How to Prepare for Competitive Exam - Important Tips & Tricks
Download Timer
Your download will begin in 60 seconds.
கேள்வி 1- இனி மேல் இலங்கை அரசாங்கம் அரச வேலை வாய்ப்பினை வழங்காதா?
ஆம்.இனிமேல் 8 ஆண்டுக்கு கீழ் படித்தவர்களுக்கு, O/L or A/L வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு என புதிதாக வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட மாட்டாது.
பட்டதாரிகளும் இனிமேல் பல்கலைக்கழகத்தை முடித்து Development Officer வேலை தா என போராட்டம் செய்து வேலையை பெற முடியாது
ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம் பெற்று இதுவரையும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படாத அனைத்து வேலைவாய்ப்புக்கான ஆட்சேர்ப்புக்களும் இடை நிறுத்தப் பட்டுள்ளது.
ஆக சுருங்கக் கூறின் போட்டிப்பரிட்சை, நேர்முகத் தேர்வு இன்றி யாரும் இந்த ஆட்சிக்காலம் முடியும் வரை வேலை வாய்ப்பினை பெற முடியாது.
ஆகவே போராட்டம் செய்து கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு செல்லாத வகையில் கல்வித்தகைமைகளை உயர்த்திக் கொள்ளுங்கள் .. ஒரே அமர்வில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சையில் கணிதம், தமிழ் ஆகிய இரண்டு பாடங்களில் C சித்தி வரும் வகையில் குறைந்தது ஆறு பாடங்களில் சித்தியை பெற்று வையுங்கள். ஆங்கிலமும் சில வேலைவாய்ப்புக்களுக்கு கோரப்படுவதால் Credit pass எடுத்து வையுங்கோ. அதே போல உயர்தர பரிட்சையிலும் மூன்று பாடங்களில் சித்தியை பெற்று Primary Level, Secondary Level Postக்கு உள்நுழைந்து கொள்ளுங்கள்.
திரும்பி கணிதம், தமிழ் C எடுக்க முடியாது என்பவர்கள் பல்கலைக்கழக பட்டத்தை பெற்றுக் கொள்ளுங்கள் O/L Maths, Tamil C உடன் கோரப்படுகின்ற எந்த போட்டிப்பரிட்சைகளும் எழுத முடியாது. ஆனால் பல்கலைத்தகைமை மட்டும் கேட்கின்ற எல்லா Exams உம் எழுதலாம். உதாரணத்திற்கு Srilanka Administrative Service, Srilanka Planning Service உட்பட அனைத்து உயர் போட்டிப் பரிட்சைகளுக்கும், மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர், Additional District Registrar போன்ற பட்டத்தகையோடு Call பண்ணுகின்ற எல்லா பரிட்சைகளும் எழுத முடியும்.
மிகையான வெற்றிடங்கள் இருந்தால் அந்த இடங்களை இனிவரும் காலங்களில் நிரப்ப Exams Call பண்ண மாட்டார்கள்... உதாரணத்திற்கு 50 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் மொத்தமாக 100 பேர் வேலை செய்தால் இனி 50 வெற்றிடம் வந்தாலும் புதிதாக Call பண்ண மாட்டார்கள். மிகை எண்ணிக்கையான நபர்களை கொண்டு வெற்றிடத்தை நிரப்பிக் கொள்வார்கள்.
ஆனால் உண்மையிலே வெற்றிடங்கள் இருந்தால் அந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பிக்க தான் வேண்டும் அதற்காக முன்னர் Call பண்ணிய Exams நடத்தப்படும். மிகை வெற்றிடமும் உள்ளடக்கி Call பண்ணியிருந்தால் வெற்றிடங்களை குறைப்பார்கள்.. வெற்றிடங்கள் உள்ள சேவைகளுக்கு Exam Application call பண்ணி தெரிவு செய்யப்படுபவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தகைமையானவர்களை நியமனம் செய்வார்கள்.
ஆகவே Call பண்ணிய Exams கட்டாயம் நடந்தே தீரும்.
Development Postஇற்கு உள்வாங்குவதற்காக பட்டதாரிப் பயிலுநர் என்று உள்வாங்கப்பட்டு பயிற்சி காலம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்யும் போது எப்படியோ அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தை வழங்குவார்கள். ஒரு வருடத்திற்கு பின் வழங்க வேண்டியதை ஒன்றரை வருடத்தின் பின்னரோ வழங்குவார்கள். ஆக இந்த வருடம் ஒரு வருட பூர்த்தி இடம் பெற்றாலும் அடுத்த வருடம் தான் பட்ஜெட்டின் மூலம் சம்பள ஒதுக்கீடு செய்து நியமனம் வழங்கப்படும்.
கேள்வி-03 போட்டிப்பரிட்சைகள் இரத்து செய்யப்படுமா? இனி Exams நடக்காதா?
போட்டிப் பரிட்சைகள் இரத்து செய்யப்படாது. முன்னர் கூறிய படி மிகை வெற்றிடங்களையும் சேர்த்து Call பண்ணியிருந்தால் வெற்றிட எண்ணிக்கை குறைப்பு வேண்டுமானால் நடைபெறலாம்.
Exams க்குரிய Timetable வெளியிடப்பட்டிருந்தால் பிற்போடப்படுமேயொழிய இரத்து செய்யப்பட மாட்டாது.
கொவிட் பாரிய அனர்த்தத்தின் காரணமாக அரச அலுவலங்கள் முற்றாகவோ பகுதியளவோ மூடப்பட்டு இருக்கின்றன. ஆகவே எப்போது 100% அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தல் தந்து தொடர்ந்தும் அமுல்படுத்துகின்றார்களோ அப்போது தான் Exams நடைபெறும்.
இது தான் Golden Opportunity இன்னும் பன்மடங்கு தயாராகிக் கொள்ளுங்கள்.
கேள்வி-04)
100% அரச நிறுவனங்களில் போட்டிப்பரிட்சை மூலம் தெரிவு செய்யப்படுகின்ற நியமனங்களை பணத்தை வழங்கி, அரசியல் செல்வாக்கின் மூலம் வேலை வாய்ப்பை பெற முடியுமா?
இன்றும் சிலர் 100% அரசாங்க நிறுவனங்களுக்கும் தனியார் துறையினரின் நிதி பங்களிப்போடு இயங்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றோம்..
100% அரச நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளம் மிகக் குறைவாகவே இருக்கும் உதாரணம்- பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், திணைக்களங்கள், அமைச்சுக்கள் போன்ற இன்னோரன்னவை.. இங்கே பணிபுரிகின்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை எடுத்துக் கொண்டால் புரியும். ஆதலால் தான் ஒவ்வொரு வகைப்பிரிவினரும் சம்பள முரண்பாடு, சம்பள உயர்வு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை முன்வைத்துக் கொண்டே இருக்கின்றனர். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு போராட்டம் சமகால எடுத்துக் காட்டாகும்.
தனியார் பங்களிப்போடு இயங்குகின்ற அரச நிறுவனங்கள் எவை என்று பார்த்தால் Board,Authority,Cooperation எடுத்துக்காட்டாக Srilanka Cricket Board, Port Authority, இலங்கை மின்சார சபை என குறிப்பிட்டுக் காட்ட முடியும்.
இப்போது விடயத்திற்கு வருவோம் 100% அரச நிறுவனங்களில் Senority அடிப்படையிலேயே பதவியுயர்வு வழங்கப்படும், போட்டிப்பரிட்சை, நேர்முகத்தேர்வின் மூலமே நியமனம் வழங்கப்படுகின்றன. 100% அரச நிறுவனங்களில் இனப்பாரபட்சம் என்ற கருத்தை கூற முடியாது. தனியார் துறையின் நிதிப்பங்களிப்பில் இயங்குகின்ற Srilanka Cricket Board போன்றவற்றில் இனப்பாரபட்டம் என குறிப்பிடுவது நியாயமானது. உதாரணத்திற்கு அண்மையில் மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட உயர் தலைமைப்பீட பதவி தனியார் பங்களிப்போடு இயங்குகின்ற அரச நிறுவனம். அதில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம், நியமனம் குடுக்கலாம்.
Semi governmentல இந்த விளையாட்டு நடைபெறும். உதாரணத்திற்கு University துணைவேந்தர் நியமனம். ஆட்சி செய்கின்ற கட்சிகள் தமக்கு சார்பானவர்களை இருத்தி அழகு பார்க்கும். பல்கலைக்கழகத்தில் பணிபுரின்ற அவர்களின் சம்பளமும் அதியுயர்வாகவே காணப்படும்.
ஆக 100% அரச நிறுவனங்களான Examination Department இன் கடமைகளாக பரிட்சைகளை தயாரித்தல்,நடாத்துதல், Paper திருத்துதல், பரிட்சை முடிவுகளை வெளியிடல் என்பன காணப்படுகின்றது. Public Service Commission அதற்கான அங்கீகாரத்தை பகிரங்கமாக வழங்குகின்றது.Public Admin Ministry. தங்களுக்கு கீழே உள்ளடங்குகின்ற Srilanka Administrative Service, Srilanka Engineering Service, Srilanka Scientific Service, Srilanka Accountant Service, Srilanka Planning Service, Srilanka Education Administrative Service,Sri Lanka Architectural Service
போன்ற இன்னோரன்ன நிறைவேற்றுத்தர பதவியினருக்கு நியமனங்களையும், இணைந்த சேவைகளான Sri Lanka Information & Communication Technology Service, Government Translators’ Service, Sri Lanka Librarians’ Service, Development Officers' Service, Combined Drivers’ Service, Office Employees’ Service பின்வனவற்றுக்கும் நியமனங்களை வழங்குகின்றது.
100% எழுத்து மூல, நேர்முகத்தேர்வு போட்டிப் பரிட்சை மூலம் தெரிவு செய்யப்படுகின்ற அரச நியமனங்களில் கூட காசை இறைத்து, அரசியல் செல்வாக்கின் மூலம் உள்நுழைய முடியும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒருவேளை Exam வைக்காமல் தெரிவு செய்யப்படும் நியமனங்களுக்கு மட்டும் முறையற்ற உள்வாங்கல் சாத்தியமாகும்.
ஏன் 100% அரச நிறுவனங்களில் எழுத்து மூல போட்டிப்பரிட்சைகளில் அரசியல் செல்வாக்கு, இனப்பாரபட்சம் தலையெடுக்க முடியாது என அழுத்தமாக குறிப்பிட முடியும்
போட்டிப்பரிட்சை கேள்வி- 05) வினாத்தாள்களை திருத்துபவர்கள் யார்?
1) இலங்கை கல்வியலாளர் சேவையினர்
2) Srilanka Teacher Educator Service
3) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்
4) உரிய பாடத்துறை சார்ந்த விடயப் புலமையோடு, மதிப்பீட்டிற்கான தகைமைகளை பூர்த்தி செய்கின்ற சிறப்புத்தேர்ச்சி பெற்ற அரசாங்க உத்தியோகத்தர்கள்
5) தீர்மானம் எடுக்கக்கூடிய நிறைவேற்றுத்தர உயர் பதவி வகைப்பிரிவினர்
ஆக இனப்பாரபட்சம் என கை நீட்டும் மாணவர்களுக்கும், வளவாளர்களுக்கும் இந்த நடைமுறை தெரியாது போல?
ஆக குறைபாடு மேற்படி தமிழ் மூல Paper திருத்துபவர்களில் இல்லை நம்மில் தான் காணப்படுகின்றது.
கேள்வி -06) நாங்கள் போட்டிப் பரிட்சைகளில் தோல்வியடையக் காரணங்கள் யாவை?
1) நேரம் போதாமை. IQ Examsகளுக்கு இந்த பிரச்சினை வந்தே தீரும். காரணம் போதியளவில் பயிற்சி பெறாமை. எத்தனையோ தமிழ் புத்தகங்கள் உள்ளன. இன்றும் கூட அத்தனை கேள்விகளுக்கு இலகு நுணுக்கத்துடன் பதிலளிக்க கூடிய வகையில் எமது முஸ்லிம், தமிழ் மாணவர்கள் தயாராகவில்லை.
2) பயத்தினால் கை நடுங்கும்.
போட்டிப் பரிட்சைகளுக்கு வழிகாட்டும் வளவாளர்கள் படிப்பிப்பதில் மட்டும் அதிகளவில் அக்கறை காட்டுகின்றார்கள். அதை பரிட்சித்து பார்ப்பதில் கூடிய கவனம் காட்டுவதில்லை. வேண்டுமானால் ஒரே ஒரு தடவை நடத்துவார்கள். நடத்தினாலும் நாம் பங்கேற்பதில்லை. காரணம் Marks குறைவாக வந்து அவமானப் பட வேண்டி வரும் என எந்த வித ஆயத்தங்களோ இல்லாமல் பரிட்சை Hall ல எழுதுற மாதிரியான அனுபவத்தை பெறாமல் போனால் நடுங்கத் தானே செய்யும்.
அதை விட எல்லாம் வீடியோக்கள் மூலம் கண்டு கழிக்க கூடியதாக இருப்பதாலும், Pdf, Image, Word மூலம் தேவையானவற்றை Print or Photocopy எடுக்கக்கூடிய நவீன முறைகளுக்கு பழக்கப்படுத்தி வருவதால் எழுதிப்படிக்காமல் Exam Hall ல தான் பேனாவை பிடித்தால் கை வலிக்கும், வேகமாக எழுத முடியாது. இது போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளோடு சேர்த்து பரிட்சையில் கேட்கப்படும் கேள்வியைப் பற்றி எவ்வித பொறியும் மூளையில் தட்டாத போது நடுக்கமும், பயமும் தானாகவே தொற்றிக் கொள்கின்றது.
3) பரிட்சைக்கு செல்லும் முன் படித்தல்.
பதட்டத்தை உருவாக்கும் காரணியாக Exam Hallக்கு செல்வதற்கு முதல் புத்தகங்களை, Notes, Tuites, மாதிரி வினாத்தாள்களை, எதிர்பார்க்கை வினாக்களை படித்து கொண்டிருக்கும் போது சக தோழமையோ Or Exam எழுத வந்திருக்கும் நபரோ இதைப் படித்தாயா அதைப் படித்தாயா? என்று தன்னம்பிக்கையை சீர்குலைத்து விடுவார்கள் .
4) தெரிந்த விடயங்கள் மறந்து போதல்.
IQ ஐ கூட பாஸ் பண்ணி விட்டால் பொது அறிவு காலை வாரி விட்ட சந்தர்ப்பங்களும் அதிகம் உண்டு. நமக்கு தெரிந்த விடயத்தை அதிகளவில் கரிசனை கொள்ளாத போதோ, திரும்பத் திரும்ப பயிற்சி செய்யாத போது நீண்ட கால ஞாபகத்திற்கு செல்லாமல் குறுங்கால ஞாபத்திற்கு செல்கின்றன. குறுங்கால ஞாபத்தில் உள்ள விடயங்கள் உடனேயே அழிந்து விடுகின்றன. ஒவ்வொரு நாளும் சாப்பிடுகின்ற சாப்பாட்டை குறித்த காலத்தின் பின் திரும்பி கேட்டால் சொல்ல முடியாது. காரணம் கரிசனை கொள்வதில்லை, ஞாபத்தில் வைத்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை ஆக குறுங்கால ஞாபகத்திற்கு சென்று அழிவடைந்து விடுகின்றன. ஆனால் தொலைபேசி இலக்கத்தையோ, ATM நம்பரையோ ஞாபத்தில் வைத்துக்கொள்ள பிரயத்தனம் செய்வதால் நீண்ட கால ஞாபகத்திற்கு செல்வதால் எவ்வளவு காலத்தின் பின்னரும் கேட்டால் சொல்ல முடிகின்றது.
குறுங்கால ஞாபகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அழிவடைவதால் தான் மனிதர்களாக நடமாடிக் கொண்டிருக்கின்றோம். அழிவடையா விட்டால் பைத்தியங்களாக தான் நடமாட வேண்டி வரும்.
5) அசமந்த போக்குடன் பரிட்சைக்கு செல்லுதல்.
போட்டிப் பரிட்சைகளுக்கு வழிகாட்டுகின்ற வளவாளர்கள் என்ன பதவியிலிருந்தாலும் அவர்களுடைய கருத்துக்கள் தான் வேதவாக்காக கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டு வருகின்றோம். எதிர்பார்க்கை வினாக்களை வருமென்று இன்றும் நம்பிக் கொண்டிருக்கின்றோம். அப்படி வந்தாலும் திரும்பி Exam Result Cancell பண்ணி மீண்டும் Exam நடைபெறும் என்ற யதார்த்த உண்மையை SLAS Open IQ Exam திரும்பி நடைபெற்றதையும், கிழக்கு மாகாண ஆங்கில HNDE பட்டதாரிகளின் பரிட்சை முடிவுகள் Cancell செய்யப்பட்டு மீளவும் நடைபெறப் போவதை குறிப்பிட முடியும்.
வளவாளர்களின் கருத்துக்களையே வேத வாக்காக கொள்வதால் சித்தி பெறும் போது என்னிடம் படித்த மாணவன் தான் பெருமிதம் கொண்டு விளம்பரப் படுத்துவதும் ஒருவர் கூட சித்தியடையாத போது தங்களின் குறைபாடுகளை மூடி மறைக்க இனப்பாரபட்சம் என கை நீட்டி விடுகின்றார்கள். தோற்றுப் போகின்றவர்களுக்கு வழிகாட்டுபவர்களின் கருத்துக்களே வேத வாக்கு என்பபதால் இனப்பாரபட்சம் என்ற பொதுப் பிம்பத்தை நம்பி தமிழ், முஸ்லிம்களை தெரிவு செய்ய மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றோம். அந்த எதிமாறான நம்பிக்கையே நம்மை தோற்கடிக்க துணை புரிகின்றது.
2017 நடந்த Inland Revenue Service Assistant Commissioner Post 30. 10,000 பட்டதாரிகளில் எழுதுறாங்க. அதில் பெரும்பான்மையிரான சிங்களவர்களை தான் எடுப்பார்கள் என்று நாமாகவே பொது முடிவுக்கு வந்த அத்தெனை கெட்டிக்காரர்களும் தோற்றுப் போனார்கள். பிறகு SLAS, SLPS இல் தான் தெரிவானார்கள்.
எண்ணிக்கையை வைத்து நீங்களாவே முடிவுக்கு வராதீர்கள். உண்மையிலே பயிற்சியின் மூலம் On the spot இல் என்ன கேள்வி வந்தாலும் பதிலளிக்க கூடிய வகையில் தயாராகியிருந்தால் எந்தஇனப்பாரபட்சமும் முட்டுக்கட்டை போட முடியாது. அரச உயர் போட்டிப் பரிட்சைகளில் முதன் முதலாக 50:50 Or அதை விட அதிகமாக முஸ்லிம், தமிழ் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிகழ்வு சம்பவித்திருந்தது.
காரணம் என்ன Post என்று தெரியாது, அதை விட 11 வருடத்திற்கு பிறகு வெளியால இருந்து எடுக்கின்றார்கள். இறுதியாக நடைபெற்ற பரிட்சை Tax Officers, Accessors ஆக இருந்தவர்களை Assistant Commissioner ஆக பதவியுயர்த்தும் Limited Exam அந்த Examsகளும் புதிதாக கோரப்பட்ட Examsகளுக்கும் சம்பந்தமில்லை. கேள்வியமைப்பு Exams Hall ல தான் தெரிய வந்தது. வளவாளர்களின் எதிர்பார்க்கை வினாக்களை, Model paperஐ நம்பி வந்த அத்தனை கெட்டிக்காரர்களும் தோற்றுப் போனார்கள்.
ஆக சுயதேடலுடன் நேரம் ஒதுக்கி படித்துக் கொள்வதோடு தன்னம்பிக்கையோடு Exam எழுதுங்கள்.
கேள்வி-7) போட்டிப் பரிட்சைகளில் வெற்றியடையக் கூடிய வழிவகைகள் யாவை?
1) கற்பதற்கான நோக்கத்தை முதலில் உருவாக்குங்கள்.
ஏன் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தை உருவாக்கினால் படிப்பு கசக்காது, இனிக்கும்.
யுத்தத்தின் கோரப் பிடியிலிருந்து மீண்டு வருதல் என்பதற்கு யுகங்கள் ஆகும் என்ற யதார்த்த உண்மை ஒரு பக்கம் இருக்க நடைபெறுகின்ற உயர் போட்டிப் பரிட்சைகளில் தமிழர்கள் சித்தியடைந்த அதிசயங்களும் நடந்த வண்ணமே இருந்தன. காரணம். ஏன் படிக்க வேண்டும்? ஏன் சித்தியடைய வேண்டும் என்ற நோக்கத்தை, இலக்கை உருவாக்கி அதை அடைய தியாகங்களோடு பிரயாசப் பட்டமையே காரணம். ஏனையோர் கலியாணம், கொண்டாட்டம், பொழுது போக்கு, முக நூல் என நேரத்தை வீணாக்கி கொள்ள யாரெல்லாம் இவற்றை தியாகம் செய்தார்களோ, நித்திரையை தியாகம் செய்தார்களோ அவர்களே தற்போது உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்க, ஒரு சாரார் இனப்பாரபட்சம் என கை நீட்டி ஆசுவாசப்படுத்திக் கொள்ள, இன்னொரு சாரார் தமிழ் மொழி மூல Paper திருத்துநர்கள் இறுக்கமாக திருத்தினார்கள் என்ற முற்சாய்வை வெளியிட, பிறிதொரு சாரார் நாங்கள் யுத்தத்தின் கோரப் பிடியிலிருந்து இப்போது தான் மீண்டு வந்து கொண்டு இருக்கின்றோம் சித்தியடைய யுகங்களாகும் என்கின்ற உளவியல் யதார்த்த உண்மையினை சுட்டிக் காட்டிக் கொண்டே எங்கள் முன்னேற்றங்களை நாங்களே தடை செய்து கொள்கின்றோம்.
ஆக ஏன் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தை முதலில் உருவாக்குங்கள்.
வீழ்ந்து கிடக்கும், தோற்றுப் போன சமுதாயத்தை கட்டியெழுப்ப தீர்மானம் எடுக்கக் கூடிய பதவிகளுக்கு வந்து வினைத்திறனான விளைதிறனான செயல் திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று படியுங்கள். முன்னையோர்களில் குறித்த துறை சார் அறிவின்மை, உத்தியோகத்தர்களை கண்காணிப்பதில் காட்டிய அசமந்தத்தால் வினைத்திறனற்ற அனர்த்தங்களை உருவாக்குகின்ற நகரத் திட்டமிடல் உருவாக்கப் பட்டுள்ளது. அதை சீர் செய்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என படியுங்கள்.
படித்தால் ஜெயிக்கலாம் என்று நம்பிக் கொண்டிருக்கும் சமுதாயக் கட்டமைப்பை சிதைக்க எத்தனிக்காமல், வேலை கேட்டு வீதிகளில் போராட்டங்களை மேற்கொள்ளாமல் வேலை வாய்ப்பை வழங்கக் கூடியவர்களாக தொழில் வல்லுநர்களாக உருவெடுங்கள். படிக்காதவர்களாலே தொழில் வாய்ப்பை வழங்க முடிகின்ற போது உயர் கல்வித் தகைமைகளை கொண்ட உங்களால் மட்டும் ஏன் முடியாது?
முதலில் நீங்கள் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
2) அதிகளவு நேரம் ஒதுக்கி ஒவ்வொரு நாளும் தொடர்ந்தேர்ச்சியாக படித்தல். முகநூல்களுக்கு வருவது Post Or தன்னுடைய Photoவை போட்டுட்டு எத்தனை லைக்ஸ் வருகுது, கொமண்ட் வருகுது என்று அடிக்கடி போனைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு நேரத்தை வீணாக்காமல் கல்வி குழுமங்களோடு செலவிட மட்டும் என வரையறுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் A/L Exam க்கு படித்ததைப் போல, எல்லாப் பாடங்களிலும் சம கரிசனை எடுத்து படித்ததைப் போல போட்டிப் பரிட்சைகளுக்கு தயாராகின்றவர்களும் படிக்க வேண்டும்.
3) அதிக சுய தேடல், இலங்கை, உலகளாவிய ரீதியில்பரந்த அறிவை வளர்த்தல்.
தயவு செய்து வளவாளர்களை மட்டும் நம்பி சோம்பியிருக்காமல் அவர்கள் படிப்பிக்கின்ற விடயங்களை பயிற்சி செய்வதோடு மேலதிகமாகவும் நீங்கள் Google, Youtube, Website மூலம் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள்.
அத்தனை சந்தேகங்களுக்கும் இவற்றில் பதில் உள்ளது. இதை விட தற்போது Quora என்ற இலத்திரனியல் ஊடகத்திலும் கேள்விகளை, சந்தேகங்களை பதிவிட்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்திய குழுமங்கள் IQ க்குரிய இலகு நுட்பங்கள், வழிமுறைகளை பொதுவில் பதிவிடுகின்றார்கள், அதே போல பொது அறிவினையும் தினந்தோறும் இற்றைப் படுத்தி வருகின்றனர். அவற்றில் தேவையானவற்றை குறித்து படித்து கொள்வது காலத்தின் கட்டாயம். IQ ல தோற்றுப் போன காலம் மாறி பொது அறிவுப் போட்டிப் பரிட்சையில் தோற்றுப் போகும் அவலம் தலை தூக்கி உள்ளது.
4) திரும்பத் திரும்ப கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக பயிற்சி செய்து கொள்ளல்.
நுண்ணறிவினை தொகுதி தொகுதியாக வகைப்படுத்தி பயிற்சி செய்து முழுமையாக சந்தேகமற தெளிவினைப் பெற்ற பின்னர் குறிப்பிட்ட கால இடை வெளியின் பின்னர் திரும்ப திரும்ப செய்து பழக்கத்திற்கு கொண்டு வாருங்கள். அதே போலத் தான் பொது அறிவினையும் கேள்விகளாக உருவாக்கி பயிற்சி செய்து 100% பிழை விடாமல் சரி எடுக்குமளவு ஞாபகத்திற் கொண்டு வந்த பின்னர் கிழமை அடிப்படையிலோ, மாத அடிப்படையிலோ மீளவும் செய்து நீண்ட கால நினைவகத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
5) சில நுணுக்கங்களை அனுபவசாலிகளிடமிருந்து, வெற்றியாளர்களிடமிருந்து அனுபவப் பகிர்வை பெற்று பின்பற்றுங்கள்.
உதாரணத்திற்கு ஆங்கில எழுத்துக்களை வரிசைக் கிரமமாக எழுதிய பின்னர் மேலிருந்தும் கீழிருந்தும் இலக்கங்களை ஒழுங்கு வரிசையில் Extra Sheet வாங்கியோ, மேசையிலோ எழுதி வைத்துக்கொள்ளுங்கள் Exam paper தர முதலே.
6) பதட்டமில்லாதவர்களாக இருக்க தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தயவு Exam எழுத முதலோ எழுதிய பின்னரோ சக தோழமைகளோடோ, Exam எழுத வந்தவர்களோடு Duscuss பண்ணுவதை அறவே தவிருங்கள். அந்த கேள்விக்கு இந்த விடை தான் வரும் என்று தான் சரியாக எழுதியதாக சொல்லி அடுத்த Exams களை சிறப்பாக செய்வதற்கான நம்பிக்கையை உடைத்து விடுவார். இதனால் தான் அரச உயர் போட்டிப் பரிட்சைகளில் முதல் பாடத்தோடோ அல்லது இரண்டாவது பாடத்தோடோ பலர் Exam Hall பக்கமே சமூகமளிப்பதில்லை.
7) கேட்கப்பட்ட வினாக்களுக்கு தரப்பட்ட வரிகளிலோ, பக்கங்களிலோ மட்டும் எழுதுங்கள். உங்கள் சுருங்கக்கூறும் திறமையை தான் Check பண்ண பரிட்சிக்கப்படுகின்றது என்பதை மனதில் கொண்டு Extra Paper வாங்கி வாங்கி எழுதுவதை தவிர்க்கவும்
8) எல்லாப் பாடங்களிலும் சமகரிசனை கொண்டு படித்துக் கொள்ளுங்கள். தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள கிரகித்தல், சுருக்கம் தானே அலட்சியப்படுத்தி தோற்றுப் போன பலரை தெரியும். எல்லா பாடத்திலும் சமகரிசனை கொண்டு படித்துக் கொள்ளுங்கோ. அதே போல IQ தானே Fail வருகுது என்று IQ ல புலமையடைந்து பொது அறிவில் கோட்டை விட்ட சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.
9) IQ கற்கும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். சில புத்தகங்கள் ஒரு மணித்தியாலத்திலோ, ஒன்றரை மணித்தியாலத்திலோ செய்யும் வண்ணம் நேரத்தை குறிப்பிட்டு கேள்விப்பத்திரங்களாக உருவாக்கியிருக்கின்றார்கள். நேரம் ஒதுக்கி அந்த வினாப்பத்திரங்களை ஒவ்வொரு நாளும் செய்து புலமையடைந்த பின்னர் புதிது புதிதாக கேள்வியை உருவாக்கியோ
ஏனைய Past papersஐ செய்து பழக்கத்திற்கு கொண்டு வாருங்கள்.
10) வினாக்களை முற்கூட்டியே ஊகிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். போன முறை Past paper ஐ எடுத்து கேள்விகளை எந்தக் கோணத்தில் போட்டிருக்கின்றார்கள் என வேறு தலைப்புக்களிலோ அதே தலைப்புக்களிலோ கேள்விகளை புதிதாக உருவாக்கி செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள்.
11) நுட்பமான முறையில் வினாக்களை தெரிவு செய்ய பயிற்சி பெறுங்கள். எடுத்துக்காட்டாக IQ Examஐ எடுத்துக் கொண்டால் இலகுவான கேள்விகள் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ தரப்பட்டிருக்கும். எங்கு தரப்பட்டுள்ளது என முதலில் தேடி சித்தி பெறுவதற்குரிய 40 Marksஐ முதலில் Score பண்ணி விட்டு பிறகு தெரியாத கேள்விகளை,கடினமான கேள்விகளை தொடுங்கள்.
12) எல்லா விதமான கேள்விகளுக்கும் விடையளிக்கும் வண்ணம் பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள்.
This test is very useful for all island service examiners
ReplyDeletePost a Comment
Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்