Current Affairs Current Affairs - examsguide.lk

 நடப்பு நிகழ்வுகள்

 >

You have to wait 60 seconds.
Download Timer

Your download will begin in 60 seconds.








கூட்டமைப்புக்கள்


பொதுநலவாய நாடுகள்


பொதுநலவாயம் என்பது Common wealth of Nations என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பிரித்தானியா பல குடியேற்ற நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கியது. அந்நாடுகளை தன்னுடைய பிணைப்பை கொண்டிருக்க விரும்பி பொது நலவாய அமைப்பை உருவாக்கியது. பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்த 53 உறுப்பு நாடுகளை கொண்ட அமைப்பு.
தலைமையகம் பிரித்தானியா, லண்டனின் மார்ல்பரோ மாளிகை. உத்தியோக பூர்வ மொழி ஆங்கிலம். தலைவராக இங்கிலாந்து அரசி எலிசபெத் மகாராணி.
2013 ஆம் ஆண்டு 48 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்த காம்பியா நாடு பொதுநலவாயத்திலிருந்து விலகிய நாடாகும்.

Regional Comprehensive Economic Partnership 

பிராந்திய பொருளாதார கூட்டமைப்பின் (Free Trade Agreement) திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்த முதல் நாடாக ஒப்புதல் தந்த நாடு- சிங்கப்பூர்.
 
Regional Comprehensive Economic Partnership Signed- 15th November 2020
Location - Hanoi, Vietnam
கையெழுத்திட்ட நாடுகள்- அவுஸ்ரேலியா, புருணை, கம்போடியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்.
Ratifiers- சீனா, ஜப்பான், சிங்கப்பூர்.
Depositary- Secretary General of the ASEAN


BIMSTEC - Bay of Bangal Initiative for Multi - Sectorial Technical and Economic Cooperation


வங்காள விரிகுடா பல்துறைத் தொழினுட்ப பொருளாதார கூட்டமைப்பு என்றே தமிழில் அழைக்கப்படுகின்றது.
BIMSTEC Secretariat- டாக்கா, பங்களாதேஷ்
உத்தியோகபூர்வ மொழி- ஆங்கிலம்
உறுப்புரிமை நாடுகள்- பங்களாதேஷ், பூட்டான், 
இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து

Leaders
Chairmanship- 2018 செப்டம்பரிலிருந்து இலங்கை
செயலாளர் நாயகம்- பூட்டான் நாட்டு Tenzin Lekphell.
முன்னாள் செயலாளர் நாயகம்- Shahidul Islam, பங்களாதேஸ்.
முதலாவது செயலாளர் நாயகம் என்ற பெருமிதத்திற்குரியவர் இலங்கையரான சுமித் நாகந்தல Sumith Nakandala.


உருவாக்கம்- 1997 ஆம் ஆண்டு யூன் மாதம் 6
Website- bimstec.org
ஆங்கில எழுத்து அகராதி வரிசைப்படி உறுப்புரிமை நாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கப் படுகின்றது. 
நிரந்தர செயலகம் பங்களாதேஸ்,டாக்காவே தொடர்ந்தும் இயங்கும்.
1997ஆம் ஆண்டு யூன் 6ஆம் திகதி புதிய உப பிராந்திய குழு தய்லாந்தின் பாங்கொக் நகரில் BIST - EC ஆக உருவாக்கப்பட்டது. பின்னர் தாய்லாந்து பாங்கொக்கில்  1997- டிசம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற Special Ministerial Meetingஇல்
மியன்மார் நாடும் இணைத்து கொள்ளப்பட்டு BIMST -EC ஆக மாற்றப்பட்டது. 
1998ஆம் ஆண்டு நேபாளம் பார்வையாளராக இணைந்து கொண்டது.
2004ஆம் ஆண்டு மாசி மாதம் நேபாளமும், பூட்டான் நாடும் பூரண உறுப்புரிமை நாடுகளாக்கப் பட்டன.

முக்கியமான 14 விடயம் பற்றி மேற்படி கூட்டமைப்பு அக்கறை காட்டி செயலாற்றுகின்றது. அவையாவன, 
1) வர்த்தகம் மற்றும் முதலீடு
2) போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்
3) Energy
4) உல்லாசப் பிரயாணத்துறை
5) தொழில் நுட்பம்
6) மீன் பிடித்துறை
7) விவசாயம்
8) பொதுச்சுகாதாரம்
9) வறுமை ஒழிப்பு
10) Counter - Terrorism and Transnational Crime
11) சுற்றுச் சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
12) People to People Contact
13) கலாச்சார கூட்டுறவு
14) காலநிலை மாற்றம்

மாநாடுகள் பற்றி தகவல்கள்
முதலாவது மாநாடு பாங்கொக், தாய்லாந்தில் 31.யூலை.2004 நடை பெற்றது

இரண்டாவது மாநாடு புது டில்லி, இந்தியாவில் 13.நவம்பர்.2008ல் நடாத்தப்பட்டது.

மூன்றாவது மகாநாடு Naypyidaw, மியன்மாரில் 4.March.2014 நடத்தப் பட்டது.

நான்காவது மாநாடு 30-31.ஓகஸ்ட்.2018 காத்மண்ட், நேபாளத்தில் நடைபெற்றது

ஐந்தாவது மாநாடு 2022 ஆண்டு கொழும்பு, இலங்கையில் நடை பெறவுள்ளது.


BIMSTEC நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் தலைமைத்துவத்தை பின்வருமாறு நோக்கலாம்.
நாடு      
 தலைமைத்துவம்

 Head of Government       Head of State

 பங்களாதேஷ்                                            பிரதமர்                             ஜனாதிபதி                ஷேக் ஹசீனா              Abdul Hamid


பூட்டான்                                                                                      பிரதமர்                            King                                        Lotay Tshering Jigme Khesar Wangchuck            

இந்தியா                                                                 பிரதமர்                              ஜனாதிபதி     நரேந்திர மோடி        ராம் நாத் கோவிந்த்


மியன்மார்   
ஜனாதிபதி 
Win Myint

நேபாளம்
பிரதம மந்திரி                     ஜனாதிபதி
Sher Bahadur Deuba Bidhya Devi Bhandari

இலங்கை
பிரதம மந்திரி                     ஜனாதிபதி                    மஹிந்த ராஜபக்ஸ         கோட்டபாய 

தாய்லாந்து
பிரதம மந்திரி                        King
Prayut Chan-O- Cha    Vajiralongkorn


Boao Form for Asia

2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இலாப நோக்கற்ற நிறுவனம்
தலைமையம் - Boao, Hainan,China Bejing (Secretariat)
தலைவர்- பான் கீ மூன்
செயலாளர் நாயகம்- Li Baodong
Asian Davos என்று சில சமயங்களில் அறியப்படுகின்றது.

Boao Form வருடாந்த Conference 2021 ஆண்டு தெற்கு சீனாவின் ஹைனாம் மாகாணத்திலுள்ள போவாவில் நடாத்தப் பட்டது.


ஒலிங்கிட்டோ

ஒலிங்கிட்டோ 2013 இல் கண்டு பிடிக்கப்பட்ட புதிய விலங்கு ஆகும். ஊன் உண்ணி, பாலூட்டி வகையை சேர்ந்தது. இரவு நேரத்தில் தன் உணவு தேடுகின்ற விலங்காகும். சிமித்சோனிய நிறுவனம் அமெரிக்கா கண்டத்தில் கண்டு பிடித்திருந்தது.

நாடுகள்

எகிப்து


3000 வருடங்கள் பழைமையான தங்க நகரம் எகிப்து நாட்டின் லக்ஸர் என்னும் இடத்தில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த நகரமானது வரலாற்றில் The Rise of Athen என அழைக்கப் படுகின்றது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தின் படி கிறிஸ்துவுக்கு முன் ஆட்சி செய்த Amenhotep iii அவர்களால் இந்த தங்க நகரம் உருவாக்கப் பட்டது.

இங்கிலாந்து

Automatic வாகனங்களை வீதிகளில் செல்வதற்கான வழிகாட்டலை முதன் முதலாக  வெளியிட்டுள்ள நாடு என்னும் பெருமையை இங்கிலாந்து பெறுகின்றது.

அவுஸ்ரேலியா

Seroja - புயல் தாக்கியது


காம்பியா

தலைநகரம்- பஞ்சுல் (Banjul)
பெரிய நகரம்- செரேகுண்டா
உத்தியோக பூர்வ மொழி- ஆங்கிலம்
ஜனாதிபதி- Adama Barrow
நாணயம்-டலாசி (GMD)

பார்வைக் குறைபாட்டிற்கு காரணியாக திகழும் 
Trachoma நோயினை முற்றாக இல்லாதொழித்த 2வது ஆபிரிக்க நாடு என்ற பெருமையை காம்பியா நாடு பெற்றுள்ளது.

Trachoma நோயினை இல்லாது ஒழித்த முதல் நாடு- கானா

Tranchoma நோயினை முற்றிலும் இல்லாது ஒழித்த உலகின் முதல் நாடு- ஓமான் நாடு

தென் கிழக்காசிய நாடுகளில் Tranchoma நோயினை இல்லாதொழித்த முதல் நாடு- நேபாளம்.


நியூசிலாந்து

புகையிலை, சிகரட் போன்ற போதைப்பொருட்கள் பாவனை இல்லா நாடாக 2025ஆம் ஆண்டிற்குள் மாற்றுவதாக நியூசிலாந்து நாட்டு அரசு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.


ரஸ்யா

2025ஆம் ஆண்டிற்குள் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கவுள்ள நாடு- ரஸ்யா

விளாடிமீர் புட்டின் 2036ஆம் ஆண்டு வரை ரஸ்ய ஜனாதிபதி பதவியில் நீடிக்கும் படியான அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ரஷ்ய மக்கள் ஆதரவாக வாக்களித்து 2036 வரை தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான ஆணையை வழங்கி இருக்கின்றார்கள். 

Capital- Moscow
உத்தியோக பூர்வ மொழி- ரஸ்யன்
ஜனாதிபதி- விளாடிமீர் புட்டின்
Prime Minister- Mikhail Mishustin
Currency- Russian Ruble


ஜோர்தான்

தலைநகர்- Amman
Official Language - Arabic
Monarach- Abdullah II
Prime Minister - Bisher Khasawneh
நாணயம்- JOD- Jordanian Dinar
ஜோர்தான் முடியரசின் நூறாவது ஆண்டு விழா 13 ஏப்ரல் 2021  கொண்டாடியது. 

நைஜர்

தலைநகரம்-Niamey 
உத்தியோகபூர்வ மொழி- பிரெஞ்ச்
Ethnic Groups- 50.9% Hausa
மதம்- 99.3% Islam
President - Mohamed Bazoum
Prime Minister - Ouhoumoudou Mahamadou.
நாணயம்- West African CFA Franc (XOF)

கியூபா

கியூபா வரலாற்று நாயகன் ராவூல் காஸ்ரோ கம்யூனிசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து  விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து கியூப President மிகுவல் தியாஸ் கேனல் கம்யூனிசியக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
First secretary and President- Miguel Diaz - Canel
Prime Minister- Manuel Marrero Cruz
நாணயம் - CUP - Cuban Peso
தலைநகரம்- ஹவானா.



கொசோவா

கொசோவா நாட்டின் ஐனாதிபதி- விஜோசா ஒஸ்மானி (Vjosa Osmani).
பிரதம மந்திரி- Albin Kurthi
தலைநகரம் மற்றும் பெரிய City- Pristina
Official Language- அல்பேனியன், சேர்பியன்.
Religion - 97.4% Islam.
Ethnic Group- 92% அல்பேனியன்.

இந்தோனேசியா-Aceh போராட்டக்குழு

2005 ஆம் ஆண்டு Aceh போராட்டக் குழுவிற்கும் இந்தோனேசியா நாட்டு அரசாங்கத்திற்கும் இடையே தொடர்ந்த முப்பது ஆண்டு கால போர் முடிவுக்கு கொண்டு வர பின்லாந்தின் தலைநகரமான ஹெல்சிங்கியில் அமைதி உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டது. இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தா. ஆட்சி மொழி இந்தோனேசிய மொழி. நாணயம் உருபியா.

பாலித்தீவுக் கடலுக்கடியில் நொறுங்கிய நிலையில் இந்தோனேசிய நீமூழ்கிக்கப்பல் KRI Nanggala-402 கண்டறியப்பட்டது.


ஈக்குவடார்

ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்து எடுக்கப் பட்டவர்-  Guillermo Laso.

Quito ஈக்குவடோர் நாட்டின் தலை நகரம் ஆகும்.

மிகப்பெரிய City- Guayaquil.

உத்தியோக பூர்வ மொழி- ஸ்பானிஸ்


பங்களாதேஷ்-ஷேக் முஜீபுர் ரஹ்மான்

1975ல் பங்களாதேஸ் நாட்டில் இடம் பெற்ற இராணுவப் புரட்சியினால் ஷேக் முஜீபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப் பட்டார்கள். பங்களாதேஸ் தலைநகரம் டாக்கா. ஆட்சி மொழி வங்காளம். நாணயம் வங்காள தேத் தாக்கா.


தென்கொரியா


தென்கொரியாவில் 1974ஆம் ஆண்டு அரச தலைவரான பார்க் சுங் கீ ஐ இலக்கு வைத்த தாக்குதலில் அவரின் மனைவி யூக் யுங் சூ கொல்லப்பட்டார்.
தென்கொரிய தலைநகர் சியோல்.ஆட்சி மொழி கொரிய மொழி. நாணயம் South Korean Won.
தென்கொரியா பிரதமர்- கிம் பூ - க்யூம்.

பஹ்ரைன்


பஹ்ரைன் பிரித்தானியாவிடமிருந்து 1971ல் விடுதலையடைந்தது.
பஹ்ரைன் தலைநகரம் மனாமா ஆகும்.
ஆட்சி மொழியாக அரபு மொழி காணப் படுன்றது. நாணயமாக பஹ்ரைன் தினார் பயன் படுத்தப்படுகின்றது. ஆகச்சிறந்த முத்து ஆபரணங்கள் கிடைக்கின்ற ஸ்தலமாக திகழ்ந்தது.


இந்தியா


1947ஆம் ஆண்டு இந்திய நாடு 190 ஆண்டுகால ஐக்கிய இராட்சியத்தின் ஆட்சியிலிருந்து விடுதலையடைந்து பொதுநலவாயத்தில் இணைந்து கொண்டது.

பாக்கிஸ்தான்-முஹம்மது அலி ஜின்னா

பாக்கிஸ்தான் நாட்டு முதலாவது ஆளுநராக 1947ஆம் ஆண்டு முஹம்மது அலி ஜின்னா கராச்சியில் பதவியை பொறுப்பேற்றார்.
உத்தியோக ப்பூர்வமாக பாக்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசாகும். தலைநகராக இஸ்லாமாபாத் திகழ்கின்றது. கராச்சி தொழில் நகரமாகவும் முக்கிய துறைமுகமாகவும் விளங்குகின்றது. ஆட்சி மொழியாக உருது காணப்படுகின்றது. அழைப்புக்குறி +92.
6 வது அதி கூடிய மக்கள் தொகை கொண்ட நாடாகும். புதிய கற்காலத்தின் மெஹெர்கர், வெண்கல காலத்தினுடைய சிந்து வெளி நாகரிமும் இப்போது பாக்கிஸ்தானாக சுட்டப்படும் பகுதியில் காணப்பட்ட தொன்மையான நகரங்களாகும்.

கொங்கோ

1963இல் கொங்கோ குடியரசு ஆட்சியாளர்
புல்பர்ட் யூலோ ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கொங்கோ நாட்டின் தலைநகரமாக பிராசவல்லி விளங்குகின்றது. ஆட்சி மொழி பிரெஞ்ச் ஆகும். நாணயம் XAF - மத்திய ஆபிரிக்க பிராங்க்.

கிரிக்கெட்

Sir Richard Hadlee Medal 

நியூசிலாந்து கிரிக்கெட் சபையினால் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான Sir Richard Hadlee Medal விருது வழங்கப்படுகின்றது. நான்காவது தடவையாக பெற்றுக் கொள்பவர் கேன் வில்லியம்சன் ஆவார்.


விஸ்டன் சஞ்சிகை

விஸ்டன் சஞ்சிகை கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படுகின்றது. One day Cricket Match ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகள் நிறைவை 2021ஆம் ஆண்டு கொண்டாடுகின்றது. 
1971 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பத்து ஆண்டுகளில் சிறப்பான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீரர்களை தெரிவு செய்து கெளரவித்து வருகின்றது.
1970களில்- விவியன் ரிச்சர்ட்ஸ் (West Indies)
1980களில்- கபில் தேவ் (India)
1990களில்- சச்சின் டெண்டுல்கர் (India)
2000களில்- முரளி தரன் (Sri Lanka)
2010களில்- விராட் ஹோலி (India)
சிறப்பான வீரர்களாக விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப் பட்டுள்ளர்.


International Cricket Council

மார்ச் மாதத்திற்கான International Cricket Council சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை இந்திய வேகப்பந்து வீச்சாளார் புவனேஸ்குமார் கையகப் படுத்தியுள்ளார்.

Indian Premier League- IPL 


Indian Premier League- IPL போட்டிகளில் 350 Sixes கடந்த முதலாவது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெயில் தன்வசப்படுத்தியுள்ளார்.

ஐபில் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த முதலாவது துடுப்பாட்ட வீரராக இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் ஹோலி வந்து  சாதனை படைத்துள்ளார்.












Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post