Finance Regulations Finance Regulations - examsguide.lk

 

Finance Regulations -  நிதிப்பிரமாணங்கள்

 1) வருமான கணக்கீட்டு அலுவரை நியமிப்பவர்?

திறைசேரி செயலாளர்

 2) நிதி அமைச்சரினால் திரட்டிய நிதியிலிருந்து பணத்தை பெற்றுக் கொள்வதற்காக விசேட ஆணைச்சீட்டு வழங்கப்படுவது?

குறை நிரப்பு பிரேரணை  பாராளுமன்றத்தால் அங்கீகரிக்குமிடத்து பணத்தை பெற்றுக் கொள்வதற்காக

 3) வரவு செலவு திட்டத்தில் காட்டப்படாத எதிர்பாராத பின் நிகழ்ச்சி செலவு நிதியிலிருந்து செலவு மேற்கொள்ளப்பட்டால் செய்ய வேண்டியது? 

பூரண மதிப்பீடுகள் விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்


4) திறைசேரியின் பிரதானி யார்?

திறைசேரியின் மேலதிக செயலாளர்

 5) வகைமாற்று நடைமுறையின் போது திறைசேரி செயலாளரின் அனுமதியை பெறவேண்டியவிடத்து தொடர்பு கொள்ள வேண்டிய திணைக்களம்?

தேசிய வரவு செலவு திணைக்களம்

 6) வேறு திணைக்கள சார்பில் செலவுகளை மேற்கொள்ளும் போது அச்செலவுகள் எக்கணக்கிற்கு சாட்டுதல் செய்யப்படல் வேண்டும்?

எத்திணைக்களம் சார்பில் செலவு மேற்கொள்ளப்படுகின்றதோ அத்திணைக்கள தலைப்பு, நிகழ்ச்சித் திட்டம், செலவு விடயம் கணக்கிற்கு

 7) நிதிப்பிரமாணங்கள் 135 இல் குறிப்பிடப்பட்டிருப்பது யாது?

நிதி முகாமை தொடர்பான பொறுப்புக்களை கையளித்தல் பற்றி

 8) ஒதுக்கீட்டு கணக்கு பேரேடு பேணப்படுவதன் நோக்கங்கள்? 

மதிப்பீட்டில் உள்ளவாறு செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு

செலவிட்ட தொகையையும், மீதிகளையும் எந்நேரமும் அறிந்து கொள்வதற்கு 

திணைக்கள தலைவருக்கு நிதி முகாமையை நடாத்துவதற்கு



 9) வகைமாற்றம் செய்யக் கூடியது? 

திறைச்சேரியின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகைமாற்றம்

 10) வெளிநாட்டில் கடமை நிமித்தம் செல்லும் அரச ஊழியர் ஒருவருக்கு வழங்கக்கூடிய தற்காலிக செலவுப்படி?

வெளிநாட்டில் கழிக்கும் ஒரு நாளுக்கு 25 அமெரிக்கன் டொலர் படி

 EB Exam க்கு தயாராகின்றவர்கள் பின்வரும் விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பதோடு விடைகளை  ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள் https://www.examsguide.lk/2022/01/eb-exam-guide-1.html https://www.examsguide.lk/2022/01/eb-exam-guide-2.html https://www.examsguide.lk/2022/01/eb-exam-guide-3.html

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post