General Knowledge 2 General Knowledge 2 - examsguide.lk

2021 General Knowledge -2

 >

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.








பொது அறிவு என்பது பரந்து பட்டது. 

வானத்து நட்சத்திரங்களை,கடற்கரை மணலை எண்ண முடியாததோ அதற்கு ஒப்பானது தான் போட்டிப்பரிட்சைகளில் உள்ளடக்கப்படும் General Knowledge வினாப்பத்திரமும். 


Exam Application போட்ட பின்னரோ, Admission வந்த பின்னரோ படித்து உயர் அரச போட்டிப்பரிட்சைகளில் சித்தியடைய முடியாது. பல்கலைக்கழக இறுதிப்பரிட்சையை முடித்து Thesis Submit பண்ணியவுடன் முழு மூச்சோடு படிக்க ஆரம்பிப்பது உத்தமம். பல்கலைக்கழக பட்டப்படிப்பின் போதே குறைந்தது 30 நிமிடங்களாவது அன்றாட செய்தித்தாள்கள், இலத்திரனியல் ஊடக செய்திகள், சமூக வலைத்தள கல்விக் குழுமங்களிலிருந்து தேவையானவை என கருதுபவற்றை தொடர்ந்தேர்ச்சியாக குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கத்தை உருவாக்குதல் நல்லம்.


Print எடுத்தல், Photocopy எடுத்தல் என்பது வீண்.. 1000 பக்கங்களை பத்திரமாக வைத்திருந்தாலும் படிக்காமல் இறுதியில் பூஞ்சணம் பிடித்து எறியவும், கறையான் அரித்து தீயிட்டு கொழுத்தப்படும் அவலம் தான் நிகழ்ந்தேறும் என அனுபவ வாயிலாக அறியத்தருகிறேன்.


நீங்களாக சுயமாக தேடி கேள்விகளை உருவாக்கி, Google வலைத்தளமோ அல்லது ஏனைய Source  ஊடாக விடைகளை பெற முயல்தல் தான் ஆரோக்கியமான கல்வி. இந்த நடைமுறை தான் நீண்ட கால ஞாபகத்தில் பதிய வைக்கக் கூடியது.


உருவாக்கிய கேள்விகளை காலக்கிரமத்தின் அடிப்படையில் பயிற்சி செய்து வந்தால் பரிட்சையின் போது உடனடியாக ஞாபகத்திற்கு வரும். இல்லா விடின் தெரிந்த கேள்வி ஆனால் விடை வர மாட்டேங்குது என்று அங்கலாய்க்க வேண்டியது தான்.


என்ன Exam க்கு தயாராகுகின்றீர்களோ அதற்குரிய Past papers or Model Papers ஐ எடுத்து அதைப்போல குறைந்த பட்சம் 50ஆவது வருடாந்தம் உருவாக்கி பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள்.. 


இந்த நடைமுறையை சிங்கள வளவாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

நம்மவர்களோ பக்கத்தையோ, பந்தியையோ,பெயர்களையோ,இலக்கத்தையோ மாற்றி விட்டு ஒரே விடயத்தையையே ஒவ்வொரு வருடம் அரைத்துக் கொண்டிருக்கின்றோம்.


புதிதாக கேள்விகளை உருவாக்கி பயிற்சி செய்யாத வகையில் எந்த கடவுள்களாலும் கூட தோற்றுப்போவதை தடுக்க முடியாது என்பதை நினைவிலிருத்தி தொடர்ந்தேர்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள். இந்த Golden Opportunity ஐ தவற விட்டு விடாதீர்கள்

Pdf Download செய்ய Click Here



Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post