Google Form Google Form - examsguide.lk

 

 Google Form














Google Form என்பது தற்காலத்தில் பரிட்சைகளை வைத்து ஒவ்வொன்றாக Paper திருத்தி சரிபிழைகளை பார்த்து ஒவ்வொன்றுக்கும் புள்ளியிடலை வழங்கி நேரத்தையும்,மனித உழைப்பையும் இலகுவாக்கியிருக்கின்றது. உடனுக்குடனே Marksஐ Rank தரவரிசைப்படுத்தலுடன் வெளியிடுகின்றது. சுடச்சுட என்ற வார்த்தை பிரயோகத்தை வேண்டுமானால் உபயோகிக்க முடியும்.

Google Formsஇல் உள்ள பாதகமான விடயம் கொடுக்கப்படுகின்ற விடைகளை மாத்திரமே சரியாக காட்டும். மேலதிகமாக முற்றுப்புள்ளியோ,காற்குறியோ, எழுத்துப்பிழையோ,மேலதிக சொல்லோ,ஒத்த பதமோ வேறு ஏதாவது மேலதிகமாக சேர்த்தால் கூட பிழை என்று காட்டி விடும். 

ஆக Google Form தயாரிப்பது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது. இல்லையேல் சரியான விடையை போட்டும் பிழை காட்டுதே என தனிப்பதிவாகவே போட்டு ஆதங்கப்படுவார்கள். அதிகமாக பாதிக்கப்பட்டவர் பிரபல Admin தயாதீசன் தான்.. ஏன் என்றால் அவரைப் போல சுயநலமில்லாமல் தொடர்ந்தேர்ச்சியாக ஒவ்வொரு நாளும் இலங்கையிலுள்ள யாரும் இப்படி Google Forms போட்டதில்லை. போடவும் முடியாது.. அது சுயநலமில்லாமல் அறிவைப் பகிர்ந்து சமுதாயத்தை கைதூக்கி விட வேண்டும் என்ற உன்னதமானவர்களால் மட்டுமே சாத்தியம். 

இல்லா விட்டால் தயாதீசனது Google Forms எண்ணிக்கைக்கு கிட்ட நெருங்கா விட்டாலும் துளியளவாகவேனும் இடைவெளி விட்டு போடக்கூடியவர்கள் யாரென்று பார்த்தால் கல்வி வியாபாரிகளோ Or சுயநலமில்லாமல் அறிவை பகிர்வதாக வேடமிட்டுக் கொண்டு ஆட்சேர்த்து விட்டு ஒரு மாதத்தின் பின்னரோ Or ஒரு வருடத்தின் பின்னரோ வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகத் தான் இருக்க முடியும்.

இந்த என்னைப் போன்ற கல்வி வியாபாரிகளின் கொட்டத்தை அடக்குவது போல ஒரு தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் கூட அவர்களிடம் படித்து சித்தியடைய முடியாத அவலம் அரங்கேறியிருக்கின்றது. அத்தனைக்கும் காரணம் பட்டதாரிகளான நாம் சோம்பியிருக்கவும்,பிரபல வளவாளர்களிலும் தங்கியிருக்க பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம். ஆனால் ஜெயிப்பதற்கு சுயதேடலுடன் நேரம் ஒதுக்கி ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

யாரெல்லாம் நேரம் ஒதுக்கி தேடித்தேடி எல்லாவற்றையும் படிக்கின்றார்களோ அவர்கள் உயர்பதவியை அலங்கரிப்பதோடு இனப்பாரபட்சம் என்று நொண்டிச்சாட்டு சொல்லும் சகதோழமைகளுக்கு ஆதரவாக இருக்கவும், அவர்களின் மனதை புண்படுத்தாமலிருக்கவும் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள் or மெளனமாக கடந்து செல்கின்றார்கள்.

பார்ப்போம் இனி நம்மவர்களின் Performance எப்படி இருக்கின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post