International Affairs - Srilanka Administrative Service International Affairs - Srilanka Administrative Service - examsguide.lk



 உலகளாவிய போக்குகள்  


>

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.











Shibly Sir, Senior Lecturer தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். சுயநலமில்லாமல் அறிவைப் பகிர்கின்ற உன்னதமானவர்களில் முதன்மையானவர் என்பதால் தான் அவருடைய தேடல்களை தொகுத்து Pdf வடிவில் அத்தனை மாணவர்களுக்கும் சென்றடையும் வண்ணம் பொதுவில் பகிர்ந்திருக்கின்றார். Really Proud of you. Million thanks Sir. தோற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம், தமிழ் மாணவர்களை கைதூக்கி விட உங்களது சேவைகள் தொடரட்டும்.

பொதுவில் Lecturersமார் தங்கள் பல்கலைக்கழக மாணவர்களோடே, பல்கலைக்கழகத்துக்குள்ளேயே அறிவுப் பகிர்தலை முடக்கி விடுவார்கள். அதுவும் ஒரு வகையில் நல்லது தான். இல்லையேல் தங்களின் அதியுயர் கெளவரத்தை மாணாக்கர் என்ற பெயரில் கேள்விகள் சந்தேகங்கள் என்ற பெயரில் குதர்க்கமாக கேட்டு மானபங்கப் படுத்தி விடுவார்கள். அந்த வகைப்பிரிவினரோடு மல்லுக் கட்டுதல் என்பது சாதாரண விடயமில்லை. எப்படி பக்குவமாக பவ்வியமாக தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற வகைப்பிரிவினரை ஒரு போதும் திருப்திப் படுத்த முடியாது. அவர்களை எல்லாம் சுமூகமாக கையாண்டு தொடர்ந்தும் வழிகாட்டுதல் எல்லாம் ஆகச்சிறந்த திறமை தான். மாணவர்களை தான் சமாளித்தோம் என்றால் பிரபல வளவாளர்களின் கல்வி வியாபாரத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தால் போலி முகக்கணக்குகள் மூலம் குறிப்பிட்ட சிலர் படிப்பித்தது Examsக்கு வந்தது சிலர் படிப்பித்தது வந்தது என்றும் அவரிடம் படிக்காதீங்க என்ற வியாபார யுக்தியை கையாளுவார்கள். இப்படி பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு பயந்தே பல புத்திஜீவிகள் வழிகாட்டாமல் ஒதுங்கி விடுகின்றார்கள்.

இத்தனை சவால்களையும் கடந்து ஒருவரால் வழிகாட்டல் என்பது வியத்தகு ஆச்சரியம்.

கட்டாயம் இவ்வாறான புத்திஜீவிகள் கல்வி வியாபாரத்தை தாண்டி சுயநலமில்லாமல் வழிகாட்டல் காலத்தின் தேவை. ஏனென்றால் இன்றைய காலத்தில் வெளியிடப்படும் பரிட்சை முடிவுகள் முஸ்லிம் தமிழ் மாணவர்கள் முன்னைய காலங்களை போல் இல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களோ அல்லது ஒருவர் கூட சித்தி அடைய முடியாத அவலம் தொடர்கின்றது. இந்த தோற்றுப் போகும் நிலையை இவரைப் போன்ற உன்னதமான புத்தி ஜீவிகளால் மாத்திரமே சாத்தியம். இவர்கள் தொடர்ந்தும் வழிகாட்டி முன்னேற்றகரமான சமுதாயத்தை உருவாக்கி விட வேண்டும்.

இன்றைய மாணவர்களை இனப்பாரபட்சம், உயர் போட்டிப் பரிட்சைகளில் தமிழ், முஸ்லீம் மாணவர்கள் எடுபட முடியாது என்று எதிர் மறையான கருத்துக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். எவ்வித அனுபவமும் இல்லாமல் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே காலடி வைக்கின்ற மாணவர்களும் அதை நம்பி மனச் சோர்வடைந்து விடுகின்றனர். அந்த தன்னம்பிக்கையின்மையே தோல்வியைத் தேடித் தருகின்றது. இதனால் தமிழ், முஸ்லிம் மாணவர்களால் சாதாரண அரச உத்தியோகத்தையே பெற முடிகின்றது. உயர் பதவிகளில் அலங்கரிக்காமையினால் பெரும்பான்மையானவர்கள் மட்டுமே அந்த தீர்மானம் எடுக்கும் பதவிகளுக்கு வருகின்றார்கள். ஆக 50:50 அரசியல் உரிமைகளை எதிர்பார்த்து இழவு காத்த கிளி போல் ஏமாந்தது தான் மிச்சம். ஆனால் அரச உயர் பதவிகளில் 50:50 வந்தால் தான் ஏதாவது முன்னேற்றகரமான மாற்றம் உருவாகும். அதை விட்டு விட்டு கூச்சல் போட்டுக் கொண்டோ, அரசியல் வாதிகள் பெற்றுத்தருவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தோ எந்த பயனும் இல்லை என்பது கடந்த காலங்கள் விட்டுச் சென்ற மகத்தான செய்தி.

ஆக இனியாவது சோரம் போகாமல் தொடர்ந்தேர்ச்சியாகக் கற்றுக் கொள்ளுங்கோ. எது முடியாது என்று மற்றவர்களால் சொல்லப்படுகின்றதோ அதை செய்து காட்டக் கூடிய வல்லமை கொண்ட வயதை உடையவர்கள் . முடியாது என்று சொல்லக்கூடிய பல விடயங்கள் தான் முயற்சியாலும் பயிற்சியாலும் முடித்துக் காட்டி சாதித்து இருக்கின்றார்கள்.

அந்த சாதனையாளர்களில் நீங்களும் ஒருவராக மாறிக் காட்டுங்கோ பார்ப்போம்.
இல்லையேல் ஒலிம்பிக்கில் இலங்கை நாடு வெறுங்கையோடு திரும்பி வந்ததை போல தோற்றவர்களாக பழிச்சொல்லோடு திரிய வேண்டியது தான். அந்த நிலைமை மாற்றிக் காட்ட பாடசாலை மட்டத்தோடு, கோட்டை மட்டத்தோடு திறமையை முடக்காமல் தேசிய மட்டத்தில் திறமையை வெளிக்காட்டினால் தான் ஊடகங்கள் மூலம் வலம் வந்து வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆக சந்தர்ப்பங்களை கல்வியிலும், விளையாட்டிலும் நாம் தான் உருவாக்க வேண்டுமே ஒழிய யாரும் விருந்து வைத்து மட்டு மரியாதையோடு வாய்ப்புக்களை உருவாக்கித் தர மாட்டார்கள் என்பதை உணர்ந்து விடாமுயற்சியோடு, தன்னம்பிக்கையோடு தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபட்டால் தான் ஏதாவது நல்லது நடக்கும்.

வெற்றிக்கு தான் எல்லாரும் சொந்தக்காரர்கள். தோல்வியை ஒருவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தனியாகத் தான் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உணர்ந்து இவரைப் போன்ற புத்திஜீவிகளின் அறிவுப் பகிர்தலை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.







1) தொரின் தொரட்ட கப்ருக  திட்டம் என்பது யாது? 

40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் திட்டமே தொரின் தொரட்ட கப்புருவ என சிங்களத்தில் அழைக்கப்படுகின்றது. தமிழில் வீட்டுக்கு வீடு தென்னை மரம் என்பதாகும். 

இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை கெளரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையில் சிலாபம் தங்கொட்டுவ புஜ்ஜம்பொலவிலுள்ள வெலிகெட்டிய தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது

தேங்காய் அறுவடையை இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் விருத்தி செய்வதே இதன் பிரதானமான நோக்கமாகும்.

இதனை அமுல்படுத்தும் வகையில் நாடு முழுவதிலும் தென்னங்கன்று நடுகின்ற செயல்திட்டத்தை அமைச்சு,இராஜாங்க அமைச்சின் ஊடாக நடைமுறைபடுத்த  உத்தேசித்துள்ளனர். 

பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகளை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு அத்துடன் தென்னைப் பயிர்ச் செய்கை சபை ஆகியனஒன்றிணைந்து செயற்படுத்தவுள்ளன.

தென்னஞ்செய்கை அது சார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்கின்ற தேசிய கொள்கைப் பிரகடனத்தின் மூலம் விசேட அக்கறை செலுத்த தீர்மானித்துள்ளனர்.

 சமுர்த்திப் பயனாளிகளுக்கும் மற்றும் நிவாரண அடிப்படையிலும் அத்துடன் விரும்புகின்றவர்கள் கொள்வனவு செய்து நடுவதற்கு வழிவகைகளை மேற்கொண்டிருப்பதன் வாயிலாக நாற்பது இலட்சம் தேன்னங்கன்றுகளை நட்டு விருத்தி செய்கின்ற இலக்கை அடைந்து கொள்ளுமுகமாக மும்முரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

2) 28 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்ஜென்டினா அணி கைப்பற்றியுள்ள கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் எத்தனையாவது?

பிரேசில் நடைபெற்ற 47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து தொடர். 

ஆர்ஜென்டினா பிரேசிலை எதிர்த்து மோதிய Final match இல் பிரேசிலை தோற்கடித்து கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல் தடவையாக இரண்டு  அணிகளும் மோதிக்கொண்டதால் சுவாரசியமாக பார்வையாளர்களுக்கு விருந்தளித்தது.

ஆர்ஜன்டினா கால்பந்தாட் வீரர் First half time ல ஏஞ்சல் டி மரியா Goal பெற்றுக் கொடுத்து வெற்றி பெறுவதற்கு வழிசமைத்தார்.

Second half time இல் இரு அணிகளும் எந்த கோல்களையும் அடிக்க முடியாமல் போனமையால் Argentina வெற்றிவாகை சூடியது.


 

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post