Srilanka Administrative Service Open Selected list Srilanka Administrative Service Open Selected list - examsguide.lk

 SLAS open Selected List

 >

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.







SLAS பாஸ் பண்ணுவதெல்லாம் குதிரைக்கொம்பு.அந்த வகையில் அத்தனை பட்டதாரிகளும் கலியாணம், கொண்டாட்டம்,பொழுதுபோக்கு என்று நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க அந்த மாயை உலகத்திலிருந்து நேரத்தை திருடிக்கொண்டவர்களால் தான் இது சாத்தியமாயிற்று.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகின்றேன். 

இலங்கை நிர்வாக சேவை ஏன் அத்தனை கீர்த்திமிகு சேவையாக விளங்குகின்றது?  என்ற சூட்சுமம் புரியாமல் நாம் கடந்து சென்றிருக்கின்றோம். காரணம் என்னவென்றால் பொதுவாக ஒரு திணைக்களத்தின் தலைவராக அதியுயர் பதவியாக Commissioner General,Director General போன்றதொரு பதவியே உருவாக்கப்பட்டுள்ளது ஏனைய இலங்கை நாடளாவிய சேவைகளுக்கு.. அந்த பதவி SLAS Additional Secretary post க்கு சமமானதாகும்.. SLAS Exam சித்தியடைந்து உள்நுழைபவர்களால் தான் பெரும்பாலும் Secretary Post க்கு முன்னேறிச் செல்ல முடியும். Secretary post தான் நிரந்தர பதவி வகிக்கும் அரச சேவையில் அதியுயர் பதவியாகும்.
ஆதலால் தான் பெரும்பான்மையான தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் வகை தொகையின்றி உள்வாங்கப்படாமல் உண்மையிலேயே அதீத திறமையுடையவர்களை மட்டுமே உள்வாங்குகின்றார்கள்.. SLAS limited இல் ஒரு முஸ்லிம்,தமிழர் கூட தெரிவு செய்யப்படாமைக்கான காரணம்.. SLAS Open ல தெரிவு செய்யப்பட்டவர்களை போல On the spot இல் திறமைகளை வெளிப்படுத்த முடியாமையும் ஒரு காரணம்.. அதை விட நிர்வாக கட்டமைப்புக்குள் Comfort Zone இல் இருந்து சோம்பியிருந்து சுயதேடல் இல்லாமல் வளவாளர்களின் எதிர்பார்க்கை வினாக்களையும்,Study materials யும் தங்கி வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் தான் என்பது கல்வி குழுமங்களில் போடப்படும் கேள்விகளை தீர்க்க கூடிய பதிலளிக்க கூடியவர்கள் இல்லாமையால் இந்த முடிவுக்கு வர உதவுகின்றது..


SLAS என்பது வரம்,பாக்கியம், தியாகத்துடன் பின்னிப் பிணைந்தது. Comfort Zone இல் இருப்பவர்களால் எப்படி முண்டியடித்து கொண்டு முன்னேற முடியும்? ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்கி படிக்கும் பொறுமை வேண்டும். சதா கல்வி பற்றிய சிந்தனையுடனே செயற்பட வேண்டும்.. அப்படி கற்றுத்தோற்றுப் போனவர்கள் இருக்க முடியாது என்பதே SLAS  open இல் தெரிவு செய்யப்பட்டவர்கள் விட்டுச்செல்லும் மகத்தான செய்தி..

ஆக இனியும் சோம்பியிராது அடுத்த கட்டம் நோக்கி முன்னோக்கி பயணியுங்கள் பார்ப்போம்.


Rank 6


https://www.facebook.com/silvestarkamalraj.kamalrajsilvestar

Rank 103

https://www.facebook.com/pathmanathan.parthipan

Rank- 52

https://www.facebook.com/guka.varathar

Rank-130

https://www.facebook.com/issath.thahir

Rank-70

https://www.facebook.com/ayma.nihmathulla

Ranks-69

https://www.facebook.com/kumananjuthayakumaran

Rank-65

https://www.facebook.com/tharmalingam.suvarna

Rank-49

https://www.facebook.com/krishana.suthatharan

Rank-51

https://www.facebook.com/jeevitha.Butterfly

Rank-108

Rank-157

Rank-170


Rank-29


Rank-80


https://www.facebook.com/abdul.baasithshafi



சிலோன் என்றழைக்கப்பட்ட இலங்கை பிரித்தானியர் வசமிருந்த காலப்பகுதியில் பொது நிர்வாக செயற்பாடுகளை இந்தியாவிலிருந்து கொண்டு மதுரை கிழக்கிந்திய கம்பனியின் உத்தியோகத்ர்கள் மேற்கொண்டு வந்தார்கள். இலங்கையின் நிர்வாக நடவடிக்கைகளை சரிவர அவர்களால் செயற்படுத்த முடியாமையினால் 1802இல் பிரித்தானியாவினால் இலங்கை நிர்வாக செயற்பாடுகளுக்கான உத்தியோகத்தர்கள் நியமிக்கப் பட்டார்கள்.

இச்சேவை பிரிட்டிஷ் சிவில் சேவையைப் போல வினைத்திறனாக நடைமுறைப்படுத்த 1833ஆம் ஆண்டு சிலோன் சிவில் Service என பெயர் இடப்பட்டது.

தற்போது வருமானத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினை போல 1963இல் பிராந்திய நிர்வாக அலுவலகர் சேவை காணப்பட்டது. அச்சேவையையும் இணைத்து சிலோன் நிர்வாக சேவையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1972ஆம் ஆண்டு தான் சிலோன் இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப் படுகின்றது. இலங்கை குடியரசு பிரகடனத்தின் பின்னர் தான் இலங்கை நிர்வாக சேவை என தற்போது பயன்டுத்தும் சொற்பிரயோகம் ஏற்றுக் கொள்ளப்பட்தோடு இன்று முதன்மையான சேவையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.













Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post