Competitive Exams Competitive Exams - examsguide.lk

Competitive Exams for Jobs




இன்றைய காலகட்டத்தில் போட்டிப்பரிட்சைகள் தான் வாழ்க்கையினை மிகச்சிறப்பாக வடிவமைத்துக் கொள்வதற்கான இயல்தகவை வழங்குகின்றன... 

முன்னைய காலங்களில் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டத்தை பெற்றிருந்தால் இயல்பாக வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம் என கலம் காலமாக கடத்தப்பட்டிருந்த முற்சாய்வு தற்காலத்தில் பொய்த்துள்ளமை 100 நாட்களுக்கு மேல் வேலைவாய்ப்பை தாருங்கள் என்று வீதியோரங்களில் போராடிய பட்டதாரிகளே அதற்கு சான்றாவணங்கள்.

பட்டப்படிப்பை முடித்திருந்தால் கூட இலகுவில் வேலைவாய்ப்பை பெறுவற்கு கல்விப் பொது சாதாரண தரப்பரிட்சையில் தமிழ்,கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச்சித்தி இல்லாமல் பல போட்டிப்பரிட்சைகளுக்கு தோற்ற முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.. இல்லையேல் பட்டத்தகைமையோடு விண்ணப்பம் கோரப்படும் பரிட்சைகளுக்கு மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பித்து விட்டோம் என்று மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அந்தந்த போட்டிப்பரிட்சைகளுக்கு ஏற்றாற் போல தேடிக்கற்று தயாராக இருக்க வேண்டும். அதிலும் உயர் போட்டிப்பரிட்சைகளுக்கு தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது குதிரைக்கொம்பு. காரணம் சுயதேடல் இன்மை,நேரம் ஒதுக்கி கற்காமை, வளவாளர்களையும்,எதிர்பார்க்கை வினாக்களை மட்டும் தங்கியிருத்தல்.

அதை விட கவலைக்குரிய விடயம் என்னவென்றால் மொழித்திறன், கிரகித்தல்,சுருக்கம் போன்றவற்றை உள்ளடக்கிய பரிட்சையில் கூட சித்தியடையாமல் தோற்றுப்போகின்ற நிலைமை உருவெடுத்துள்ளது.

தத்தமது சொந்த மொழியிலேயே, தாய் மொழியாம் தமிழ் மொழியிலேயே தோற்றுப் போவது என்பது மிகப்பெரும் சாபக்கேடு.
 
நீங்களும் என்னைப்போல தோற்றுப்போய் பழிச்சொல்லை சுமக்காமலிருக்க பயிற்சி செய்து கொள்ளுங்கள்..அதை google Forms இலகுபடுத்தியிருக்கின்றது..Auto Correction தொழினுட்பம் மூலம் உடனுக்குடன் பெறுபேற்றை பெறக்கூடிய வழிவகையும் காணப்படுகின்றமை மிகப்பெரும் முன்னேற்றம்.

இனியும் சோம்பியிருந்து தோற்றுப்போகாமல் இருக்க எங்கெல்லாம் மொழித்திறன் Google form கண்ணில் படுகின்றதோ உடனேயே அக்கணமே அவற்றை செய்து பயிற்சி பெற்றுக்கொள்ளல் உத்தமம்.

உதவி கல்வி பணிப்பாளர் ரஞ்சன் சேர் அவர்கள் தமது வேலைப்பழுவின் மத்தியிலும் இவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது.. மொழித்திறன் புலமை வாய்ந்தவர்களூடாகவும் Google forms ஐ ஒழுங்கமைத்து வெளியிடுதல் மெச்சத்தக்க செயல். எண்ணிலடங்கா நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பேரானந்தம்.. இவரைப் போன்ற கல்வியை வியாபாரப் பொருளாக நோக்காத உன்னதமானவர்களே உயர் அரச பதவிகளுக்கு வருதல் காலத்தின் கட்டாயம்







Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post