73rd Emmi Awards 2021 73rd Emmi Awards 2021 - examsguide.lk

 எம்மி விருதுகள்

செப்டம்பர் 19 2021 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ்,கலிபோர்னியா அமெரிக்காவில் நடைபெற்றது

73ஆவது எம்மி விருதுகள்

அமெரிக்க நிகழ்ச்சி தயாரிப்புத்துறையினரை கெளரவிப்பதற்காக சிறந்த தொலைக்காட்சி தொடர், நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்படும் விருதாகும்.

திரைப்படங்களுக்காக வழங்கப்படும் அக்கடமி  விருது,இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதைப் போன்றது.

http://www.emmys.tv/awards

விளையாட்டு,செய்தி ஆவணப்படுத்தல்,வணிகம்,அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான சர்வதேச விருது, தொழில்நுட்பம்,பொறியியலுக்கான விருது என எம்மி விருதுகள் வழங்கப்படுகின்றன.

The Handmaid's Tale - 21 Awards களுக்காக பெயர் குறிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் எதையும் வெல்லவில்லை.

The Crown தொடர் சிறந்த தொடர், சிறந்த நடிகை, சிறந்த நடிகன் உட்பட ஏழு விருதுகளை பெற்றுக்கொண்டது.

சிறந்த நாடகத் தொடருக்கான விருது Netflix OTT தளத்திலே ஒலிபரப்பாகும் பிரித்தானியா ராணி 2ம் எலிசபெத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட The Crown நாடகத் தொடருக்கு வழங்கப்பட்டது.

Olivia Colman 2ம் எலிசபெத் ராணியாக ஆகச்சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தியமையால் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுக் கொண்டார்.

Josh O'Connor இளவரசர் சர்ள்ஸ் ஆக நடித்து சிறந்த நடிகருக்கான நாடகத் தொடர் விருதினை வென்றெடுத்தார்.

Tobias Menzies இளவரசர் பிலிப் அவர்களின் வேடத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான விருதினை பெற்றெடுத்தார்.

Gillian Anderson இரும்புப்பெண் என அழைக்கப்படுகின்ற மார்க்ரட் தட்சர் முன்னாள்  பிரதமராக நடித்து சிறந்த நாடக துணை நடிகையாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post