திகதிக்கும் கிழமை காணும் எளிய முறை
கலண்டர் எதையும் பார்க்காமல் எந்த ஆண்டு மாதம் திகதியானாலும் அதற்கான கிழமையைக் காணும் எளிய மு றை இது தான். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு எண்ணும், ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு எண்ணும் கீழே தரப்பட்டுள்ளது. இவ் எண்ணை வைத்து மிகச்சுலபமாக தேவையான ஆண்டு, மாதம், திகதிக்குரிய கிழமையை காணலாம். 

 மாதத்திற்குரிய எண்
 ஐனவரி -5 
பெப்ரவரி-1 
மார்ச்-1 
ஏப்ரல்-4 
மே-6
 ஜூன்-2
 ஜூலை-4
 ஓகஸ்ட்-0 
செப்டம்பர்-3 
ஒக்டோபர்-5 
நவம்பர்-1
 டிசம்பர்-3

 கிழமைக்குரிய எண்
 ஞாயிறு-0
 திங்கள்-1 
செவ்வாய்-2 
 பு தன்-3
 வியாழன்-4 
வௌ்ளி-5 
சனி-6 

 செய்மு றை 


ஆண்டை 4 ஆல் பிரித்து வரும் தொகையை ஆண்டு ,திகதி. மாதத்திற்குரிய எண்ணுடன் கூட்டி வரும் மொத்தத்தை 7 ஆல் பிரித்தால் வரும் மிகுதியே கிழமைக்குரிய எண்ணாகும். முக்கிய குறிப்பு லீப் வருடத்தில் வரும் ஐனவரி,பெப்ரவரி மாதத்திற்கு மட்டும் ஆண்டை 4 ஆல் பிரித்து வரும் தொகையில் இருந்து ஒன்றைக் கழித்து வரும் தொகையை ஆண்டு, திகதி, மாதத்திற்குரிய எண்ணுடன் கூட்டி வரும் மொத்தத்தை 7 ஆல் பிரித்தால் வரும் மிகுதியே கிழமைக்குரிய எண்ணாகும்.

 உதாரணம்1- 18.8.1949 இற்குரிய கிழமையை காணும் மு றை 1949 யை நான்கால் பிரித்தால் வரும் தொகை 487; இதனுடன் ஆண்டு 1949, திகதி 18, ஓகஸ்ட் மாதத்திற்குரிய எண் 0 என்பவற்றை கூட்ட வரும் மொத்த எண் 2454, மொத்த எண்ணை ஏழால் பிரித்தால் வரும் மிகுதி 4, அட்டவணையின் படி நான்கிற்குரிய கிழமை வியாழனாகும். 

 உதாரணம்2- 21.02.1904 இற்குரிய கிழமையை காணும் மு றை 1904 யை நான்கால் பிரித்தால் வரும் தொகை 476; ( மிகுதி இல்லை) இது லீப் வருடம் ஆகையால் மு ன் கூறிய முக்கிய குறிப்பின் படி இதிலிருந்து ஒன்றைக் கழித்தால் 475, இதனுடன் ஆண்டு 1904, திகதி 21, பெப்ரவரி மாதத்திற்குரிய எண் 1 என்பவற்றை கூட்ட வரும் மொத்த எண் 2401, மொத்த எண்ணை ஏழால் பிரித்தால் வரும் மிகுதி 0, அட்டவணையின் படி பூ ச்சியத்திற்குரிய கிழமை ஞாயிறு ஆகும்.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post