Raveena Sugumar goes to Norway Agder University Raveena Sugumar goes to Norway Agder University - examsguide.lk

 Raveena Sugumar goes to Norway Agder University For Research Activities 



யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மாணவியும், தற்போதைய உதவி விரிவுரையாளருமான ரவீனா சுகுமார் ஆய்வு பணிக்காக நோர்வே செல்லுகின்றார்.

நோர்வே நாட்டின்  பிரபலமான Agder பல்கலைக்கழகத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மாணவியும், தற்போதைய உதவி விரிவுரையாளருமான ரவீனா சுகுமார் ஆய்வு பணிக்காக தேர்வாகி உள்ளார்.

இவர் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தினது  பிரதிநிதியும், ஒன்றியத்தின் விஞ்ஞான பரீட்சைகள் மையத்தினுடைய வளவாளரும் ஆவார். ரவீனா அவர்கள் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை பாக்கியம் பாடசாலை, மாத்தளையிலே தொடர்ந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.


செல்வி.ரவீனா சுகுமார், யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலே இரசாயனவியல் துறையினை பயின்று முதன்மை மாணவியாக தெரிவாகியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இவரது அதீத புலமை காரணமாக ஆறு மாதத்திற்கு நடாத்தப் பட இருக்கின்ற ஆய்வு பணிக்காக தெரிவு செய்யப் பட்டு நோர்வே பயணிக்க உள்ளார்.

  செல்வி. ரவீனா சுகுமார் இந்த அற்புதமான சந்தர்ப்பத்தினால் நோர்வே நாட்டு Agder பல்கலைக் கழக விஞ்ஞானிகளுடன் பணி புரிய உள்ளார்.

Agder பல்கலைக்கழகமானது நோல்வேயின் Public University ஆகும். Agder பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டது 2007ஆம் ஆண்டிலே ஆகும்.


Website- www.uia.no

யாழ் பல்கலைக்கழகத்திலே  கல்விச் செயற்பாடுகளை திறம்பட மேற்கொண்ட படியால் 35ஆவது பட்டமளிப்பு விழாவிலே 


இரசாயவியல் இளமாணி விஞ்ஞானப் பட்டத்தினை முதலாம் வகுப்பு சித்தியுடன் First Class பெற்றுக் கொண்டதோடு 1)  இரசாயனவியல் துறையில் சிறப்புத் தேர்ச்சிக்காக திரு. அருணாசலம் மகாதேவா விருதினையும், 2) உயர் சேதன இரசாயனத்தில் சிறந்த பெறுபேற்றிற்காக பேராசிரியர் S. மகேஸ்வரன் தங்கப் பதக்கத்தினையும், 3) உயர் அசேதன இரசாயனத்தில் சிறந்த பெறுபேற்றுக்காக பேராசிரியர் இராஜேஸ்வரி மகேஸ்வரன் தங்கப் பதக்கத்தையும், 4) பெளதீக இரசாயனத்தில் சிறந்த பெறுபேற்றுக்காக திரு. சிதம்பரப்பிள்ளை கந்தையா தங்கப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்ட பெருமிதத்திற்குரிய சாதனையாளர். அவரின் கல்வி புலமையினை மெச்சும் வகையிலேயே பல்கலைக்கழகத்தின் பின்னர் உதவி விரிவுரையாளராக தெரிவாகி கற்பித்த அதே வேளை தொடர்ந்தேர்ச்சியாக கற்றல் நடவடிக்கையிலும் ஈடுபட்டதால் இந்த உயரிய கெளரவ ஆய்வு நடவடிக்கைக்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது

இவரது கல்விப் புலமையை யாழ் பல்கலைக் கழகத்தின் 32ஆவது கலைப்பீட மாணவர்கள் சார்பில் வாழ்த்தி பெருமிதம் அடைகின்றோம்.
Congratulations. இத்துடன் அறிவை தேக்காமல் தொடர்ந்தும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சாதனையாளராக வலம் வர வாழ்த்தி நிற்கின்றோம்.


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post