University of Jaffna Planning 7th Batch University of Jaffna Planning 7th Batch - examsguide.lk

யாழ் பல்கலை ஞாபகங்கள்

  
பல்கலை ஞாபகங்கள் ஒப்பிட முடியாதளவு அழகானவை மட்டுமல்லாது அதி சுவாரஸ்யமானவைகளும் கூட, ஆனால் மறக்க முடியாத நினைவுகளின் ஒன்றிணைந்த சேர்க்கைகள் மறையெதிராகக் காணப்படும் போதே  அவை நோயாக உருவெடுத்து விடுகின்றது.

இருப்பினும் ஞாபகங்கள் தான் ஒன்றுமில்லாத இந்த வாழ்வின் பொக்கிஷமாக திகழ்கின்றது. நானும் அத்தகைய அற்புதமான கனவுகளோடு கனவாக மடிந்து விடாமல் இருக்க பற்பல நினைவுகளை காவிச் செல்வதற்கு  ஆசைப்படுபடுகின்றவன். “ I would like to die with awesome memories not dreams”


தோழமைகளால் சாதகமாகவோ எதிர்மறையாகவோ வாழ்க்கையை புரட்டிப் போட முடியும். உன் நண்பன் யார் என்று சொல்? நீ யாரென்று சொல்கின்றேன் என்று சும்மாவா சொன்னார்கள்.. 


எதற்குமே லாயக்கற்ற ஒரு தோழமையை உன்னால் முடியும் நீ சாதிப்பாய் என்று துவண்டு விழும் ஒவ்வொரு தருணங்களிலும் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி உயர் அரச பதவியை அலங்கரிக்க செய்திருக்கின்றார்கள்,தத்தமது துறையில் கோலோச்ச செய்திருக்கின்றார்கள். அந்தளவுக்கு மகத்தான சக்தி தோழமைகளுடையது.


பொதுவில் பல்கலைக்கழகத்திற்கு முதன் முதலில் காலடி வைக்கின்ற போது அத்தனையும் முகம்தெரியா உருவங்கள்.. ஒவ்வொரு பாடத்தின் போதும் ஒவ்வொரு நட்புகளாக ஒன்றிணைந்த பின்னர் தான் தனிப்பலமே உருவாகின்து... அதனால் தான் காட்டு ராஜாவான சிங்கத்தையே 10 எருதுகள் புரட்டிப் போட்டு விடும்.. 


தனித்திருத்தலை விட கூட்டாக செயற்படுதல் தான் அதி சக்தி வாய்ந்த ஆயுதம்.. ஆனால் பல்கலைக்கழகத்தில் Semister Exams களோடு கூட்டாக படித்தல்,தெரியாத தோழமைகளுக்கு சொல்லிக் கொடுத்தல்,அறிவை பகிர்தல்,தனக்கு கிடைக்கும் notes ஐ சகதோழமைகளுக்கும் Share பண்ணுதல் போன்ற உன்னத குணங்களை பல்கலைக்கழகத்தின் பின்னர் அடியோடு தொலைத்து நிற்கின்றோம்..


 தனித்தனியாக ஜெயிக்க முற்படுகின்றோம்,சக தோழமைகளை தோற்கடித்து ஜெயித்தல் என்பது தோல்விகரமான அணுகுமுறை என்று தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் ஒருவர் கூட சித்தியடையாத Srilanka Administrative Service Limited Exam மிகச்சிறந்த உதாரணம்.Collective is Success தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய யதார்த்த உண்மை.

யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது ஆண்டில் இரு பாடங்களை தெரிவு செய்து கற்க வேண்டும். இரண்டாம் ஆண்டில் அதில் எந்த பாடத்தில் அதிகளவு Score பண்ண முடிகின்றதோ அதை தான் பெரும்பாலும் Special பாடமாக தெரிவு செய்து படிப்பார்கள். அந்த வகையில் Planning, Media Studies ஐ முதலாமாண்டில் தொடர்ந்து Media Studiesல தான் அதிகம் Score பண்ண முடிந்தாலும் Planning மீது Seniorsகளால் உருவாக்கப்பட்டிருந்த Demandஇன் காரணமாக அதை தெரிவு செய்ய முற்பட்ட வேளையில் தான் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை தான் அதிலும் குறிப்பாக 40 மாணவர்களை தான் Special படிக்க அனுமதிக்க முடியும் என்பதோடு பெயர் Listஉம் Head of Department வெளியிட்டது. நல்ல காலம் 40 மாணவர்களை உள்ளடக்கிய பெயர் List இல் எனது பெயரும் வந்திருந்தது. இருப்பினும் இவ்வாறு மட்டுப்படுத்த உள்ளீர்ப்பு நியாயமற்றது என போராட்டங்கள் நடத்தி Special படிக்க விரும்புகின்ற அத்தனை பேரையும் படிப்பதற்கு அனுமதிக்க வைத்தோம்.

எவ்வாறு தான் புதிது புதிதாக தேடி ஞாபத்தில் வைத்து Exam Paperக்கு எழுதினாலும் எதிர்பார்க்க கூடியளவு Marks வரவில்லை.. அந்தளவுக்கு அட்டூழியம் செய்து விரிவுரையாளர்களின் மனதில் நீங்கா கசப்புணர்வு சம்பாதித்து வைத்திருந்தேன் போல?
அதனால் தான் அடிக்கடி மார்ஷலை சந்திக்க வேண்டியிருந்தது.. இருப்பினும் ஒரு முறை Out of Bounds தந்தது மட்டுமல்லாது கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் செய்யாத குற்றங்களை எல்லாம் History விரிவுரையாளர் என் மீது சுமத்தி விட்டார். அத்தனையும் சேர வேண்டியது Geography மாணவனுக்கு.

ஒரு மாதிரி ஓட்டு மாட்டு செய்து பொதுமன்னிப்பின் பேரில் ஓரிரு மாதங்களின் பின்னர் படிப்பை தொடருவோம் என்றால் கோமேஸின் கலைப்பீட மாணவர் ஒன்றிய தேர்தலில் வெற்றியடைய வைப்பதற்காக விரிவுரைகளுக்கு சமூகமளிக்காது ஆட்சேர்த்துக் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் பிரச்சாரம் செய்வதிலேயே குறியாய் இருந்த படியால் வகுப்புக்களுக்கு சமூகமளிக்காமையால் வரவு போதாது என்று கொஞ்ச பேருப்புக்கு சிவப்பு அறிவுறுத்தல் விடப்படுகின்றது.. நிறைய பேர் என்ற படியால் எல்லாரையும் கூப்பிட்டு ஒரேயடியாக Sign வைத்து விட காரியவாதிகளான சகதோழமைகள் என்னை கைவிட்டு விடுகின்றார்கள். நான் மட்டும் தனிய போகும் போது Exam எழுத முடியாது என Department Head இது தான் சந்தர்ப்பம் என்று கெத்தை காட்டுகின்றார்.Sign பண்ண மறுக்க தன்னையறியாமலே கண்கள் தாரை தாரையாக வடிகின்றது. துடைத்துக் கொள்ள Dean அனுமதித்தால் Exam எழுதலாம் என சொல்லுகின்றார். நம்மை கண்டால் தானே அத்தனை பல்கலைக்கழக Staff க்கும் ஆகாது. பெண் பலவீனமுடைய Economic Sir ஐ நீக்குவதற்காக போராட்டம் செய்ய தான் படிப்பிக்க வேணேடும் என்று தந்திரோபாயமாக நிதர்சனிடம் கதைத்து எல்லா Auxiliary Course படித்த மாணவர்களிடம் இருந்து Sign பெற்றுத்தர கோரிக்கை விடுக்க அதை தெரிந்த கோமேஸ் எதிர்க்க கையொப்பத்தை கிழித்து போட்டு விட்டு Marks ல கைவைத்தால் நீ தான் உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பிரச்சினை ஆரம்பமாகின்றது.. சொன்னால் போல ஒவ்வொரு முறை A எடுத்தவனுக்கு இந்த முறை அந்த பாடத்தில் மட்டும் கையில குடுக்கின்றார்கள் திரும்ப எழுத வேண்டும் என. எல்லாவற்றையும் செய்த கோமேஸால் இதற்கு தீர்வு காண முடியவில்லை
நிதர்சனின் பிரச்சினையால் கொஞ்ச காலம் கோமேஷ் அவர்களோடு முன்னை மாதிரி நட்பு பாராட்டுவதில்லை.. நான் Exam எழுத முடியாது என அறிந்தவுடன் Dean இடம் போய் கதைக்கின்றார். ஓம் Sign வைக்கின்றேன் என்று சொல்லி விட்டு ஒரு பாடத்திற்கு மட்டும் 80% வரவு இருப்பதாகவும் மற்ற பாடங்களில் ஒற்றை இலக்க வரவு இருப்பதாகவும் Head of the department க்கு Call பண்ணி Check பண்ணுகின்றார். அது சரியானது தான் என உறுதிப்படுத்த Sign வைத்து Exam எழுத வைக்கின்றார்கள்.. அந்த 80% வரவு வரக் காரணம் சிங்கள மொழி விரிவுரையாளர் ஆங்கிலத்தில் எங்களுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளை விரிவுரை நடத்தியமையால் தான் என பின்னர் தான் பொறி தட்டியது.. சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் ஏனைய பாட சகதோழமைகள் இல்லாமையால் பராக்கு இல்லாமையால் வகுப்புக்கு சமூகளித்திருக்கின்றேன்.

எது எப்படியோ என் சுயதேடலுக்குரிய கெளரவம் Exam Paper இல் Marks வரும் போது வழங்கப்படாமை தாழ்வு மனப்பான்மையும் வாழ்க்கையிலே தோல்விகளை மட்டுமே அனுபவிக்க உருவாக்கப்பட்டிருக்கின்றேன் என்ற எதிர்மறை தன்னம்பிக்கையை நம்ப ஆரம்பித்தது. இரண்டே இரண்டு Demo வாக இருந்தவர்களால் Tuiteக்கு எனக்கு மட்டும் கெளரவத்தை தந்ததோடு வாங்கி Study பண்ண ஏனைய தோழமைக்கு கோரிக்கை விடுத்தமை நீங்கா ஞாபகம். அதை விட பட்டப்படிப்பில் மகிழ்ச்சியை தந்தது First year Media Study Resultsஉம், Auxiliary Course Results உம் தான் முதல் முதல் Tuite க்கு 10 பேருக்கு மட்டும் B+ போட்டவர்கள் என்னுடைய குழப்படி தெரிந்த பின்னர் அள்ளி போடாமல் கிள்ளித் தான் போட வெளிக்கிட்டார்கள்.

1st Class, 2nd Upper எடுத்தால் தான் பல்கலைக்கழகத்தின் பின்னர் சோபிக்கலாம் இலகுவாக வேலை வாய்ப்பை எடுக்கலாம் என்ற மாயைத் தோற்றம் வேலை தேடி அலைந்த போது தான் உடைந்தது.. எல்லா Interview லயும் அவர்கள் எதிர்பார்த்தது ACCA,Cima போன்ற Charterd Accounts படித்தவர்களை தான். Planning Degreeக்கு மதிப்பு குடுக்கவில்லை. அதே போல அரச வேலை வாய்ப்பிலும் Planning Degree Reject செய்யப்பட்டு தான் வந்தது.

பல்கலைப்படிப்பிற்கும் வேலை வாய்ப்பிற்கும் சம்பந்தமில்லை என உணர்ந்து கொண்டேன். PAFFREL Election Monitoring NGOவில என் தாயாரின் சமூக சேவைகளில் பிரதி பயனாக வேலை கிடைக்கின்றது. மாதாந்த ஒப்பந்தம் எப்போது வேணேடுமென்றாலும் திருப்பி அனுப்பலாம் என்ற பயம் அரச போட்டிப் பரிட்சைகளிலில் கவனம் செலுத்த வைத்தது. அந்த பயம் உண்மையானது Election முடிய 3 மாதங்களில் வீட்டுக்கு திருப்பி அனுப்பித்து விட்டு மீண்டும் அடுத்த Electionஇன் போது தான் உள்வாங்கியும் மீண்டும் ஒவ்வொரு மாத Agreement விளையாட்டு தான் நடந்தது.

Classகளுக்கு காசு கட்டி படித்துப் பார்த்தாலும் அதை திரும்பி படிக்காமையாலும் சுயதேடல் இன்மையாலும் தோற்கும் படலம் தொடர்ந்தும் ஆரத் தழுவிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் முயற்சிகளை மட்டும் கைவிட பிரியப்படவில்லை.

வகுப்புக்கள் சரிவராது என்று Youtube IQ வீடியோக்களை தரவிறக்கி நுணுக்கங்களை கற்றுக் கொள்ள முயற்சித்தேன் Facebook போடப்படும் பொது அறிவை Print எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கிரகித்தல் சுருக்கம் போன்ற புத்தகங்களை பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். பாஸ் பண்ணுவோம் என்ற தன்னம்பிக்கை வந்து SLAS இரண்டாம் தரம் எழுதி IQ paper Out ஆயிடுச்சு,திரும்பி எழுத வேண்டும் என்ற
அறிவுறுத்தல் தேவையில்லாற் போயிற்று.. ஏற்கனவே எழுதிய SLIRS Results வீட்டை வந்தது. வழக்கமாக நியமனம் குடுத்த பின்னர் தான் Results வீடு தேடி வரும். இந்த முறை முன்னமே வந்த படியால் எல்லாரையும் போல உள்ளால எடுத்திட்டு அனுப்பியிருக்கின்றார்கள் என்ற பொதுப்பிம்பத்திற்கு, பொதுப்புத்திக்கு பலியாக தேவையில்லாற் செய்து பல்வேறு போராட்டங்களின் பின்னர் நியமனம் தந்திருக்கின்றார்கள். என் சக தோழமைகளையும் தங்களுக்கு பிடித்த துறைகளுக்கு உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்பதே என் பிடித்தமாயிருக்கின்றது.

ஏதாவது ஒரு வகையில் பிறருக்கு உபயோகமுள்ளவர்களாக வாழ்வதற்காகவே படைக்கப்பட்டிருந்தாலும் முன்னோர்களை பார்த்து சோம்பியிருக்கக் கற்றுக் கொண்டமையும், தொடர்ந்தேர்ச்சியாக கற்றுக் கொள்ளாமையும் சாதாரண மனிதர்களைப் போல வாழ்ந்து விட்டு ஓய்வு பெறுதல் ஏற்றுக் கொள்ள முடியாது. எப்படியாவது தீர்மானம் எடுக்கக் கூடிய உயர் பதவிகளுக்கு Planning படித்தவர் limited ஊடாகவேனும் வந்தே ஆக வேண்டும். அதுவே என் தீரா ஆசையாகவும், நிறைவேறா கனவாகவும் இருக்கின்றது. நிறைவேற்றிக் காட்டுங்கள் பார்ப்போம்.

யாழ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு,படிப்பு, வீரம்,முன்னின்று செயற்படுதலில் ஹீரோவாக தென்பட்டவர்கள் வேலை வாய்ப்பின் போது பூச்சியமாக Juniors க்கு report பண்ணக்கூடிய வகையில் எல்லா ஆட்டமும், பாட்டமும் அடங்கி ஒடுங்கிப் போய் கூனிக் கூறுகி நிற்பதை பார்க்க வேடிக்கையாய் இருக்கின்றது. ஒரு சிலருக்கு தான் first Class or second upper போட்டு கெளரவமாக அனுப்பி வைப்பார்கள். ஆனால் அவர்களே சாதாரண மனிதர்களை போல வாழப் பிரியப்படுதல் எந்தளவு அபத்தம்? இதற்கு தான் அத்தனை மாணவர்களை விட அதி புத்திசாலித்தனத்தை பரிட்சையில் காட்டினீர்களா?

A/L தகைமையோடு உள்வாங்கப்படுகின்ற Management Service Officer, கிராம சேவை உத்தியோகத்தர்களாக பல்கலைக்கழகம் செல்ல முடியாதவர்களின் வாய்ப்பை தட்டிப் பறித்தல் நியாயமற்ற செயற்பாடு. குறைந்த பட்சம் பட்டத்தகைமையுடைய வேலை வாய்ப்பிற்கேனும் உள்நுழைந்து அடுத்த முறையாவது உரிய தகைமை உடையவருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். ஆனால் நாம் மனச்சாட்சியே இல்லாமல் அவர்களுடைய வாய்ப்பிலேயே தொடர்ந்தும் இருக்க பிரயாசைப் படுகின்றோம்.

இது ஒருபுறம் இருக்க பட்டத்தகைமை உடையவர்களை GE2 ஆசிரியர்களாகவும், MN4 Development Officers ஆகவும் உள்வாங்கினாலும் A/L. தமையுடையவர்களோடு Secondary Level Post இல் வைத்து பட்டத்தகைமைக்குரிய மதிப்பு வழங்காத வகையில் வடிவமைக்கட்டுள்ளமையால் அடுத்த கட்டம் நோக்கி முன்னோக்கி பயணிப்பது காலத்தின் கட்டாயம். அரச நிர்வாகம் இது குறித்து எந்த கரிசனையும் காட்டாது என்பதால் நீங்களே உங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கோ.

இன்றைய நாளைப் பற்றி நினைப்பவர்களுக்கு இந்த கருத்துக்கள் கசப்பாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்தாலும் எதிர்காலம் குறித்த புரிதல் இருப்பவர்கள் கூட்டிக் கழித்து பார்த்தால் பதிவிடப்பட்ட விடயங்களை சரியானவை என்றே ஏற்றுக் கொள்வார்கள்.

பல்கலைக்கழக பட்டப்படிப்பால் என்ன விளைபயன் என்று பார்த்தால் என்னைப் போன்றவர்களை வீதியிலிறங்கி போராட்டம் செய்தாவது வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கி செயற்பட தூண்டி விட்டிருக்கின்றது. இப்படி ஒவ்வொரு வருட பட்டதாரிகளுமே வீதியில் இறங்கி போராட முன்மாதிரியாக திகழ்வது இனியாவது நிறுத்தப்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு போன பட்டதாரிகள் பட்டத்தகைமைக்குரிய வேலை வாய்ப்பை மேற்கொள்கின்றார்கள் என்றால் விடை இல்லை என்பதாகத் தான் இருக்கின்றது.. என்னத்துக்கு தேவையில்லாமல் 4 வருடம் படிக்க வேண்டிய படிப்பை 5 வருடங்களாக படிக்க வேண்டும்?

பட்டதாரிகள் ஏனையவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கப்படக் கூடியவர்களாக உருமாற்றம் பெற வேண்டும். ஏழ்மையிலிருக்கின்ற சமுதாயத்தை கைதூக்கி விடுபவர்களாக மாற வேண்டும். அப்படி இனிவரும் காலங்களிலாவது கல்வியின் விளைபயன் இருக்க வேண்டும்.

திட்டமிடல் துறைக்கு திட்டமிடல் என்றால் என்ன என்றே கிஞ்சித்தும் தெரியாத சமய பாடங்கள் போன்ற இன்னும் பிற பாடங்களை படிக்கின்ற மாணவர்கள் Planning Serviceக்குள் உள்நுழைந்தால் எப்படி விளைபயன் இருக்கும் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்ட தவறுவதில்லை.. ஆனாலும் நாம் சிந்திக்காமல் சோம்பியே இருப்போம்.. வீட்டுத் திட்டம் வழங்குவார்கள் கொஞ்ச காலத்திலே வீடு வெடித்துக் கொண்டு வந்து ஆபத்தானதாக மாறி விடும். வீதிகளை போட Tender Call பண்ணி ஒப்பந்தக்காரரை நியமிப்பார்கள்.. தரம்,நிலைத்திலுக்கும் தன்மையை கண்காணிக்கவோ,மேற்பார்வையை செய்யக்கூடிய அறிவு இல்லாமையால் அடுத்தடுத்த மாதங்களிலே வீதிகள் குன்றும், குழியும் விழுந்து பாவனைக்கு உதவாததாக மாறி விடுகின்றது.. இந்த லட்சணத்தில் நாடு எப்படி உருப்படும்? அபிவிருத்தியடையும் இவர்களுடையகையாலாகாத வினைத்திறனற்ற தன்மையை சாதகமாக்கிக் கொண்டு அரசியல்வாதிகள் இலஞ்சம்,ஊழல் மூலம் நாட்டை அதலபாதாளத்திற்கு கொண்டு செல்கின்ற செயன்முறையை,கடனை வாங்கி நாட்டு மக்கள் மேல் சுமத்தி விலைவாசிகளை உயர்த்தி மக்களை மேலும் இன்னல்களுக்கு உட்படுத்துகின்றார்கள் . இந்த நிலையை மாற்ற அரசியலிலும்,தீர்மானம் எடுக்க கூடிய உயர் பதவிகளிலும் திட்டமிடல் படித்த மாணவர்கள் வந்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம் விரும்பியோ விரும்பாமலோ சுமத்தப்பட்டுள்ளது. என்ன நடக்கப் போகின்றது என காலம் பதிலளிக்கட்டும் உங்களால் முடியாது என்று இனி வரும் திட்டமிடல் படிக்கின்ற மாணவர்களா இதை சரி செய்யப் போகின்றார்கள்? இல்லை நீங்களே சரி செய்யப் போகின்றீர்களா என்பதை காலம் வெளிப்படுத்தக் கடவதாக.

ஆக என்ன நோக்கத்திற்காக சமுதாயம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி திட்டமிடலை படிப்பதற்காக உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது? அந்த நோக்கத்தை நிறைவேற்றி விட்டீர்களா? என்று உங்களை நீங்களே சுயபரிசீலணை செய்து கொள்ளுங்கள்.

நாடு தொடர்ந்தும் அபிவிருத்தி குன்றிய நிலையில் காணப்படுவதை தொடர்ந்தும் ஊக்குவிக்கப் போகின்றீர்களா? Spatial Planning, Geographical information System, Remote Sensing போன்ற நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திக்குரிய பாட விடயத்தானங்களை கற்று விட்டு அதை பயன் படுத்தாமல் ஒருவருக்கும் உபயோகமில்லாதவர்களாக வாழ்ந்து மடிவது தான் உங்கள் அத்தனை பேரினதும் நோக்கமா? என முடிவெடுங்கள்.

நீங்கள் செய்யா விட்டால் சமய பாடத்தை Or இன்னொரன்ன தொடர்பில்லாதவற்றை பட்டப்படிப்பாக தொடர்ந்தவர் தான் செய்ய தொடர்ந்தும் வாய்ப்பளிக்கப் போகின்றீர்களா?
திட்டமிடல் படித்த நீங்கள் அத்தனை பேரும் தான் நிர்வாகச் சீர்கேட்டை மாற்ற, வினைத்தினற்ற, விளைதிறனற்ற உபயோகமில்லாத, எதிர்காலத்திற்கு பாதிப்பை சீர்திருத்த படைக்கப் பட்டீர்கள் என்ற நோக்கத்தை எப்போதும் மறந்து விடாதீர்கள். இனியாவது அடுத்தவன் செய்யட்டும், அடுத்தவன் முன் வரட்டும் என்ற பின்னோக்கிய மனப்பான்மையினை மாற்றி நீங்கள் ஒவ்வொருவரும் முன்வந்து நாட்டை அபிவிருத்தி அடையச் செய்ய வையுங்கள் பார்ப்போம். உங்களாலே முடியா விட்டால் யாராலும் மாற்ற முடியாது சமுதாயத் திட்டமிடலை கற்றவர்களால் மட்டுமே ஏதாவது வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஆக இனியும் அடுத்தவர்களுக்காக காத்திராமல்,அடுத்தவர்களில் தங்கியிராமல் மாற்றத்தை உருவாக்க முன் வாருங்கள் பார்ப்போம். இலங்கை நாட்டை ஒருபடி முன்னோக்கி நகர்த்த உங்கள் புத்திசாலித்தனத்தை பயன் படுத்துங்கள். 


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post