University of Jaffna -32nd Bach University of Jaffna -32nd Bach - examsguide.lk

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 32 ஆம் அணி


பல்கலைகழக வாழ்க்கை என்பது மிகவும் சந்தோசமான சுவாரஸ்யமான வாழ்க்கை ஆகும். சிலருக்கு அவ் வாழ்க்கை கிடைத்து விடும் ஆனால் சிலருக்கு அது எட்டாகானியாகவே அமைந்து விடும். ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும் பல்கலைகழகம் சென்று படித்து நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும் என்பதாகும்.


பல்கலைகழக வாழ்க்கை என்பது கவலைகள் துன்பங்கள் கஸ்ரங்களை மறந்து வானில் பறவைகள் போல சிறகடித்து பறந்து செல்லும் காலம் ஆகும். எதிர்கால கனவுகளோடும் ஆசைகளோடுமே எல்லோரும் செல்கின்றனர். பல்கலை கழகங்கள் ஒவ்வொரு வருடமும் ஆயிர கணக்கான மக்களை தன்னுள் இணைத்துக் கொள்கின்றது. பல புதிய புதிய நபர்களை நண்பர்களாக வலம் வர வைக்கின்றது.நல்ல நண்பர்களை உருவாக்குகின்றது அவனுக்காக சண்டைகள் போடுதல் காதல் தூது போதல் அவனுடைய குடும்பத்தை தன் குடும்பம் போல பார்த்தல் Mid night பிறந்தநாள் கொண்டாட்டங்கள்.Party கள் இப்படி பல்கலைகழக நினைவுகள் மிக அழகானவை  மீட்டி பார்க்கும் போது சந்தோசத்தை மட்டும் தரும் நினைவுகள். 


நண்பனின் ஆடைகளை மாறி மாறி உடுப்பது. ஒன்றாக சேர்ந்து உணவு உண்பது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சுற்றி திரிந்த காலங்கள் என்றும் மறக்க முடியாதவை.சீனியர் யூனியர் ராக்கிங் சண்டைகள் மோதல்கள் பல நிகழ்வுகள் அரங்கேறிய காலம். துன்பங்ளை மறந்து கைகோரத்து திரிந்த காலங்கள் பல்கலை கழக காலங்கள். வருடாந்த சுற்றுலாக்கள்  ஆட்டமும் பாட்டமும் போட்டோக்கள் எடுத்தல் அதை இப்போது பார்த்தாலும் புது உற்சாகம் பிறக்கும்.


அதே போல தெரியாதவர்களுக்கு, பாடம் புரியாதவர்களுக்கு, படிப்பில் கவனம் செலுத்தாத என்னைப் போன்றவர்களுக்கு மீத்திறன் மாணவர்கள் அறிவை பகிர்ந்து ஒவ்வொரு Semister Examsகளிலும் சித்தியடைய வைக்கின்றார்கள். 


ஆனால் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வந்ததும் தான் மட்டுமே சித்தியடைய வேண்டும் தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற முனைவதால் தான் என்னமோ உயர் போட்டிகளில் ஒரு தமிழ்,முஸ்லிம் மாணாக்கர்களோ சித்தி அடையாத அவலம் அரங்கேறுகின்றது. இல்லையேல் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் உயர் பதவியை அலங்கரிக்கின்றார்கள். தனித்திருப்பதால் தங்கள் கெத்தை காட்ட முடியாமல் பேசாமடந்தைகளாக இருக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றார்கள். இந்த அவல நிலையை மாற்றவாவது சேர்ந்து படித்து முன்னேறுவதே காலத்தின் தேவை. 

யாழ் பல்கலைக்கழகத்தில் காலடி பதித்த போது ஒருவரையும் தெரியாது. பதுங்கி பதுங்கி உள்நுழைந்த போது முதல் அடி விழுகின்றது. காரணம் அரைக்கை Shirt போட்டு போனது தான். மன்னாரில அரைக்கை Shirt தான் போட்டுட்டு போய் தான் சீனியர்ஸ் அண்ணண்மாரை சந்தித்தோம். அந்த அடிப்படையில அரைக்கை Shirt போட்டுட்டு போய் முறையாக வாங்கி கட்டினேன். கோதாரி விழுந்த சீனியர்ஸ் சும்மா இரத்தம் எடுத்தவங்களே தவிர பிரயோசனமாக ஒன்றும் சொல்லவில்லை. அதனால் தான் போன முதல் நாளே அடி விழுந்தது. 

ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் அடிவிழும் என பயந்து பயந்தே திரிய வேண்டியிருந்தது. அந்த நேரம் தான் கோமேஸ் தன் பின்னால கொஞ்ச கூட்டத்தை சேர்த்துக் கொண்டு திரிந்தவன் தனுராஜனை அறிமுகப்படுத்தி வைத்தான். கோமேஸ், தனுராஜன்,நிதர்சன் First yearல Media Studies கற்கை நெறியையும், Community and Regional Development Planning எடுக்கின்றார்கள் என கும்பல்ல கோவிந்தா என தெரிவு செய்தோம். 
First Year ல University போன புழுகத்தில நேரம் ஒதுக்கி படித்த படியால் நல்ல Marks வந்திருந்தது. Second yearல தோழமைகளோடு நேரம் செலவழிப்பதும், அரட்டை அடிப்பதோடு பொழுதைக் கழித்தமையால், Batchஆக இணைந்த படியால் படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

கோமேஸ்,தம்பன்,நிதர்சன், டினுசன், சிவதீபன் கஜிதரன், தனுராஜன், அயூரன்,அஜித் இப்படி List போட்டுக் கொண்டே போகலாம். இவர்களோடு தான் பொழுது போனது. நிதர்சன், அஜித், ஜோய் ராஜ்மன் இவல்கள் போன்ற இன்னோரன்ன தோழமைகளால் குருநகர் வாசியானேன். குருநகர் என்றாலே தானாகவே கம்பீரம் வந்தது. நந்தா அண்ணன்,பிரதீபன் இவர்களுடைய நெருங்கிய பழக்கம் பாடசாலையிலும், பல்கலை ஆரம்பத்திலும் பம்மிக் கொண்டு திரிந்த எனக்கு இறக்கைகள் முளைத்ததை போன்ற கம்பீரம். அதை வெளிப்படுத்தும் முகமாக அட்டகாசங்கள் தொடர்ந்தது. குருநகர் Church Feast, கிறிஸ்தவ பெருநாள்கள் என்பவற்றின் போது எமக்கு மாபெரும் கொண்டாட்டமும், விருந்தோம்பலும் கிடைக்கும். மன்னார் மாவட்டத்திலிருந்து வந்திருந்து யாழ்ப்பாணத்தில் படித்திருந்தாலும் பிறந்ததோடு யாழ்ப்பாணத்தில் இருந்த பந்தம் முடிவுற்றமையை குருநகர் மூலம் புதுப்பித்துக் கொள்ளக் கூடியதாகவிருந்தது. 

Cards விளையாடுதல், கரம் போர்ட் அடித்தல், ஜிம்ல உள்ள பாரங்களை கண்ட பாட்டுக்கு தூக்கி Armsஐ ஏற்றுதல் என்றெல்லாம் பொழுதை போக்கிக் கொண்டோம்.. பின்னைய காலங்கள் Cricket விளையாடக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது. இவ்வாறான சூழலால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவையில்லாமல் போனது. அதை விட என்னுடைய அட்டகாசங்களை கருத்தில் கொண்டு எப்படி தான் சுயதேடலை மேற்கொண்டு Exam Paper எழுதினாலும் புள்ளிகள் வந்த பாடில்லை. அதை விட கட்டாயம் படித்து நல்ல Results பெற வேண்டும் அப்போது தான் வேலை வாய்ப்பு இலகுவில் கிடைக்கும் என்றெல்லாம் அறிவுரை,ஆலோசனைகளை சொல்லக் கூடிய உன்னதமானவர்கள் அப்போது எங்களுக்கு கிடைக்கவில்லை.

இன்று Senior Lecturer கபிலன் Sir அவர்களோடு ஒருவராக தோழமையோடு எதிர்காலத்தினை, பல்கலைக்கழக வெளியேற்றத்தின் பின்னர் எவ்வாறு கையாள வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பதோடு, துறை சார் உயர் பதவியில் இருக்கின்ற திட்டமிடல் கற்கை நெறியினைத் தொடர்ந்த முன்னைய மாணவர்கள் ஊடாக அனுபவ,அறிவுப்பகிர்தலை வழங்கி வருகின்றமை மெச்சத்தக்க விடயம். நாமெல்லாம் University படித்து முடித்தால் Appointment கையில தந்திடுவார்கள் என நாமாகவே கற்பிதம் செய்து கொண்டு, முற்சாய்வுக்கு வந்ததன் பிரதிபயன் வீதிகளில் இறங்கி கச்சேரிக்கு முன்பாக நூற்றுக் கணக்கான நாட்களும், வடமாகாண சபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்து தான் வேலையினை பெற்றுக் கொள்ள வழிவகுத்திருந்தது. 

இதற்கு மாணவர்களின் அசட்டையீனத்தை விட பல்கலைக்கழகமும் எங்கள் மீது கரிசனை கொள்ளவில்லை என்றே கூற முடியும். Internships இல்லை, தொழில் வழிகாட்டல்கள் இல்லை, பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறிய பின்னர் தொழில் வாய்ப்புக்குள் உள்நுழையக் கூடிய வழிகாட்டல் இன்மை. ஆதலால் தான் வீதிகளில் இறங்கி போராட்டம் செய்து வேலை வாய்ப்பை பெற வேண்டியுள்ளது.

அதை விட இளமாணிப் படிப்பை தொடர்ந்த Subjectஐ முதுமாணிப் பட்டத்திற்கும் தொடர்ந்து SLAS போன்ற Service Examகளில் தெரிவு செய்யப்பட்டால் படித்த முதுமாணிப்பட்டம் செல்லுபடியற்றது என Service Minutes இல் உள்ளடக்கிய பாடத்தை முதுமாணிப்பட்டமாக கற்க வேண்டியுள்ளது. Service Examகளில் பாஸ் பண்ணுவர்களுக்கு தேவையான முதுமாணிப் பட்டத்தை மட்டும் படிப்பித்து விட்டு தேவையற்ற பாடங்களை கலைப்பிரிவில் இருந்து நிறுத்தினால் விமோசனம் கிடைக்கும்.

வெளி நாடுகளில் Skill Migration or திருமணம் முடித்தோ அல்லது Sponsored ல போகின்றவர்களுக்கோ அல்லது அகதி அந்தஸ்தில் போக இருப்பவர்களுக்கும் என்ன என்ன பாடங்கள் அந்த நாட்டிலும் போய் செய்யக் கூடியதாக அந்த பாடங்களை உட்சேர்ப்பது உசிதம். Sales Marketing, Cooking, House Keeping இது போன்ற வெளிநாடுகளில் எமது பட்டதாரி மாணவர்களுக்கு என்ன வேலை கொடுப்பார்களோ அந்தந்த பாடங்களை பட்டப்படிப்படிப்பாக அறிமுகப்படுத்துதல் உத்தமம். 

பட்டப் படிப்பாக படிக்கிறது ஏதோ, செய்வது எதோ. பட்டப்படிப்பிற்கும், செய்கின்ற தொழிலுக்கும் எந்த சம்பந்தமில்லை.. இந்த விசித்திரம் இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே இடம் பெறுகின்றது.

காரணம் பட்டத்தகைமை இல்லாதவர்கள் அமைச்சுக்களை வழிநடாத்துகின்ற படியால் தான். உரிய கல்வித் தகைமைகளை, துறை சார் நிபுணத்தை உடையவர்களை அமைச்சுக்களினை வழிநடத்த மக்கள் தங்கள் பிரதி நிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினால் ஏதாவது விருத்தி ஏற்படும்.

நமது மக்களும் உணர்ச்சி அரசியலுக்கு பழகி போன படியால் தொடர்ந்தும் சோரம் போய்க் கொண்டிருந்தோம். அந்த சோரம் போதல் பற்றி சிறிதவேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பதை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது. இனியும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று இறங்கி வேலை செய்யா விட்டால் முன்னுரிமை சொகுசுகளும், சிறப்பு அந்தஸ்தையும் இழக்க நேரிடும் என்ற பீதி இறங்கி வேலை செய்ய வைத்திருக்கின்றது. வியத்தகு அதிசயங்கள் இடம் பெற்றுக் கொண்டு வருகின்றன. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தை நடாத்தி காட்டியிருக்கின்றார்கள், பாராளுமன்றத்தில் உணர்ச்சி அரசியலுக்கு அப்பால் அறிவார்ந்த கேள்விகளை,வாதங்களை ஆங்கிலம்,சிங்களம் என பெரும்பான்மையினருக்கு புரியக் கூடிய விதத்தில் மொழியினை பயன்படுத்துகின்றார்கள். ஒரு சிலர் தாய் மொழியாம் தமிழிலே தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். முக்கியமான நிகழ்வுகளுக்கு தங்கள் பிரசன்னத்தை தெளிவு படுத்துகின்றார்கள். ஆக வியத்தகு மாற்றம் உருவாகத் தொடங்கியுள்ளமை ஆரோக்கியமான சூழல் தான். இந்த ஆரோக்கியமான சூழலை பயன் படுத்தி ஒன்று சேர்ந்தா, பிரிந்து நின்று தனித் தனியாகவா உரிமைகளை வென்று எடுக்கப் போகின்றார்கள் என்ற கேள்விக்கான விடையை எதிர் பார்த்து வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருக்கின்றோம்.

இந்த அரசியலை ஒருபுறம் வைத்து விட்டு தட்டுத் தடுமாறி போராட்டங்களை மேற்கொண்டு அரச வேலை வாய்ப்புக்குள் உள் நுழைந்தால் எடுக்கின்ற சம்பளம் உணவுக்கும், வங்கிக்கடனுக்கும், போக்குவரத்துச் செலவுக்கும் மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. இதனால் தான் இன்று ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள முரண்பாட்டை நீக்க வீதிகளில் இறங்கி போராட நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கின்றார்கள். 

அவர்கள் மட்டுமல்லாது அத்தனை அரச உத்தியோகத்தர்களும், குறிப்பாக பட்டத்தகைமை உடைய பட்டதாரிகள் சம்பள உயர்விற்காகவும், சம்பள முரண்பாட்டிற்காகவும் போராட வேண்டிய சூழல் விலைவாசி அதிகரிப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. 

படித்த பட்டப்படிப்பிற்குரிய கெளரவம், சம்பளம் இலங்கை நாட்டில் வழங்கப்படாமைக்கான காரணம் ஊழல் பெருச்சாளிகளின் வசம் நீதியும், நியாயமும் சாய்வதே காரணமாகும். மத்திய வங்கி ஊழல் மோசடிக்கு இதுவரை நியாயமான எந்த தீர்ப்புமே வழங்கப் படவில்லை. முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தினாலும் எந்த தீர்வையும் பெற்றுத் தர முடியவில்லை. இப்போதுள்ள குடும்ப ஆட்சியாலும் தீர்வு பெற்றுத் தர முடியாமல் உள்ளது மரண தண்டனை குற்றவாளியை கூட விடுதலை செய்யக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பெரும் அபத்தம்.

இது போன்ற குறைபாடுகளை நீக்குவதற்காக பட்டத்தகைமை உடையவர்கள் அரசியலில் தடம் பதிக்க வேண்டும். தமக்குரிய துறைகளில் தீர்மானம் எடுக்கக் கூடிய பதவிகளுக்கு வர வேண்டும்.. இல்லையேல் நாட்டின் அபிவிருத்தியை நாமே குன்றிய நிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதற்கு சமனாகும். 

தொடர்ந்து பல்கலைக்கழக கல்வியின் முன்னேற்றத்தை நோக்கின் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் Law தவிர்ந்து அத்தனை பாடங்களும் தமிழில் தான் படிப்பிக்கப் படுகின்றமை, இதன் தாக்கம் தொழில் வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வின் போது தான் உணர்ந்தோம். சேர்ந்தாற் போல தடுமாற்றம் இல்லாமல் கேள்விகளுக்கான பதிலை வழங்க முடியாமலிருந்தது. அதனாலே தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற முடியாது திருப்பி அனுப்பப் பட்டோம். இந்த அவலம் இனிவரும் சந்ததியினருக்கும் இடம் பெறா வண்ணம் ஏதாவது சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டால் நலமாக இருக்கும். அதே போல கல்வியைத் தாண்டி Examsகளை தாண்டி சிங்களம்,ஆங்கிலப் பேச்சுத் திறமையையும் வளர்த்து விட்டீர்கள் என்றால் காலமெல்லாம் உங்களுக்கு நன்றி உடையவர்களாய் இருப்பார்கள்.

கைகடுக்க எழுதும் Examsகளை குறைத்தோ அல்லது குறிப்பிட்ட புள்ளிகளை எல்லாப் பாடத்திற்கும் Presentation ஐ மேற் கொள்ளச் செய்தோ பேச்சுத் திறமை உடையவர்களாக, மேடைக் கூச்சம் இல்லாதவர்களாக உருவாக்கி விடுவதும் காலத்தின் தேவை. 

இத்தகைய குறைபாடுகள் ஏனைய பல்கலைக்கழகங்களில் சீர் செய்யப்பட்டு இருக்கின்றன. உதாரணத்திற்கு தொழில் வாய்ப்பை மையப்படுத்திய கற்கை நெறிகளை வழங்குவதால் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பின்னர் இலகுவாக வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ள முடிகின்றது. போராட்டம் செய்து வேலையினை பெற வேண்டிய அவசியம் இல்லை வட,கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டும் தான் இந்த சொல்லொண்ணா துன்பத்தை அனுபவிக்கும் வகையில் வெளியேற்றப் படுகின்றார்கள்.

இந்த அவலங்களை அனுபவிக்காத வண்ணம் இனிவரும் சந்ததியினராவது வழிகாட்டப் பட வேண்டும். Amercan Cornerல English Enrichment Course இலவசமாக வழங்கப்படுகின்றது. General Certificate for School Leavers க்கு Australian Aid நிதியுதவியுடன் STEPS என்ற நிறுவனத்தின் ஊடாக Stanley Collegeஇல் நடை பெறுகின்றது. அது போல பல்கலை மாணவர்களுக்கும் உத்தியோகபூர்வமாக பயிற்சி நெறிகளை வழங்கலாம். நிதர்சன் முதலாவது Batchஇலும் அடுத்த Batch இல் நானும், தனுராஜனும் பல்கலைக்கழத்திற்கு வராமல் படித்திருந்தோம். இப்படி கற்பதற்கு ஏற்ற வகையில் நேரங்களை ஒதுக்கி தர வேண்டும் அதை விட்டு விட்டு அந்த நாள் பூராகவும் Universityயிலேயே கழிக்கும் வண்ணம் 3 Or 4 மணித்தியால இடைவெளியில் விரிவுரைகளை போடுவது நியாயமற்றது. 

தொழில் தேடி அலையும் போது Experience இருக்குதா எனக் கேட்க காரணம் ஏனைய பல்கலைக்கழகங்கள் Internship வழங்குகின்றது. அதை விட குறித்த விரிவுரைகளை முடித்து விட்டு Part Time வேலை செய்ய வசதிகளை உருவாக்கி தந்திருக்கின்றார்கள். இது போல யாழ் பல்கலைக்கழகமும் புத்தாக்கமான நடைமுறைகளை அமுல் படுத்தி ஏட்டுப் படிப்பைத் தாண்டிதொழில் வாய்ப்புக்களுக்கு ஏற்றவகையில் மாணாக்கர்களை Produce பண்ண வேண்டும்.

IQ,General Knowledge, கிரகித்தல், சுருக்கம், மொழித்திறன் சார்ந்த பயிற்சிகளை ஒவ்வொரு Semistersக்கும் கட்டாயமாக எடுக்க வேண்டிய Auxiliary பாடமாக மாற்றி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தொழில் வாய்ப்பிற்கு தயாரானவர்களாக பழக்கப் படுத்துதல் வேண்டும்.

Planning Degreeல தற்போது Internship வழங்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது மெச்சத்தக்க விடயம். அதே போல சிங்கள கற்கை நெறியை கற்பித்து அரச கரும மொழிகளுக்கு இணையான அங்கீகாரம் பெற்று அரச வேலைவாய்ப்பின் போது 2nd Language க்குரிய 100 நாள் கற்கை நெறியினை தொடர்வதற்கு பதிலாக உபயோகிப்பதற்கான முன்னேற்றகரமான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றமை பாராட்டுக்கு உரியது.

அதே போல மாணவர்களின் ஆளுமைத் திறனை வெளிப்படுத்தும் முகமாக Debates, வெவ்வேறு துறைகளில் உச்சம் தொட்டவர்களின் அனுபவப் பகிர்தலை இன்றைய சந்ததியினர் பெற Zoom வழிகாட்டல்களை மேற்கொண்டு வருவது வியத்தகு முன்னேற்றம். எங்கள் காலத்தில் இவ்வாறான வழிகாட்டல்களை பெறாமை துரதிஸ்டம். இன்றைய சந்ததி பல்கலை மாணவர்களை பாக்கியசாலிகள் என்பேன். இப்போதிருந்தே பல்கலைக் கழத்தின் பின்னர் எதிர் நோக்கவிருக்கின்ற சவால்கள் தொடர்பில் பூரண புரிதல் ஏற்பட்டிருக்கும். தாங்கள் எதிர் காலத்தில் என்னவாக மாறப் போகின்றோம் என இப்போதே வடிவமைத்துக் கொள்ள முயல்வார்கள். முன்னேற வேண்டுமானால் மற்றவர்கள் முதுகில் ஏறி இனி பயணிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்து இருப்பார்கள். 

Srilanka Administative Service, Planning Service, Inland Revenue Service போன்ற இன்னும் பிற நாடளாவிய சேவைகள் பற்றிய தெளிவு பெற்றிருப்பார்கள். அதற்கேற்ப தங்களை தயார் படுத்தி பயணிக்க எத்தனிப்பார்கள். அரச உயர் பதவிகளுக்கு வந்து நாட்டை ஒருபடி முன்னோக்கி நகர்த்து வகிபங்கினை சிறப்பாக மேற்கொள்ளுவார்கள்.

என்ன நோக்கத்திற்காக இந்த பூமிக்கு பட்டதாரிகளாக பிரசவிக்கப் பட்டோம் என்பதை உணர்ந்து அந்த நோக்கத்தை நிறைவேற்ற தங்களால் இயலுமான முயற்சிகளை செய்ய பிரயாசப்படுவார்களாக.

இனப்பாரபட்சம் என்று வளவாளர்களும், சுயநல கல்வியை ஆதரிப்பவர்களும் உங்களின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்டு தங்களைப் போன்ற சாதாரண மனிதர்களாக வாழவே உங்களையும் ஊக்கப்படுத்துவார்கள். தயவு செய்து அவர்களின் பொதுப் பிம்பத்துக்கு பலியாகாமல் பகுத்தறிவை பயன்படுத்தி உங்கள் உங்களது முன்னேற்றத்தில் அக்கறை காட்டிக் கொள்ளுங்கள். அத்தனை பேரும் கல்வி வியாபாரிகள் என்பதை உணர்ந்து உங்கள் காரியத்தில் கண்ணாய் இருந்து கொள்ளுங்கள்.

அதே வளவாளர்கள் தான் இப்பாரபட்சம் என SLAS Limted இல் சித்தியடையாத போது கை நீட்டியவர்கள் Openல சித்தியடைந்த போது எனது மாணவர்கள் என பெருமிதம் கொண்டமையை கவனிக்கத் தவறியிருப்பீர்கள்.





Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post