Inland Revenue Service Competitive Exam Inland Revenue Service Competitive Exam - examsguide.lk



Inland Revenue Service Competitive Exam - General Knowledge 













1) கிராண்ட் மாஸ்டர்- Grand Master கெளரவம் 1924ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு சுவிட்சர்லாந்து நாட்டின் Lausanne ஐ தலைமையிடமாக கொண்ட International Chess Federation னால் (Chess) சதுரங்க விளையாட்டில் கோலோச்சுபவர்களுக்கு வழங்கப் படுகின்ற World champion பட்டத்தை விட உயரிய பட்டமாகும் .. International Chess Federation தலைவராக Arkady Dvorkovich திகழ்கின்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டவர் வாழ்நாள் முழுவதும் இப்பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். 1978ஆம் ஆண்டு Grand Master பட்டம் வென்ற முதல் பெண்மணி நோனா கேப்ரின்டாஷ்விலி ஆவார். ஆண்களுடன் விளையாடி Grand Master பட்டத்தை வென்ற முதலாவது பெண்மணியாக சூசன் போல்கர் திகழ்கின்றார். சதுரங்கம் தொடர்பில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பாவனை 1838ஆம் ஆண்டிலே Bell's Life என்கின்ற விளையாட்டு வார இதழிலேயேக காணப்பட்டதாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. உலகின் 29ஆவது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டராக தெரிவு செய்யப்பட்ட 14 வயதான இந்திய நாட்டின் கோவையை சேர்ந்தவரின் பெயர் யாது? 




 2) எந்த நாடானது பூர்வக்குடி மக்களினுடைய வரலாற்றினைப் போற்றி கெளரவமளிக்கும் வகையிலல் தன்னுடைய நாட்டு தேசிய கீதத்திலே திருத்தத்தை கொண்டு வந்துள்ளது? புதிதாக சேர்க்கப் பட்ட வார்த்தை யாது?




 3) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சலிலே இடம் பெற்றுள்ள நாடுகளிலே நிரந்தர உறுப்புரிமை கொண்டுள்ள வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ள 5 நாடுகளையும் தருக? 



 4) சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக ஒக்டோபர் 11 ஆம் திகதி அனுசரிக்கப் பட்டு வருகின்றது. ஒக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் பின்லாந்து நாட்டில் ஒரு நாள் பிரதமராக பதவி வகித்த 16 வயது சிறுமியின் பெயர் யாது? 




 5) உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலை எங்கே அமைக்கப் பட்டுள்ளது? 



 6) உலகிலேயே மூன்றாவது மாபெரும் அரிசி ஏற்றுமதியாளர் என்ற பெருமிதத்தை தன்னகத்தே கொண்ட எந்த நாடு உள்நாட்டிலே ஏற்பட்ட அரிசி விலையதிகரிப்பு, ஒன்பது ஆண்டுகளில் மிக உயர்வான உள்நாட்டு விநியோகம் காரணமாக முதன் முதலாக இநேதியாவிடமிருந்து அரிசியை வாங்கிய துரதிஸ்டமான சம்பவம் வரலாற்றில் பதிவாகியது? 



 7) உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான உலக பொலிஸ்காரனாக திகழும் அமெரிக்க நாட்டிலே காணப்படும் மக்கள் பிரதி நிதிகள் சபைத் தலைவராக நான்காவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவரின் பெயரைக் குறிப்பிடுக?






 8) Cornell University, INSEAD Bussiness School மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேடமான நிறுவனமாக திகழும் World Intellectual Property Organizationஇனால் 2020 ஆண்டு வெளியிடப்பட்ட The Global Innovation Index தரவரிசையில் இலங்கைக்கான இடம் யாது?



 9) புகையிரதங்களே இலங்கை நாட்டை பொறுத்த வரையில் விரைவாகவும், மிகக் குறைவான செலவோடும் பயணிக்க உகந்த ஆகச்சிறந்த ஊடகம். போக்குவரத்து நெரிசல் காரணமாக ரயில் போக்குவரத்தே பெரிதும் மக்களால் விரும்பப் படுகின்றது உயிரி எரிவாயுவினுடைய உதவியோடு இயங்குகின்ற பயோ அல்ட்ரா ரயிலை எந்நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்?





  10) உலகில் அபாயகரமான நாடுகள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டு வருகின்றது யாவரும் அறிந்ததே. 2020 ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட World Risk Reportஇல் இலங்கை எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?






 11) சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான தினமாக நவம்பர் மாதத்தில் 25ஆம் திகதி அனுசரிக்கப் படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையிலே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக Orange the World என்கின்ற அமைப்பினது பிரதி நிதியாக தெரிவு செய்யப் பட்ட உலக அழகிப் பட்டத்தை சுவீகரித்த இந்திய நடிகையின் பெயர் யாது?




 12) ஏனைய சமூக இனத்தவர்களை போல தாம் விரும்பிய வகையில் ஆடைகளை அணியாமல் மார்க்க நெறிக்கு கட்டுப்பட்டு கண்ணியமான ஆடைகளை அணிந்து வருகின்றனர். முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையுடன் கூடிய பொலிஸ் சீருடையை முதன் முதலில் அறிமுகப் படுத்திய நாடு யாது? 




 13) உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமிதத்தை கொண்டிருந்த 84வது வயதில் காலமான பிரதமரின் பெயர் யாது? எந்த நாட்டவர்? 




 14) நியூசிலாந்து நாட்டிலே அமைச்சரான முதல் இந்தியர் என்கின்ற பெருமிதத்திற்குரியவர் யார்? இவர் கேரள வம்சாவளியை சேர்ந்தவராவார். 





 15) டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளை கொண்ட கிரிக்கெட் விளையாட்டின் பார்வையாளர்களை கவரச் செய்து ஆட்டத்தை சூடு பிடிக்க வைக்க இருபதுக்கு இருபது போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த சில நாடுகள் T-20 Prmier Leagueகளை நடாத்தி வந்தாலும் Indian T-20 Premier League பெரிதளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வண்ணம் உள்ளது. இருப்பினும் கொரோனா பெரும் தொற்று பேரிடர் காலத்திலும் ஒரு சில Matchகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வீரர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டமையினால் இடைநடுவில் கைவிடப்பட்டது. 409 Twenty Twenty Matchகளில் விளையாடி 1000 சிக்ஸர்களை அடித்த முதலாவது வீரர் என்ற உலக சாதனையை தன்வசப் படுத்தியுள்ள கிரிக்கெட் நட்சத்திரம் யார்?




 16) விவாகரத்தை சந்தித்த உலக பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான ரஸ்ய நாட்டினது ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மக்களின் ஆணையைப் பெற்று எத்தனையாம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க ஏற்பாடு மேற் கொள்ளப்பட்டு உள்ளது? 






 17) சீன நாட்டில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகாரம் அளித்தமையால் சீன அதிபராக 2035 ஆண்டு வரை பதவியில் தொடரவுள்ள Central Committee of the Communist Party of China General Secretaryயாகவும், Military Chairman ஆகவும் உள்ள ஜனாதிபதி யார்? 




 18) கடல் பகுதியில் 14000 சதுர அடிப் பரப்பிலே அமைக்கப்பட்ட உலகிலேயே மிகப் பாரிய செயற்கையான நீரூற்றான The Pointe ( World Largest Dancing Fountain )என்ற நீருற்று திறக்கப் பட்ட நாடு யாது? 




 19) விவசாயிகளுக்கு கெளரவமளிக்கும் வகையில் வட்டி இல்லாத வங்கிக் கடனைப் பெறுவதற்காக தங்களுடைய நிலத்தில் காணப்படும் மரங்களை அடகு வைக்கின்ற தனக்கேயுரிய தனித்துவமான திட்டம் அமுலில் உள்ள இந்திய மாநிலத்தை குறிப்பிடுக? 





 20) நாட்டு மொத்த மக்கள் சனத்தொகையிலௌஊட்டச் சத்து குறைபாடுள்ளவர்களின் வீதம், 5 வயதுக்குட்பட்ட உடல் எடை குறைவான குழந்தைகளின்வீதம் + இறப்பு வீதத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க நாட்டில் இருந்து செயல்படும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தினால் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள உலக பட்டினிக் குறியீட்டு தரவரிசையிலேயே இலங்கைக்கான தரவரிசை யாது?



  21) உலகளாவிய ரீதியிலே வறுமை தொடர்புடைய விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியிலே இருந்து மக்களை விடுவிக்க ஐ.நா சபை 1992ஆம் ஆண்டிலிருந்து உத்தியோக பூர்வமாக உலக வறுமை ஒழிப்பு தினமாக எத்தனையாம் திகதி அனுசரிக்கப்படுகின்றது?



 22) யாருக்கு கெளரவமளிக்கும் வகையில் அவரின் பிறந்த நாளான ஒக்டோபர் 15ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் 2010 ஆம் ஆண்டு உலக மாணவர்கள் நாளாக அறிவிக்கப் பட்டு கொண்டாடப் பட்டு வருகின்றது?





 23)களிமண் ஆடுகளங்களில் பல வெற்றிகளைப் பெற்றதால் King of Clay களிமண் தரையின் மன்னன் என சிறப்பித்துக் கூறப் படும் ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் யார்? 




 24) தாய்வான் நாட்டினை தன்னுடைய ஒற்றை சீனக் கொள்கையின் கீழான ஒரு மாகாணமாகவே சீன நாடு உரிமை கோருகின்றது. கிழக்கு ஆசிய நாடான தாய்வானின் தலைநகரம் யாது?




 25) கோடை கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் 2024ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்திலும், 2028ஆம் வருடத்திலே அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலும் நடை பெறவுள்ளது. 2032ஆம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக்ஸ் மற்றும் பரா ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் எந்த நாட்டில், எந்நகரத்தில் நடை பெறவுள்ளது? 





 26) மேக விதைப்பு- Cloud Seeding என்கின்ற செயற்கையான மழைப் பொழிவை இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனுபவித்திருக்க மாட்டார்கள். செயற்கையான மழைப் பொழிவை ஏற்படுத்துவதற்காக வானிலையை மாற்றுகின்ற தொழினுட்பமே மேக விதைப்பாகும். வளிமண்டலத்திலே முற்கூட்டியே மேகங்கள் உருவாகி இருக்கின்ற போது மட்டுமே Cloud Seeding தொழில் நுட்பம் செயற்படும். மேக விதைப்பு தொழில் நுட்பத்தின் மூலம் செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்திய முதலாவது பாரசீக வளைகுடா நாடு எது?




 27) மரண தண்டனையானது ஒரு மனிதரின் உயிர் வாழ்வை பறிக்கின்ற தண்டனையாகக் கருதப் படுகின்றது. பழங்கால தண்டனை முறைகளாக தலையை, உடல் உறுப்புக்களை துண்டித்தல், விஷம் கொடுத்தல், யானையை மிதிக்க வைத்து கொல்லுதல், கூர்மைப் படுத்தப் பட்ட மரம் ஒன்றிலே ஆசன வாய் வழியாக ஏற்றுகின்ற கழுவேற்றுதல், சிலுவையேற்றுதல் என்பவை காணப் பட்டன. தற்போது நடைமுறையில் உள்ள மரண தண்டனை முறைகளாக தூக்கிலிடல், துப்பாக்கியால் சுடல், கற்களால் அடித்து கொல்லல், மின்சாரத்தை பாய்ச்சல், விஷ மருந்து கொடுத்தல் என்பன காணப் படுகின்றன. ஒருவரின் உயிரை இயற்கைக்கு மாறாக பறிப்பதை தடுக்கு முகமானAgainst Death Penalty - உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படும் தினம் யாது? 




 28)பரப்பளவில் ஏழாவது இடத்தில் உள்ள, உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்திய நாடு அதி பிரயத்தனம் மேற் கொண்டு வருகின்றது. இந்தியாவின் தலைநகரமாக புது டில்லி திகழ்கின்றது. பெரிய நகரமாக மும்பை விளங்குகின்றது. இந்தியாவின் முதல் எதிர்ப்பு ஏவுகணையின் பெயர் யாது? 



 29) தன்னிகரில்லாத ஒப்பற்ற ஆய்வு, ஆராய்ச்சிகளை மேள்கொண்டவர்களுக்கு, பயன் விளைவிக்கக் கூடிய தொழில் நுட்பங்களை, கருவிகளை, உபகரணங்களை கண்டு பிடித்தவர்களுக்கும், சமுதாயத்திற்கு அரும் பெரும் சேவையாற்றியவர்களுக்கும் உலகளாவிய ரீதியில் வழங்கப் படுகின்ற மதிப்பிற்குரிய விருதே நோபல் பரிசாகும்.1895ஆம் ஆண்டு அல்பிரட் நோபல் என்பரால் ஆரம்பிக்கப் பட்டது. நோபல் பரிசு திரும்ப பெறக் கூடியதல்ல. நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கமும், Nobel அறக் கட்டளையின் அந்த வருட வருமானத்தை பொறுத்தே பரிசுப் பணம் வழங்கப் படுகின்றது. Xray கதிர்களை கண்டு பிடித்ததற்காக பெளதீகத்திற்கான முதல் நோபல் பரிசை வென்றவராக Wilhelm Roentgen திகழ்கின்றார். 2020 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற அமைப்பு யாது?






  30) உலக வங்கியானது வளர்ந்து வருகின்ற நாடுகளினுடைய முதலீட்டுத் திட்டங்களுக்காக கடன்களை,நிதியுதவிகளை மேற்கொண்டு வருகின்ற சர்வதேச அமைப்பாகும்.உலக வங்கியினுடைய உத்தியோக பூர்வ நோக்கம் நடுகளின் தீவிர வறுமை நிலைமையினை குறைத்தலாகும்.1944ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்டது. Washington DCயில் அமைவிடம் பெற்றுள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்ட மனித மூலதன குறியீட்டில் இலங்கை எத்தனையாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டது?




 31) சர்வதேச புக்கர் பரிசு எனப்படுவது யாதெனில், வேற்று மொழியில் எழுதப் பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டு இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ வெளியிடப்படுகின்ற நாவலுக்கு வழங்கபே படுகின்ற விருது ஆகும். மிக இளம் வயதிலேயே ( 29 வயது) 2020 ஆம் ஆண்டு Discomfort of Evening என்ற நாவலுக்காக சர்வதேச புக்கர் பரிசு பெற்ற டச்சு எழுத்தாளர் யார்? 





 32) World Health Organization ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களில் ஒன்றாகும். சர்தேச பொதுச் சுகாதார ஒழுங்கமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய அதிகாரம் பெற்ற அமைப்பாகும். 1948ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட WHO நிறுவனத்தின் தலைமையகம்- சுவிஸ்ஸர்லாந்து ஜெனிவாவில் அமைவிடம் பெற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பு இறுதியாக எந்த. கண்டத்தை போலியோ நோய் இல்லாத கண்டமாக அறிவித்திருந்தது? 




 33) International Cricket Councilஆல் வழங்கப் படுகின்ற Hall of Fame விருது ஓய்வு பெற்று குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப் படுகின்றது. ICC Hall of Fame 2020 விருதுகள் மூவருக்கு வழங்கப்பட்டது. ICC Hall of Fame 2020 விருதினை வென்ற தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக் காரரின் பெயர் யாது?




 34) ICC Hall of Fame 2020 விருதினை வென்ற இந்திய நாட்டின் புனே நகரத்தில் பிறந்த அவுஸ்ரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவி யார்?






 35) ICC Hall of Fame 2020 விருதினை வென்ற ஆசியாவின் பிராட்மேன் என அறியப்பட்ட பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் யார்?





 36) இலங்கையைப் பார்த்து வியந்து இலங்கை நாட்டைப் போல அபிவிருத்தியடையச் செய்வோம் என்று சொல்லி இன்று இலங்கை நாட்டை விட பன்மடங்கு விருத்தியடைந்து அபிவிருத்தியில் உச்சம் தொட்ட சிங்கப்பூர் நாட்டின் தலைநகரத்தின் பெயரும் சிங்கப்பூர் தான். 1965 ஆம் ஆண்டு எந்த நாட்டிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்றது?





  37) தென் அமெரிக்காவிலே மிகவும் பெரியதும், அதிகளவு சனத்தொகை கொண்ட நாடான பிரேசில் நாட்டில் தெரு நாய் ஒன்றை தத்தெடுத்து டக்சன் ப்ரைம் என்ற பெயருடன் நாய்க்கு பணியாளருக்கான அடையாள அட்டை வழங்கி கார் விற்பனையாளர் பணியினை வழங்கிய கம்பனியின் பெயர் யாது?



 38) இலங்கைக்கே கடன் வழங்குமளவு முன்னேறியுள்ள பங்களாதேஸ் நாடு எந்த நாட்டிடம் இருந்து 10 டீசல் ரயில் எஞ்சின்களை கடன் உதவித் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொண்டது?




 39) போர்ப்ஸ் வெளியிட்டுள்ள Real Time பில்லியனர்ஸ் பட்டியலில் உலகின் முதலாவது பணக்காரர் என்ற பெருமிதத்தை தன்வசம் கொண்டிருப்பவரின் பெயர் யாது? 




 40) தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளுகின்ற செயலிகளில் முன்னணியில் தனக்கேயுரிய தனித்துவமான இடத்தை கைப்பற்றியிருக்கின்ற வட்ஸ் அப்ஸ் நிறுவனத்தை 2014ஆம் ஆண்டு பிரபல சமூக வலைத்தளமான Facebook நிறுவனம் கையகப் படுத்தியது. வட்ஸ் அப் செயலி பயனாளர்களின் விபரங்களை Facebook நிறுவனத்தின் பிற செயலிகளோடு பகிர்வதாக குற்றம் சாட்டி எந்த நாடு 225 மில்லியன் யூரோ அபராதப் விதித்துள்ளது? 





 41) கிழக்கு ஆபிரிக்காவின் மிக முக்கிய நாடாக திகழும் எந்த நாட்டுடனான இலங்கை தூதரக தொடர்புகளின் 50 வருடப் பூர்த்தி 2020ஆம் ஆண்டு முழுமை அடைந்தது? 




 42) டோக்கியோவில் நடாத்தப்பட்ட பரா ஒலிம்பிக் ஈட்டியெறிதல் போட்டியில் உலக சாதனையை நிலை நாட்டி, பரா ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் தடவையாக இலங்கை நாடு சார்பாக தங்கப் பதக்கத்தை வேன்ற சாதனையாளனுக்கு 5 கோடி ரூபாப் பணப்பரிசினை வழங்க இலங்கை விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது. தங்கப் பதக்கத்தை பெற்ற சாதனையாளனின் பெயர் யாது? 




 43) ஆசிய ஆணழகன் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கையர் யார்?




 44) 2021 ஆம் ஆண்டு இலங்கை நாட்டிலே பொலிஸ் சேவையானது ஆரம்பிக்கப்பட்டு 155 ஆண்டுகள் பூர்த்தியடைந்தது. இலங்கை பொலிஸ் சேவையானது நாட்டிலே சட்டத்தை, ஒழுங்கை திறம்பட பாதுகாத்து பேணிச் செல்லுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றி வருகின்றது. சமுதாயத்தின் நல்லிணக்கத்திற்கு குந்தம் விளைவிக்கும் குற்றச் செயல்களை இல்லாது ஒழித்தல், போதைப்பொருள் பயன்பாட்டை முற்றாக தடுத்தல், இலஞ்ச,ஊழல் ஒழிப்பு இது போன்ற இன்னோரன் கடமைப் பொறுப்புக்களை 24 மணித்தியாலம் முழுவதும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு உடையவர்களாக திகழ்கின்றார்கள். இலங்கையின் முதல் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரின் பெயர் யாது?





  45) 1947 ஆம் ஆண்டு கடமையை பொறுப்பேற்ற இலங்கையைச் சேர்ந்த முதலாவது பொலிஸ் மா அதிபர் யார்? 


 46) ஒருவருடைய மரணத்தின் போது முன்னைய காலங்களில் அறவிடப்பட்ட மரண வரி எவ்வாறு அழைக்கப் பட்டது?



 47) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே தொழிற்பாட்டில் இருந்த அறவிடப்பட்ட நெல் வரியானது எத்தனையாம் ஆண்டு நீக்கப் பட்டது? 



 48) இலங்கை நாட்டிலே கிறிஸ்துவுக்கு முன்னரான காலப் பகுதியில் அறவிடப் பட்ட வரிகளை குறிப்பிடுக? 



 49) நல்லாட்சி அரசாங்கத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த பிரதமர் கெளரவ மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மேன்மை மிகு கோட்டபாய ராஜபக்ச சகோதர்களால் நீக்கப்பட்ட வரிகள் யாவை 




 50) உலக உணவு நாள் எப்போது கொண்டாடப் படுகின்றது?




 51) உலக வங்கியினால் வெளியிடப்படுகின்ற Human Capital தரவரிசைப் பட்டியலில் குடும்ப ஆட்சி நடத்தப்படுகின்ற இலங்கை நாட்டின் இடம் யாது? 




 52) பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவிகளின் உயர் கல்விச் செயற்பாடுகளினை ஊக்குவிக்குமுகமாக மலாலா யூசுப் சாய் கல்வி உதவுத் தொகைக்கு அமெரிக்காவின் செனற் சபையானது அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச மலாலா தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது? 





 53) தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியை நடாத்தி வருகின்றார். ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திருநங்கை வென்ற ஆச்சரியமூட்டும் சம்பவம் அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முதலாக இடம் பெற்றது. அவரின் பெயர் யாது? 




 54) உலக குறைந்த நடுத்தர வருமானம் ஈட்டுகின்ற நாடுகளினுடைய கண்டு பிடிப்பு தொடர்பான தரவரிசைப் பட்டியலில் இலங்கை நாடானது எத்தனையாவது இடத்தினைப் பெற்றுள்ளது? 





 55) இலங்கை நாட்டிலே நிதியமைச்சின் கீழே உள்ளடங்குகின்ற திணைக்களங்களின் எண்ணிக்கை? அவை யாவை?





 56) உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது இலங்கை நாட்டிற்கு கிட்டத்தட்ட 75% வருமானத்தை ஈட்டித் தருகின்றது. Inland Revenue Department தற்போதைய Commissioner General அவர்களின் பெயர் யாது?





 57) இலங்கை நாட்டிற்கு வருமானத்தை பெற்றுத் தருகின்ற திணைக்களங்களின் பெயர்களை குறிப்பிடுக?



 58) உள் நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பயன்படுத்தப்படும் RAMIS தொழினுட்பத்தின் விரிவாக்கம் யாது? RAMIS தொனுட்பத்தினை இலங்கையிலே அறிமுகம் செய்த நாடு எது? 





 59) சர்வதேச வர்த்தகத்தில் உலக நாடுகள் தமது சட்ட ரீதியான எல்லைக்குள் வரி ஏய்ப்பு, வரி மோசடி, வரி செலுத்தாமல் தப்பித்தல் போன்றவற்றில் ஈடுபடாமலிருக்க இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்கள் சர்வதேச முதலீட்டினை, மூலதனத்தை நிபுணத்துவத்தை, சிறப்பு தேர்ச்சியை,நவீன தொழில் நுட்பத்தினை கவருவதில் பெருமளவு பங்கினை நல்குவதால் முக்கியத்துவம் வாய்ந்தவையாக திகழ்கின்றன. இதனால் இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒரு நாட்டில் வரி செலுத்தியவர் மீண்டும் தன்னுடைய சொந்த நாட்டிலோ, வசிக்கின்ற நாட்டிலோ வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப் படுகின்றார். இலங்கை நாட்டுடன் இரட்டை வரி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை?




  60) CIGAS என்பதன் விரிவாக்கம் யாது?

1 Comments

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

  1. 1.Achirya Mittal
    2.Australia,Advance Australia Fair
    3.UK,USA,China,Russia,France,
    4.Aava Murto
    5.Singapore
    6Vietnam
    7.
    8.89
    9.UK
    10.74
    11.Manushi Chiller
    12.Turkey
    13.Bahrain,Khalifa Bin Salman
    14.Priyanka Radhakrishnan
    15.Chirsh Gayle
    16.2024
    17.Xi pIng
    18.Dubai
    19.
    20.64
    21.Oct 16
    22.Abdul Kalam
    23.Rafeal Nadal
    24.Taipei City
    25.Brispen Australia
    26.UAE
    27.Oct 10
    28.
    29.World Food Programme
    30.74
    31.Mariek Lucas
    32.Asia
    33.Jacues Khallis
    34.Usa Slhalekar
    35.Shaheer Abbas
    36.Malaysia
    37
    38. India
    39.Jeff Bezoz
    40.Ireland
    41.Vietnam
    42.Dinesh Priyantha Herath
    43
    44. GWR Campell
    45.Richard Aluwihare
    46.
    47
    48.
    49.NBT
    50.Oct 17
    51.74
    52.July 12
    53.
    54.88
    55.
    56.HMW bandara
    57
    58 China
    59
    60

    ReplyDelete

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post