World Book Day World Book Day - examsguide.lk

 உலக புத்தக தினம்




  >

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.





https://drive.google.com/folderview?id=1cKmh4s_-3OVSUPykhg4zFnrYeHhk0Knn



இன்றைய சந்ததியினர் மத்தியில் புத்தகங்களை நேசிக்கும் தன்மை வெகுவாக குறைந்து விட்டது எனலாம்... முகநூல் வலைத்தளங்களோடே பொழுதை கழித்துக் கொண்டிருக்கின்றோம்... புத்தகங்களின் அருமைத்தன்மையை உணர்த்த இலத்திரனியல் வடிவ புத்தகங்கள் கூட தோற்றம் பெற்றிருக்கின்றது...

பயன்படுத்தாதது யார் தவறு? 


மனித வாழ்க்கைச் சக்கரத்தில் புத்தகங்கள் எந்தளவு அத்தியவசியமானவொன்று என்பதோடு அதன் மூலம் மனித அறிவை விருத்தியடைய செய்யக் கூடாது என்று நூலகங்களுக்கு தீக்கொளுத்தி அழித்த கசப்பான காழ்ப்பான சம்பவங்களும் இடம் பெற்றது என அறிந்து புத்தகங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

புத்தகங்களைப் போன்ற நல்ல நண்பன், ஆகச் சிறந்த ஆசான் இருக்க முடியாது. யாரெல்லாம் பல்கலைக்கழக கல்வியின் பின்னரும் புத்தகங்களை தலை குனிந்து நேசிக்கின்றார்களோ தலை நிமிர்ந்து வாழலாம் என பலர் நிரூபித்த வண்ணம் உள்ளனர்.

புத்தகங்களை விலை கொடுத்து வாசிக்கும் பழக்கம், நூலங்களில் போய் தேடி வாசிக்கும் பழக்கம் என்பன இயந்திரமயமான நவீன உலகில் அரிதாகிக் கொண்டு வருகின்றன. அதற்கு மாற்றீடாக Online ல யே புத்தக கொள்வனவு, Online வாசிப்பு, PDF வடிவ புத்தக தரவிறக்கம் என இலத்திரனியல் புத்தகங்கள் வியாபித்திருக்கின்றன.

ஒரு இனத்தை வேரோடு சாய்க்க வேண்டுமானால் வரலாறுகளை கடத்தும் புத்தகங்களை பராமரித்து பாதுகாக்கும் நூலகங்களை அழிக்க வேண்டும். அதை மிகச்சிறப்பாக நடைமுறைப் படுத்த இலங்கையில் காடையர்களால் யாழ்ப்பாண நூலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான நூல்களை நெருப்பிற்கு இரையாக்கினார்கள். அந்த ஆறாத ரணங்களே இன்றும் கூட வடக்கு மாகாணம் கல்வியில் பின்தங்கி நிற்க காரணமாயிற்று.
இருப்பினும் சிறுக சிறுக புத்தகங்களை சேர்த்து நூலகத்தை மீளக் கட்டியெழுப்பினாலும் அழிவடைந்த வரலாற்று ஆவணங்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் பெற முடியாமலே போயிற்று. இந்த இலத்திரனியல் புத்தகங்கள் அந்தக் காலத்திலே இருந்திருந்தால் எத்தனை நலமாக இருக்கும்.

இன்றைய சந்ததியினர் நூலகங்களில் போய் புத்தகங்களோடு நேரம் செலவிடுவது அரிதாயுள்ளது. தத்தமது நேரங்களை முகநூலில் வீணாக கழிக்கவே பயன் படுத்தி வருகின்றனர். தமது புகைப்படத்தையோ ஏதாவது புகைப்படத்தை Post ஆக போட்டு விட்டு அதற்கு எத்தனை லைக்ஸ், எத்தனை கொமண்ட் வருகின்றது என்று நிமிடத்திற்கு நிமிடம் பார்த்த படி காலத்தை கழிக்கின்றனர். அதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு ஏற்றாற் போல தாங்களும் பிரதியுத்தரம் வழங்குவதோடு யாராவது எதிர் மறையாக பின்னூட்டம் இட்டால் அவர்களை தாக்கும் வண்ணம் அவமானப் படுத்தும் வண்ணம் மறுமொழிகளை வழங்குவது தான் புத்திசாலித்தனம் என எண்ணி முகநூலிலயே தங்கள் நேரங்களை கழிக்கின்றனர். அப்படி பழக்கப் படுத்தப்பட்டவர்களால் எப்படி கல்வியில் சாதிக்க முடியும்?

ஆக இனியாவது வடக்கு, கிழக்கு மலையக மாகாணங்கள் கல்வியில் முன்னிலை வகிக்க நேரம் ஒதுக்கி படிக்க ஊக்கப்படுத்துங்கள் புத்தகங்களை நேசிக்க கற்றுக் கொடுங்கள்.

தூக்குத்தண்டனை கைதியான பகத்சிங் தூக்கிலிடுவதற்கான நேரம் வந்த போது ஜெயிலர் வா என அழைத்த போது, தூக்கில தானே போடப் போறீங்க? இன்னும் சிறிது நேரம் தாருங்கள்.. புத்தகத்தை வாசித்து முடித்து விட்டு வருகின்றேன் என்றானாம். புத்தகத்தை முத்தமிட்டபடி தூக்குக்கயிரை ஏற்றுக் கொண்டவர் புத்தகங்களை ஏன் நேசிக்க வேண்டும் என்று சொல்லிச் சென்றிருக்கின்றார்.

அறிஞர் அண்ணா வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வாசித்து முடிக்க இன்னொரு நாள் தேவை. Operationஐ நாளை தள்ளிப் போட முடியுமா? என்று கோரிக்கை விடுத்து தள்ளிப் போட்டவர்.

இப்போது கூட பல்கலைக்கழக படிப்பை முடித்து விட்டோம் தானே? என பட்டதாரிகள் புத்தகத்தை தூக்கி எறிய முடியாது. தூக்கி எறிந்தால் வேலை தாருங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வீதிகளில் இறங்கி போராட்டம் செய்ய வேண்டி வரும்.

அந்த அவல நிலையை தவிர்ப்பதற்காக போட்டிப்பரிட்சைகளுக்குரிய பாடங்களை சித்தியடைய புத்தகங்களை, Notes, Tuites , இலத்திரனியல் புத்தகங்களை தேடித் தேடி படிக்க வேண்டி இருக்கின்றது. வேலை கிடைத்தவுடன் புத்தகங்களை தூக்கிப் போட முடியாது. மீண்டும் வினைத்திறன் தடை தாண்டல் போட்டிப் பரிட்சை, திணைக்களப் பரிட்சை என்றெல்லாம் படிக்க வேண்டியிருக்கின்றது. தீர்மானம் எடுக்க கூடிய உயர் பதவி நிலை உத்தியோகத்தர் என்றால் ஏற்றுக் கொள்ளப்பட்ட Master Degreeஐ படிக்க வேண்டியிருக்கின்றது. ஆக வாழ் நாள் முழுவதும் புத்தகங்களை நேசிக்கும் வண்ணம் வாழ்க்கை வடிவமைக்கப் பட்டுள்ளது.

புத்தகங்கள் எம் வாழ்க்கையையே மாற்ற கூடிய திறன் படைத்தவை. புத்தகங்களை படிப்பதனால் கற்பனை திறன் சிந்திக்கும் ஆற்றல் என்பன வளரும் இவை போட்டி பரீட்சைகளுக்கு உதவும் என்பதில் மாற்று கருத்தில்லை. சிறு வயதிலிருந்தே வாழ்வியலோடு பின்னிபிணைந்து காணப்படுகின்றன. சில புத்தகங்கள் தடைகளை எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறுகின்றன.

புத்தகங்கள் அநாதை என்ற உணர்வை நீக்குகின்றன. அதாவது நான் தனியாக இருக்கின்றோம் என்ற உணர்வை இல்லாது ஒழிக்கின்றது. சில வரலாற்று நூல்கள் இன்னும் மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது பற்றி கூறுகின்றன. மனதிற்கான உத்வேகத்தையும் சந்தோசத்தையும் கொடுக்கின்றன.

பணத்தாள்களில் கூட காகிதப்பயன்பாட்டை ஸ்வீடன் போன்ற நாடுகள் நிறுத்தி முற்றிலும் இலத்திரனியல் மயமாகினாலும் புத்தகங்களின் காகிதப் பயன்பாட்டை குறைப்பது என்பது இயலாத விடயம் தான் போல இலங்கை போன்ற நாடுகளுக்கு. பாடசாலைக் கல்வி முறை பாடப்புத்தகங்களை அடியொற்றியே கற்பிக்கப் படுகின்றன. இலத்திரனியல் மயத்தை பாடநூல்களில் திணிக்க முடியாது திண்டாடுகின்றார்கள்.

தொழில்நுட்பவியலானான வருவது சாத்தியமான ஒன்று ஏன் என்றால் அதற்கேற்ற வினைத்திறனான கல்வி அறிவு இங்கு கொட்டி கிடக்கின்றது ஆனால் ஒரு எழுத்தாளனான கதாசிரியனான வருவது அவ்வளவு இலேசான காரியம் அன்று. அதற்கு மிக திறமையான அறிவு அற்புதமான கற்பனை சக்தி இருக்க வேண்டும். அதற்கு நிறைய புத்தகங்களை வாசித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

அன்று நடைபெற்ற வரலாறு பற்றி எமக்கு தெரிய வாய்ப்பில்லை எனவே வரலாற்று நூல்களை படிக்கும் போது அன்றைய கால வாழ்வியல் நாகரீகம் உணவு பழக்க வழக்கங்கள் பண்பாடு என்பன பற்றி தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆட்சி முறைகள் எதிரிகளை கையாண்ட திறன் என்பன எமது வாழ்க்கையிலும் தேவையானவையாகவே காணப்படுகின்றன.

புத்தகங்கள் என்றால் வெறுமனே பாட புத்தகங்களை படிப்பதல்ல சிறுகதை நாவல்கள் சஞ்சிகைகள் போன்றவற்றை படிப்பதனால் எமக்கு மன மகிழ்ச்சி கிடைக்கின்றது. எதனையும் துணிந்து செய்ய கூடிய ல்லமையை நூல்கள் தருகின்றன. எம் முன்னோர்கள் கூட புத்தகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். தாம் செல்லும் இடமெல்லாம் புத்தகங்களை தம்முடன் எடுத்து சென்றார்கள். தாமும் நிறைய புத்தகங்களை எழுதினார்கள். அவர்களது புத்தகங்களில் நிறைய நல்ல கருத்துக்களை மக்களுக்கு சென்னார்கள்.

நூல்களை கற்பதனால் யாரும் நட்டம் அடைய போவதில்லை. மன தைரியம் பிறக்கின்றது. பாடசாலை கல்வியின் போதும் பல்கலைகழக கல்வியின் போதும் புத்தகங்களை எடுத்து படித்த நாம் அதற்கு பிற்பட்ட காலத்தில் புத்தகத்தை தொட்டு கூட பார்ப்பதில்லை. அவ்வாறு ஆர்வம் இல்லாது போனமைக்கான காரணம் என்ன இனி புத்தகங்கள் எமக்கு தேவையில்லை என்ற எண்ணம் புத்தகங்கள் வாசிப்பதற்கு வயதெல்லைகள் கிடையாது. காந்தி நேரு பெரியார் போன்றோர் இறக்கும் வரை புத்தகத்தை நேசித்தவர்கள்.

பல வகையான நூல்கள் காணப்படுகின்றன சிறுகதைகள், நாவல்கள் ,சஞ்சிகைகள் , இலக்கியங்கள், ஆங்கில நூல்கள் வேற்று மொழி நூல்கள் மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் என பல வகையான நூல்கள் காணப்படுகின்றன. இவற்றை கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்து வைத்தால் அது புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆசை எம்முள் வரும். நேரம் கிடைக்கிம் போதெல்லாம் புத்தகங்களை வாசிப்போம். மற்றவர்களையும் வாசிப்பு பழக்கத்திற்கு கொண்டு வர முடியும். வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது உண்மை. வாசிப்பு மனிதனை பூரணம் அடைய செய்கின்றது.

உலக புத்தக தினம் வருடாந்தம் சித்திரை 23ம் திகதி UNESCO நிறுவனத்தினால் அனுசரிக்கப் படுகின்றது. உலக புத்தக தினம் 1995மாண்டில் முதலில் கடைப்பிடிக்கப் பட்டது. இங்கிலாந்து நாட்டில் பங்குனி மாத முதல் வியாழன் புத்தக தினத்தை கொண்டாடுகின்றார்கள்.

1995ஆம் வருடம் பிரான்ஸ் நாட்டின் பரிஸில் நடத்தப்பட்ட UNESCO 28th Summitல் தீர்மானிக்கப்பட்டது யாதெனில்,
அறிவை பரப்பல், உலகிலுள்ள கலாச்சாரம் சார் விழிப்புணர்வினை பெறல், விட்டுக் கொடுத்தல், புரிந்துணர்வு வழியாக மனித ஒழுக்கத்தை மேம்படுத்தல் என இன்னோரன்ன கருமமாற்றலுக்கு புத்தகமே ஆகச்சிறந்த கருவி என்பதால் சித்திரை 23ஆம் திகதியே பொதுவாக கொண்டாடப்பட வேண்டும் என்பதாகும்.

சர்வதேச இலக்கியங்களுக்கான குறியீடாக இந்த தினம் தெரிவு செய்ததாக UNESCO தெரிவித்துள்ளது.

ஆகச்சிறந்த எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இந்த April 23லயே காலமானார்

ஏப்ரல் 23 ஆம் திகதி உலக புத்தக தினத்தை கொண்டாட வேண்டும் என்ற கருத்தை முதலில் முன்வைத்தவர்கள் ஸ்பானியர்கள் தான். ஸ்பெயின் நாட்டவர்கள் April-23ஐ புனித ஜோர்ஜ் அவர்களின் நாளாக கொண்டாடினார்கள். இத்தினத்தில் ஆண், பெண் இருபாலாரும் புத்தகங்களையும், ரோஜாக்களையும் தமக்கிடையே அன்பின் வெளிப்பாட்டு பரிசுப் பொருளாக பரிமாறுவது வழக்கம்.

சர்வதேச பதிப்பாளர் சங்கம் World book Dayஐ உருவாக்கனும் என்று யுனெஸ்கோவுக்கு முன்மொழிய அதை Spain நாட்டு அரசாங்கத்தின் பரிந்துரை செய்யப்பட்டதே உலக புத்தக தினம் கடைப்பிடிக்க காரணமாக திகழ்ந்தது என்ற வரலாற்றையும் பதிவு செய்தல் உத்தமம்.

புத்தகங்களின் மதிப்பினை உணர்த்தும் பொன் மொழிகள் இதோ.

புத்தகங்கள் அனைவராலும் மதிக்கப் படுகின்றன, ஆனால் பெரும்பான்மையானவர்களால் ஏறெடுத்துக்கூட பார்க்கப் படுவதில்லை.

புத்தகங்களை விட அதி உன்னதமான நண்பர்கள் இருக்க முடியாது.

வாழ்க்கை அனுபவங்கள், தோல்விகள், படிப்பினைகள், சாதனைகள் தான் அற்புதமான புத்தகங்கள் உருவாக வழி சமைக்கின்றன.

கல்வியின் மீது தீராக்காதல் உள்ளவன் புத்தகங்களை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.

ஆகச்சிறந்த புத்தகம் கிடைத்தால் எல்லா வேலைகளையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு உடனடியாகவே படித்துக்கொள்.

புத்தகத்தை எழுத்தாளன் ஆரம்பித்தாலும் பூரணமடைய செய்பவன் வாசகனே.

மனித மனங்களை படிப்பதற்கு ஒப்பானது புத்தகங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள்.

எந்த வீட்டில் புத்தகம் இல்லையோ அந்த வீட்டை விட்டு உடனேயே வெளியேறிடு. அது பாதாளத்தின் வாசல்.

நீங்கள் பரிசாகக் கொடுக்கும் தங்கம்,செல்வம் எல்லாவற்றையும் விட புத்தகத்தை பரிசளிப்பது அதிக பெறுமதியுடையது.

புத்தகங்களை இலட்சக்கணக்கில் சேமித்து உபயோகப்படுத்தாமல் கறையான், எலி அரிக்க கொடுப்பதை காட்டிலும் குறிப்பிட்ட சில புத்தகங்களை மட்டும் பத்திரப்படுத்தி மூளையில் சேமிப்பது உத்தமம்.

அதி உன்னத பெறுமதியுடைய புத்தகங்கள் விலை மதிப்பில்லா பொக்கிசங்களை கொண்டுள்ள சமுத்திரத்திற்கு சமானமானது.

சில புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்தாற் போல வாசிக்க வேண்டும், சிலவற்றை உன்னிப்பாக, நுணுக்கமாக படிக்க வேண்டும், சில புத்தகங்களை நடை முறை நிகழ்வோடு ஒப்பிட்டு அசை போட வேண்டும்

புத்தகத்தின் மேலட்டையின் கவர்ச்சியையோ, கவர்ச்சியின்மையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதீர்கள்.

படித்தல், சிந்தித்தல், நேர முகாமைத்துவத்தில் முதலீடுகளை போடுங்கள்.

ஒரு வீட்டில் காற்றோட்டம் வராத படி அடைப்பாக, சுவாத்தியத்திற்கு உகந்ததில்லாமல் இருப்பதற்கு ஒப்பானது புத்தகம் இல்லா வீடுகள்

உயிர்களை காவு கொள்ளும் ஆயுதங்களை விட புத்தகங்கள் அதி சக்தி வாய்ந்தது.

மிக சொற்ப காலத்தை உள்ளடக்கிய வாழ்க்கைச் சக்கரத்தில் தேவைக்கேற்றாற் போல, விருப்பிற்கு ஏற்றாற் போல புத்தகங்களை தெரிந்தெடுத்து படிப்பது உத்தமம்.

நண்பர்களால் எப்படி மகிழ்ச்சியை விளைவிக்க முடியுமோ அது போல துன்பங்களையும், இன்னல்களையும், அவலங்களையும் தர வல்லவர்கள். ஆகவே புத்தகங்களை தோழமையாக்குவதே மிகச்சிறந்த தீர்வு.

மனிதர்களின் அத்தனை துன்பங்களுக்கும் மூல காரணம் பேராசை. ஆக பேராசையை நேசிக்காமல் புத்தகத்தை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

மரணத்தின் பின்னரும் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்றால் அவர்களின் சாதனைகளாலும், கண்டு பிடிப்புக்களாலும், உருவாக்கிய புத்தகங்களினாலும் தான்

மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற புத்தகங்களே வழிகாட்டுகின்றன. அத்தனை ஆட்சிகளையும் கவிழ்த்துப் போட்ட புரட்சிகளின் பின்னனியில் புத்தகங்கள் தான் இருந்திருக்கும்.


புத்தகங்களை வாசிக்க வாசிக்க மூடனும் புத்திஜீவி ஆகின்றான்.

தனிமையிலே இனிமை காண முடியுமென்றால் அது புத்தகங்களின் மூலமாகத் தானிருக்கும்.


புத்தகங்களை சுவாசிப்பவன் எக்காலத்தையும் வசந்தம் காலம் போல உணருவான்.

நண்பன் யாரென்று சொன்னால் உன்னைப் பற்றி சொல்ல முடியும் என்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்தாது. வெளியுலகத்திற்கு அத்தனை உத்தமர்களாக திரிகின்ற பலரால் தான் அந்தரங்கமான குற்றங்கள் நடை பெறுகின்றது.

அழிவில்லாத பொருட்களாக இப்போது புத்தகங்களையும் பேணிக் காக்க முயல்கின்றனர்ர

வாழ்கை இருண்மையாகி வாழ வழி தெரியாமல் அல்லாடுகின்றீர்களா? சுவாரசியமூட்டும் புத்தகங்களை படித்துப் பாருங்கள். எல்லாம் மாறி விடும்

இத்தனை மகத்துவமுடைய புத்தகங்களை நீங்களும் நேசிக்கின்றீர்களா? என சுயபரிசீலனை செய்து கொள்ளுங்கள்.








கீழேயுள்ள Google Form Button ஐ Click பண்ணி Ilantheepan Nadarasa அவர்களால் உருவாக்கப்பட்ட Google Formஐ செய்து கொள்ளுங்க

Google Form

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post