General Knowledge 1 General Knowledge 1 - examsguide.lk
examsguide.lk


General Knowledge  I



>

You have to wait 60 seconds.
Download Timer

Your download will begin in 60 seconds.












பொதுஅறிவு என்பது பரந்துபட்ட விடயமாகும். அகண்ட பிரபஞ்சத்தில் நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நடைபெற போகின்ற அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிதாக காணப்படுகின்றது.

 பொது அறிவு முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சரி வேலைவாய்ப்பினை தேடும் இளைஞர் யுவதிகளுக்கும் சரி வேலை செய்பவர்களுக்கும் கூட தேவையான ஒன்றாக காணப்படுகின்றது. உயர்தர பரிட்சையில் பொது அறிவில் சித்தி அடையவில்லை எனின் பல்கலைகழக கல்வி எட்டாக்கனியாகி விடும். அரச தொழிலை பெற்றுக் கொள்ளவேண்டும் எனின்  இப் பாடம் சித்தி அடைதல் கட்டாயமாகும்.

 பொதுவாக அரச தொழிலை பெற 40 புள்ளிகள் இப் பாடத்தில் பெற வேண்டும். இது உலகம் சார்ந்த விடயமாக இருப்பதனால்  இக் கல்வி தொடர்பான குறிப்புக்களை வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, சஞ்சிகைகள், முக புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களில் பெற்றுக் கொள்ளலாம். இவற்றின் மூலம் நாம் நடப்பு விடயங்களை அறிந்து கொள்ளலாம்..

இவற்றினை குறிப்புக்கள் எடுப்பதன் மூலமும்  திரும்ப திரும்ப வாசித்து மனனம் செய்து  ஞாபக படுத்தி பார்ப்பதன் மூலம் Record செய்து அதனை திரும்பவும் கேட்பதன் மூலமும் பரிட்சையில் சிறப்பான புள்ளியை பெற முடியும். இந்த வினா வராது  அந்த கேள்வி வராது என்று நாமாகவே முடிவு செய்யாது அனைத்து விடயங்களையும்  கற்க வேண்டும். அனைத்து போட்டி பரிட்சைகளினது கடந்த கால வினாக்களை செய்து பார்க்க வேண்டும்.  

ஒரு விடயம் தெரிந்தால் அதை கொண்டு எவ்வாறான வினாக்களை கேட்பார்கள் என்று யோசித்து புதிய புதிய வினாக்களை நீங்களாக உருவாக்கி கொள்ள வேண்டும். பொது அறிவு தொடர்பாக இன்று பல ஆசிரியர்கள் நூல்கள் ஆக்கங்களை வெளியிட்டுள்ளனர் அவற்றை கற்பதன் ஊடாக நிறைய விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.

பொது அறிவு சார்ந்த கற்கை நெறிக்கு பெரிதும் Demand தற்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.  International Relationship என்ற பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக்கழகமும்,  பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தினால் International Relationship & Foreign Affairs என்ற பட்ட பின்படிப்பு டிப்ளோமா வழங்கப்படுகின்றது. 
Srilanka Foreign Service இல் நேர்முகப்பரிட்சையில் சித்தி பெற்று நியமனம் பெறுபவர் Post graduate Diploma or Degree Foreign Relationship சார்பில் முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாய தகைமையாகும்.



Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post