Paralympics at a Glance Paralympics at a Glance - examsguide.lk

2020 Summer Paralympics at a Glance













 

You have to wait 60 seconds.
Download Timer

Your download will begin in 60 seconds.





பரா ஒலிம்பிக்ஸ் என்பது எதாவது ஒரு விளையாட்டில் சிறப்புத்தேர்ச்சியுடையவராக இருந்தும் பிறப்பின் போதோ, மனித, இயற்கை அனர்த்தங்களினால் உடல் உறுப்புக்கள் பகுதியளவோ, முழுமையாகவோ செயலிழக்க செய்யப்பட்டு அன்றாட கடமைகளை மேற்கொள்ளவே சொல்லொண்ணா வலிகளை அனுபவித்துக் கொண்டு வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறமையுடையவர்களுக்காக நடத்தப்படும் சர்வதேச விளையாட்டு போட்டி. பராஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோடைகால ஒலிம்பிக்ஸ், குளிர்கால ஒலிம்பிக்ஸ் என்று தனித்தனியே நடாத்தப்படுகின்றன. 1960 ஆண்டில் இத்தாலி ரோம் நகரில் நடாத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியினைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பராஒலிம்பிக்ஸ் போட்டிகளே உலகளாவிய முதன் முதலான உத்தியோகபூர்வமான போட்டிகளாக கருதப்படுகின்றன. முதலாவது பரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம்-29, வெள்ளிப்பதக்கம்-28,வெண்கலப்பதக்கம்- 23 பெற்று இத்தாலி முதலாவது இடத்னைப் பெற்றது. 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரத்தில் நடாத்தப்பட்டது. இப்போது நடைபெறுவது பதினாறாவது கோடை கால ஒலிம்பிக் ஆகும். 2024ஆம் ஆண்டில் பிரான்ஸ் பாரிஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை இடம் பெறுகின்ற விளையாட்டுக்கள் 23. 2019ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டு இம்முறை பரா ஒலிம்பிக்ஸ்ல சேர்த்துக் கொள்ளப்பட்ட விளையாட்டுக்களாக Batminton, Taekwonda காணப்படுகின்றன. Taekwonda- கொரியா நாட்டினால் 1940களிவிருந்து விளையாடப்பட்டு வரும் தற்காப்பு கலையாகும். கராத்தே போன்றதாகும். Tae Kwon Do, Tae Kwon-Do, TKD Taekwon-Do என்றும் இந்த விளையாட்டு அறியப்படுகின்றது. இந்த முறை நடாத்தப்படும் பரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 162 நாடுகளிலிருந்து 4537 வீர வீராங்கனைகள் பங்கெடுக்கின்றனர். மொத்தம் 539 விளையாட்டு நிகழ்வுகள் ஓகஸ்ட் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 6 வரை நடை பெறவுள்ளது. Tokoyo 2020 நடைபெறவிருந்து கொவிட்-19 அனர்த்தம் காரணமாக 2021 இல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பரா ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கம். ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 16வது பராஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையானது முதலாவது தங்கப்பதக்கத்தை கையகப்படுத்தியுள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை நாட்டின் சார்பில் பங்கேற்ற பிரியந்த ஹேரத் தனது அபரித திறமையை வெளிப்படுத்தி தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். 67.79 மீற்றருக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்திருக்கின்றார்.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post