Limited Past Papers Limited Past Papers - examsguide.lk

 



Limited Exam எழுதுபவர்களுக்கு உபயோகமான நடைமுறை விதிகள்








இலங்கையின் அரச உத்தியோகத்தர்கள் 4வகைப்பிரிவினராக வகைப்படுத்தப்படுகின்றார்கள். Primary Level 10 ஆம் ஆண்டு வரையும் Secondary Level ல கல்விப்பொது சாதாரண தரம் சித்தியடைந்தவர்களுக்கான MN1 Post, உயர் தரம் சித்தியடைந்தவர்களுக்கானMN2 Post முகாமைத்துவ உதவியாளர் சேவை, கிராம உத்தியோகத்தர் சேவை என்பவற்றோடு தான் MN4 Development Officers,GE2 Teacher ஐயும் உள்ளடக்கி Secondary Level Post.  அதாவது O/L தகைமை,A/L தகைமையுடன் பட்டத்தகைமையையும் உள்ளடக்கி Secondary level post ஆக வரையறுத்திருக்கின்றார்கள். 

Tertiary Level Post ஆக Principal,Additional District Registrar,Social Service Officer என்ற MN5 இலிருந்து MN7 Supra Grade Administrative Officer வரை நிச்சயித்திருக்கின்றார்கள்.

இறுதியாக Senior Level post ஆக Executive Level Post- SL 1 Post இலிருந்து, SL2 Medical officer,SL5 Law Officer,SL3 Commissioner General,SL 4 Secretary என்ற வகைப்பிரிவினரையும்,நீதிபதிகள்,சட்டமா அதிபரையும் உள்ளடக்கியிருக்கின்றார்கள்.

மேற்குறித்த அத்தனை பேரும் நிரந்தர பதவி வகிக்கின்ற அரச உத்தியோகத்தர்கள். இருப்பினும் அதிகாரமும்,முன்னுரிமை சலுகைகளும் 5 வருடத்திற்கு ஒரு முறை ஆட்சியை பிடிக்கின்ற மக்களின் வாக்குகள் மூலமோ கட்சியின் தேசிய பட்டியல் மூலமோ சொகுசாக எவ்வித பிரயத்தனமும் இன்றி வருபவர்கள் உள்ளடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி,பிரதமர்,சபாநாயகர் என்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது.

உயர் போட்டிப்பரிட்சைகளுகக்கு பட்டத்தகைமை, பட்டத்தகைமையுடன்கூடிய வகுப்பு 1st class or 2nd Upper Qualifications கேட்டு எடுத்தாலும் அரசியல்வாதிகளின் தகைமை வாக்குகளை பெறுதலும் கட்சியினது நன்மதிப்பை பெற்றிருத்தலும் தான் தகைமையாக கொள்ளப்படுகின்றமை அபத்தம்.

இப்படியான நிர்வாக கட்டமைப்பு இருந்தால் நிரந்தர பதவி வகிக்கின்ற Senior Level Post இல் உள்ளடக்கப்பட்டுள்ள Executive  SL 1 post or Higher Post க்கு நம்மவர்கள் வருவதே காலத்தின் தேவை.. பல்கலைக்கழகங்களில் Semester Examsகளுக்கு எப்படி பகிர்ந்து படிப்போமோ அது போல தான் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்னரும் பகிர்ந்து படித்தால் தான் நம்மவர்கள் அரச உயர் பதவியை அலங்கரிக்க முடியும்.>

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.











Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post