EB Exam Guide 1 EB Exam Guide 1 - examsguide.lk

EB Exam Guide - 10 Questions 

1) வருடாந்த இடமாற்றத்தின் போது அலுவலர்களுக்கு எவ்வளவு காலத்திற்கு முன்னர் அவர்களுக்குரிய இடமாற்றக்கட்டளை இடமாற்ற சபை அனுப்பி வைக்க வேண்டும்?

இரண்டு மாதத்திற்கு முன்

2) ஒரு அலுவலர் எவ்வளவு நேரத்திற்குள் அலுவலகத்திற்கு வராமை பற்றி அறிக்கையிடாதிருப்பின் பதவி வெறித்தாக்கல் கடிதத்தை திணைக்களத்தலைவர் அனுப்ப முடியும்?

24 மணித்தியாலம் கடந்த பின்னர்

3) பதவி வெறித்தாக்கல் கடிதம் வழங்கிய பின் அவர் அது தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை எவ்வளவு காலத்திற்குள் நியமன அதிகாரிக்கு வெளிப்படுத்தி அறிக்கையிட வேண்டுமென பொதுச்சேவை ஆணைக்குழுவின் அத்தியாயப் பிரிவு விளக்குகின்றது?

மூன்று மாதங்களுக்குள்

4) பதவி வெறித்தாக்கல் நடவடிக்கைக்கான நேரக்கணிப்பீட்டிற்கான ஆரம்ப நேரம்? 

அலுவலகத்திற்கு அறிக்கையிட வேண்டிய நியம நேரத்திலிருந்து

5) பதவி வெறித்தாக்கல் கடிதம் வழங்கிய பின் அவர் அது தொடர்பில் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை வெளிப்படுத்தி அறிக்கையிட்டால் அவருக்கு எந்த பதவி அந்தஸ்துடன் மீள சேவையில் சேர்த்துக் கொள்ள முடியும்? 

மீள் அமர்த்துகை நியமனம்

6) ஒரு அலுவலர் வேலை நாள் ஒன்றில் கடமைக்கு வராமை காரணமாக பல வழிகள் மூலம் சம்பந்தப்பட்ட திணைக்களத்தலைவருக்கு தெரியப்படுத்தலாமென தெரிவிக்கும் சுற்றறிக்கையின் இலக்கம் என்ன? 

24/2013


7) பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கமைய அலுவலர் ஒருவர் வராமை காரணமாக அறிக்கையிடுவதற்கு தபால் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள செயற்பாட்டுக்கு அமைச்சின் சுற்றுநிருபத்தில் பயன்படுத்தியுள்ள சொற்பத பிரயோகம்?

தொலைத்தபால் தகவல்

8) பதவி வெறித்தாக்கல் கடிதம் வழங்கிய பின் அவர் அது தொடர்பில் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை வெளிப்படுத்தி அறிக்கையிட்டால் அவரது கோரிக்கையை ஏற்று நியமனத்தை வழங்கக்கூடிய அதிகாரி? 

இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்

9) பதவி வெறித்தாக்கல் பற்றிய அறிவித்தலுக்காக பயன்படுத்த வேண்டிய பொதுச்சேவை ஆணைக்குழுவின் அதிவிசேட வர்த்தமானி 1589/30 இன் எத்தனையாவது பின்னிணைப்பு பொருத்தமுடையது?

12வது பின்னிணைப்பு


10) குறிப்பிட்ட பின்னிணைப்பில் 2ம்,3ம் வாசகங்களுக்குரிய அரச சொத்துக்களை கையளித்தல், கடன் நிலுவை செலுத்துதலில் பதவி வெறித்தாக்கப்பட்ட அலுவலர் உரிய கடமையை நிறைவேற்ற மறுத்தால் திணைக்களத்தலைவர் எடுக்க வேண்டிய நடவடிக்கை? 

பொதுச்சட்டத்திற்கமைய நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுத்தல்

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post