Binura Fernando- Srilanka National Team Cricket Player Binura Fernando- Srilanka National Team Cricket Player - examsguide.lk

 Binura Fernando

 >

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.






இலங்கையில LPL Match ஒன்று நடந்தது... அது தொடர்பில் Jaffna Stallians அணி சார்பில் விளையாடிய பெறுபேறுகள் முகம் சுளிக்க கூடியதாக இருந்த ஒருவர் தற்போது இலங்கை அணி தேசிய வீரர்..அந்த Statics ஐ கண்டு கொள்ளப்படாமல் மூளையிருந்தும் சிந்திக்க தெரியாதவர்களாக கடந்து போன பதிவை பற்றியது.. யாராக இருக்கும் என ஊகிக்க முடிகின்றதா?? வண்டை வண்டையாக நடிகர் நடிகர்களை கொண்டாடுவதையும், 5 மணிக்கு Live இல் சந்திக்கின்றேன் என்பதையும் மட்டுமே கவனிக்கும் மிக அற்புதமான புத்திஜீவிகளே.. கொண்டாடுவது அவரை உச்சத்தில் கொண்டு போய் விடுவதை போல பிழைகளை சுட்டிக்காட்டி உரிய திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பு சென்றடையா வண்ணம் தடுக்கும் சாபத்தை இலங்கையராக நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கியுள்ளீர்கள்... என்னவாக இருக்கும்  யாரைப் பற்றி சொல்கின்றேன்? எதை ஒப்பிடுகின்றேன் என கிரிக்கெட் விளையாட்டை பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள் பார்ப்போம்.

https://superfans.jaffnastallions.com/?kw=jaffna%20stallions

Jaffna Stallions LPL முதலாவது தொடரில் கிண்ணத்தை தனதாக்கிய அணி.. 2 வது Match காலி கிளேடியட்டர்ஸ் அணிக்கெதிராக விளையாடி https://en.m.wikipedia.org/wiki/Binura_Fernando Binura Fernando மூன்று ஓவருக்கு 27 ஓட்டங்களை வழங்கியிருக்கின்றார்.எந்த விக்கெட்டும் கைப்பற்றவில்லை.

5வது Match தம்புள்ள விக்கின்ஸ் க்கு எதிராக விளையாடி 4 ஓவருக்கு 41 ஓட்டங்களோடு 2 விக்கட்டை கைப்பற்றியுள்ளார்.

11 வது Match கொழும்போடு விளையாடி 4 ஓவருக்கு 41 ஓட்டங்களை வாரி வழங்கியவராக காணப்படுகின்றார்.. 4 ஓவர்கள் பந்து வீசிய ஏனைய பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்த ஒரேயொருவர் மட்டும் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை 29 Runs 1 Wicket ஐ கைப்பற்றி இருக்கின்றார். வேற யாரு நம்ம புள்ளைங்க Vijayakanth Viyaskanth தான்.

https://www.espncricinfo.com/player/vijayakanth-viyaskanth-1153149

4 ஓவர் பந்து வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 41 ஓட்டங்களை அள்ளிக் கொடுத்த Binura Fernando தன் தோல்விக்கான காரணி என்று தேவையில்லாத ஆணி என்று 15வது Match இல் வாய்ப்பு கொடுக்கவில்லை. 

15 வது Match இல் தம்புள்ள விக்கின்ஸ்க்கு எதிராக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட விஜஸ்காந் 1 ஓவருக்கு 5 ஓட்டங்களை மட்டுமே கொடுக்கின்றார் விக்கெட் எதுவுமில்லாமல்ரர மழை காரணமாக 7 ஓவர் லயே Match வெற்றி தோல்வியின்றி முடிடைகின்றது...  

விஜஸ்காந் 16 வது போட்டியில் 2 ஓவருக்கு 18 Runs விக்கெட் இல்லாமல் சுரங்க லக்மால் விக்கெட்டுடன் 18 ஓட்டங்கள்.. 

இத்துடன் விஜஸ்காந்தின் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் Binura Fernando வை கொழும்புக்கு எதிராக களமிறக்க. மீண்டும் தோல்விக்கு காரணமாக விளங்குகின்றார். 2 ஓவர்கள் வீசி 33 Runகளை தெளிக்கின்றார்.. பந்துவீச்சாளர்களின் ஓட்ட எண்ணிக்கையில் இதுவே அதியுயர் ஓட்டம்.. ஆனாலும் இலங்கை தேசிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்.. 

என்னவாகவிருக்கும் என்று புரிய வில்லை ..  மோசமான பெறுபேறுகள் வழங்கினாலும் மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது ஏன்.. இன்னொரு தமிழ் Speed Bowler அணியில் இருந்தார் தானே? அவருக்கு ஒரு சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை.. விளையாட்டை பற்றி தெரிந்தவர்களின் மெளனம் பேராபத்து..இனியாவது மெளனத்தை கலையுங்கோ

புரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கோ.. இந்தியாவிலும் IPL நடக்குது.. மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் குடுப்பார்களா?



https://drive.google.com/file/d/136yoKKKaW1CYfQgyR_wZXOjm2lyN0ew5/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/13AdbrwmwXyu4cowjqR4t501Wh8fOlSLV/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/13CsKp0ty-Ev1MM-G_hDyGXUSb6YFQQp-/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/13E4usWApSyhHNUSdiBx_OeQhSzSVot1Y/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/13Gcv5CdmUdAgowSwyU3zehvQrYNndGjx/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/13L2kYozI4mYDWl_XXtSbi8CwNEeoI-X_/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/13M85CRE5NQB2oxkSyC3R1QJy0woxNiuw/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/1363Achkyqk9qf9uj76C2gImbGEOcnq25/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/131VXzpXZWWxXGnBDjpnna6TH5_Gaph2Z/view?usp=drivesdk

தமிழ் முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கு திறமையில்லையா என்ற கேள்வியைத் தொடுத்தால் திறமையிருக்கின்றது. ஆனால் வெளிப்படுத்த முடியாமல் தங்களுக்குள்ளேயே புதைக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாது நேர்த்தியான மைதானமின்மை, விசாலமான மைதான ஒழுங்கேற்பாடுகள் இன்மை, ஆகச்சிறந்த பயிற்றுவிப்பாளர்களின் மட்டுப்பாடுகள், ஊக்கப்படுத்த Sponsor பண்ண விளம்பரதாரர்கள் முன்வராமை,தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கு, ஏனைய நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு குடுக்கும் முக்கியத்துவத்தை நமது முஸ்லிம்,தமிழ் விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கத் தவறி விடுகின்றோம். இவ்வாறு இன்னோரன்ன பிரச்சினைகளை முன்வைக்க முடியும்.

எது எப்படியோ எமது தமிழ் முஸ்லிம் விளையாட்டு வீரர்களும் இலங்கை தேசிய அணியில் இடம் பெறும் வரை எமது ஆதங்கங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இனப்பாரபட்சம் என்று முற்றிலும் சொல்ல முடியாத படி இலங்கை Football National Team இல் தமிழ்,முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் பலர் இணைந்து தொடர்ச்சியாக விளையாடி வருகின்றமை வியப்புக்குரியது. ஆகவே உண்மையிலே திறமையிருந்தால் எப்படியாவது வாய்ப்பு வழங்கப்படும் என்பது இயற்கையின் நியதி. அந்த வகையில் விஜயஸ்காந்த்க்கு Lanka premier லீக்கில் வாய்ப்பு வழங்கப்பட்டதை போல உங்களுக்கு வழங்கப்படலாம்.. அதனால் எப்போது வேண்டுமானாலும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.. எப்போதும் தயார் நிலையிலேயே இருந்து கொள்ளுங்கோ. 

தென்னிந்திய சினிமா நடிகர், நடிகைகளுக்கு அடுத்ததாக இன்றைய சந்ததியினர் மட்டுமல்லாது, முன்னைய சந்ததியினரும் Follow பண்ணுகின்ற நபர்களாக விளையாட்டு வீரர்கள் காணப் படுகின்றார்கள். ஏதொவொரு ஈர்ப்பு அவர்களிடத்தே சாதகமாகவோ, பாதகமாகவோ காணப்பட்டுக் கொண்டே வருகின்றது. ஏதாவதொரு விளையாட்டில் சோபித்து தங்களையும் மற்றவர்கள் Follow பண்ண வேண்டுமென்றே விரும்புகின்றார்கள்.


ஆனால் இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் கால்பந்தாட்ட விளையாட்டை விட ஏனைய விளையாட்டுக்களுக்கு தமிழ், முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் உள்வாங்கப்படுவது அரிதிலும் அரிது. உண்மையிலே திறமையான விளையாட்டு வீரர்கள் இல்லையா? என்ற கேள்விக்குரிய பதில் பதக்கத்தை, உலக கிண்ண கோப்பையை பெற்றுத் தரக் கூடிய மகத்தான திறமையுடையவர்கள் இருக்கின்றார்கள். 


ஆனால் அவர்களின் திறமையை வெளிப்படுத்தக் கூடிய களம் அமைத்துக் கொடுக்கப் படுகின்றதா? என்றால் இல்லையென்றே பதில் அமையும்.


எங்களுடைய தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் கிடைக்க முடியாத விடயங்களில் அக்கறை காட்டுவதிலேயே மும்முரமாக நிற்கின்றார்களோ தவிர, புத்திசாதுரித்தனமாக காய் நகர்த்தி அபிவிருத்தியை பெற்றுத்தர முனைகின்றார்கள் இல்லை. விளையாட்டு மைதானத்திற்குரிய போதிய வசதிகள், ஒழுங்கமைப்புக்கள் இல்லாமலிருக்கின்றது. அதை பெற்றுக் கொடுக்கலாம். அதை எந்த ஆட்சியாளர்களும் மறுப்பதில்லை. விளையாட்டு வீரர்களுக்குரிய பயிற்சிகளுக்குரிய நிதிவசதியை, பயிற்சியாளர்களை பெற்றுக் கொடுக்கலாம். மீயுயர் திறமையுடையவர்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி அணியில் இடம் பிடிக்க வழிசமைக்கலாம்.


கல்வியில் உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மலையக மாகாணங்கள் இறுதி நிலையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. படிப்பிற்கு மூளையும் இணைந்து பயணித்தால் தான் சரிவரும். யுத்தப் பாதிப்பால் தாய், தந்தை சகோதரர்களை உறவினர்களை கண்ணெதிரே இழந்த அவலத்தால் கல்வியில் பின்னடைவை சந்தித்திருக்கின்றோம். 


ஆக கல்வி நம்மவர்களுக்கு சரி வராது, உயர் தரப்பரிட்சை பெறுபேற்றிலயே இறுதி நிலையில் வரும் போது அரச உயர் போட்டிப் பரிட்சைகளுக்கு பல்கலைக்கழகம் புகுந்த திறமையானவர்களுக்கு மத்தியில் 50:50 எதிர் பார்க்க முடியாது. ஆக விருப்புடன் படிக்கின்ற, உயர் பதவிகளுக்கு வந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என பெருமிதத்தை பெற விரும்புகின்ற விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் தாங்களாகவே இந்த உயரங்களுக்கு வந்தடைவார்கள். ஏனையவர்களை உயர் பதவிகளுக்கு வாருங்கள் என்று Egoவை தட்டி விடக்கூடிய முற்சாய்வுகளை திணிக்க முடியாது. ஏனெனில் யுத்த அவலத்திலிருந்து மீண்டெழ நீண்ட காலங்கள் எடுக்கும். ஆக கல்வியால் முதன்மை பெறுவது சாத்தியமாகாது. அரசியலும் சுட்டுப் போட்டாலும் இராஜதந்திரம் நம்மவர்களுக்கு வராது.


ஆக தமிழ், முஸ்லிம்கள் தங்கள் இருப்பை விளையாட்டின் மூலம் தான் தக்க வைக்க வேண்டும். அதற்குரிய வழி வகைகளை தான் விளையாட்டின் மீது பேரன்பு உடையவர்கள் மேற் கொள்ள வேண்டும்.


LPLஇல் விஜயஸ்காந்துக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இன்னும் சிரத்தையெடுத்து மேற்கொண்டிருந்தால் இன்று கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருப்பதோடு பலரும் உள்நுழைய காரணமாக இருந்திருப்பான். மோசமான பெறுபேற்றை வழங்கா விடினும் தீர்மானம் எடுக்க கூடிய போட்டியில் விக்கெட்டை வீழ்த்தியிருக்க வேண்டும் அல்லது Runs ஐ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து Fielding லயும் Batting லயும் சோபித்திருந்தால் இந்த பதிவே தேவையற்றது. ஆனால் பதட்டம். பெரிய மைதானத்தில் விளையாடி பழக்கமில்லாமை, வெளிநாட்டு பிரபல வீரர்களோடு இணைந்தோ, எதிர் கொண்டோ விளையாடாதமையாலும், இரவில் Focus வெளிச்சத்தில் விளையாடி பழக்கப்படாமை பதட்டத்தை தன்னம்பிக்கையை இழக்க செய்து 2 ஓவர்களுக்கு 18 ஓட்டங்களை கொடுத்தமையால் அடுத்த போட்டிக்கான வாய்ப்பை இல்லாமற் செய்து விட்டது. அதே நேரம் இலங்கை கிரிக்கெட் தேசிய அணி வீரர் சுரங்க லக்மால் 2 ஓவர்களுக்கு 18 ஓட்டங்களை தாராமாக விட்டுக் கொடுத்திருந்தாலும் ஒரு விக்கெட்டை சாய்த்த படியால் குறையாக நோக்கப்படவில்லை. 


ஆக அந்த போட்டியிலும் ஏதாவது சாதித்திருந்தால் நல்லது நடந்திருக்கும்.

இதற்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படாமையும், உரிய வாய்ப்புக்கள் வழங்கப்படாமையுமே காரணம் எனலாம். மாவட்ட மைதானங்களை தவிர்ந்து ஏனைய மாகாண மைதானங்களிலும் சென்று விளையாடக்கூடிய வழிவகைகள் பெற்றுத் தரப்பட்டிருந்தால் இன்று கிரிக்கெட் அணிக்குள் உள் நுழைந்திருப்பான்.


ஒருவருக்குரிய வாய்ப்பு போனால் என்ன? இன்னும் எத்தனையோ பேர் திமையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் திறமைகளை இனங்கண்டு உள்ளூர் மைதானங்களிலேயே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் ஆகி விடாமல் வெளி மாகாணத்து பெரிய பெரிய விளையாட்டு மைதானங்களிலும் விளையாடி திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 


அதை விட்டுட்டு இனப்பாரபட்சம் என தொடர்ந்தும் கொடி பிடித்துக் கொண்டு திரிவது அபத்தம். 


உண்மையிலேயே திறமை இருந்தால் வாய்ப்பு வழங்கப்படும் என இலங்கை கால்பந்தாட்டத்தில் தமிழ், முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் தேசிய அணியில். இனப்பாரபட்சம் கடுமையாக கடைப் பிடிக்கப் படுகின்றது என்றால் இது சாத்தியமில்லாத நிகழ்வு தானே? கால்பந்தாட்டில் மட்டும் நம்மவர்களால் தேசிய அணியில் உள் நுழைந்தால் இலங்கை கிரிக்கெட் உட்பட ஏனைய தேசிய விளையாட்டு அணிகளிலும் இடம் பிடிக்க முடியும். 


ஒலிம்பிக்கில் வெறுங்கையோடு டோக்கியோ போன இலங்கை வீரர்கள் அவமானத்தின் சின்னமாக திரும்பி வந்திருக்கின்றார்கள்.Passion, வெறி, ஓர்மம் இருந்திருந்தால் வெண்கலப் பதக்கம், வெள்ளிப் பதக்கத்துடன் ஆவது வந்திருப்பார்கள். 


திறமையுள்ள தமிழ், முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் இருக்கும் போது திறமையில்லாதவர்களை அனுப்பினால் எப்படி பதக்கங்களோடு வருவார்கள்? 

சொகுசாக வாழ்ந்தவர்கள் ஒரு போதும் ஜெயிக்க முடியாது. நீண்டகால பயிற்சி, விடா முயற்சி, நுணுக்கங்களை கற்றல் என தியாகங்களுடன் பின்னிப் பிணைந்தது தான் வெற்றியும். ஒரு மாதமோ ஒரு வருடமோ பயிற்சி எடுத்தவர்களை ஒலிம்பிக்கில் கொண்டு போய் விட்டு விட்டு பதங்கங்களைப் பெற்றுத் தா என்றால் எப்படி முடியும்?


அவர்களுக்கு உரிய ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்பட வேண்டும். வேறு வேலைகளை செய்பவர்களால் எப்படி விளையாட்டிலும் கரிசனை காட்ட முடியும்? வேலைத்தளத்தில் Targets, Dead Line என மன அழுத்தத்தோடு விரக்தியோடு கழிப்பவனால் எப்படி விளையாட்டிலும் Focus ஆக இருக்க முடியும்.ஆதலால் தான் படிக்கின்ற காலத்தில் கல்வி தான் முக்கியம். விளையாட்டில் கவனம் செலுத்தி வாழ்க்கை இழந்து விடாதீர்கள் என பெற்றோரும், பெரியோரும் சொல்லக் காரணம். இரண்டு தோணிகளில் காலை வைத்தால் எந்த இலக்கையும் அடையாமல் முகங்குப்புற விழ வேண்டியது தான். ஆனால் விளையாட்டில் சோபித்த பலர் கல்வியில் கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரிட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்ற அதிசயம் நடந்தது.ஆனால் அவர்களால் கல்விப் பொதுத்தர உயர் பரிட்சையில் Advance Levelல பல்கலைக்கழக தகைமை பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. உயர்தப் பரிட்சை விளையாட்டில் கவனம் செலுத்தினால் சரி வராது என்ற உண்மையை புலப்படுத்தி சென்றது. 


அதே போல விளையாட்டு வீரர்களுக்கும் முழு நேரமும் Focus ஆக இருக்கா ஊதியத்தோடு பயிற்சியும் வழங்கப்படும். கலியாணம், கொண்டாட்டம், கலியாட்டம் என எல்லாவற்றையும் தியாகம் செய்ய பக்கப் படுத்த வேண்டும். ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை அடைய முடியும். 


அதற்காக திறமையில்லாத கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான சோத்து மாடுகளுக்கு மாதாந்தம் நான்கு இலட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அந்த சம்பளத்தை Performance அடிப்படையில் ஒவ்வொரு Match உம் குறைக்க வேண்டும். Extra Playersக்கும் மாதாந்தம் 4 இலட்சம் வழங்கப்படுவது பெரும் அபத்தம். இப்படி சம்பளக் குறைப்பை கொண்டு வந்தால் மட்டுமே திறமையான வீரர்களை உருவாக்கி வெற்றித் தேடித்தரக்கூடியவர்களை உள்நுழைக்க முடியும். 1996ஆம் ஆண்டிற்கு பிறகு கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று வரை நிறைவேற முடியாத கனவாகவே காணப்படுகின்றது. அந்த தீராக்கனவை நிறைவேற்றுவதற்காகவேனும் திறமையானவர்கள் மட்டும் உள்வாங்கும் திட்டத்தோடு Performance அடிப்படையில் சம்பளக் குறைப்பையும் மேற்கொண்டால் தான் இனி வருங் காலங்களில் ஏதாவது நல்லது நடக்கும். இனியும் அடுத்தவர்களை,காரணங்களை சுட்டிக் காட்டி பிழைப்பை ஓட்டாமல் திறமையுள்ள நம்மவர்களை எப்படியாவது அணிகளுக்குள் நுழைப்பதற்கு வழிவகுத்து கொடுங்கோ தீர்மானம் எடுக்கக் கூடிய உயர் பதவிகளில் இருப்பவர்கள்.


அதை போல வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லையே என்று சோரம் போகாமல், சோம்பி இருக்காமல் தொடர்ந்தும் பயிற்சி செய்து கொண்டிருங்கள் . வாய்ப்பு கிடைக்கும் போது 100% வீத Bestஐ குடுக்கா விட்டால் விஜயஸ்காந்தை போல அணிக்குள் எடுக்காமல் விட்டு விடுவார்கள். ஆக எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு பெறுபேறுகளை காட்டி தெரிவாளர்களினை திருப்தி படுத்தி அணிக்குள் உள்நுழைந்திடுங்கோ.


வாய்ப்புக்களை பயிற்சியாளர்கள், Coach, பாடசாலை, விளையாட்டுக் கழகம் தான் உருவாக்கித் தரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நீங்களாகவே பத்திரிகை விளம்பரங்கள் ஊடாக, நண்பர்கள், தெரிந்தவர்கள் ஊடாக வேறு வேறு மாகாண அணிகளில், Clubகளில் விளையாடி இப்படி திறமையானவன் இருக்கின்றேன் என தெரியப் படுத்துங்கள். ஊடகங்கள் TPR rateஐ அதிகரிக்கும் கிசு கிசு அல்லது உணர்ச்சி வயப்படுத்தக் கூடிய கருத்துக்களை தான் முதன்மை இடம் வழங்கும். திறமையுள்ளவர்களுக்கு சந்தர்ப்பம் உருவாகுவதற்கு முனைப்பு காட்டாது என்ற யதார்த்த உண்மைகளை உணர்ந்து உங்கள் எதிர் காலத்தை நீங்களே உங்களுக்கு ஏற்றாற் போல வடிவமைத்துக் கொள்ளுங்கோ. 


கல்வியால் தான் நம்மால் முதன்மை இடம் பெற முடியாது. சம்பள அதிகரிப்பு வழங்கினால் ஒருவேளை மும்முரமாக முதலிடங்களை பெற ஆசிரியத்துவத்தின் பங்களிப்பு இருக்குமோ தெரியவில்லை. சேவை மனப்பாங்குடைய ஒருசிலரின் தியாகங்களை கொச்சைப் படுத்தக்கூடிய கல்வி வியாபாரிகளாக ஆசிரியத்துவம் இன்றைய காலத்தில் உருவெடுத்துள்ளமை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. இதற்கு சம்பள முரண்பாடு முக்கிய காரணமெனலாம். 


ஆக கல்வியால் முதன்மை இடம் பெற முடியாது என தெட்டத் தெளிவாக புரிய வைத்துள்ளது பரிட்சை முடிவுகள். So Last Weapon is Sports. விளையாட்டில் இனப்பாரபட்சம் என்றே நாம் முன்னுக்கு வராமல் எம் திறமைகளை புதைத்துப் போடுகின்றோம். இனியும் நொண்டிச்சாட்டுச் சொல்லிக் கொண்டிருக்காமல் மீயுயர் திறமைகளை வளர்ப்பதோடு வாய்ப்புக்களுக்காக காத்திருக்காமல் நாமே வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


இதற்கு விளையாட்டின் மீது தீராக் காதல் உடையவர்கள் ஒன்றிணைய வேண்டும். யாராவது முன்வந்து ஒன்றிணைக்க வேண்டும் எதுவும் தானாக நடைபெறாது. நாம் தான் நடத்திக் காட்ட வேண்டும். சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மேல் ஆர்வமுள்ளவர்களாக Passion உடையவர்களாக இனிவரும் சந்ததியினரையாவது உருவாக்கி விட வேண்டும். இனப்பாரபட்சத்தை உருவாக்குகின்ற காட்டுமிராண்டி பழைய சித்தாந்த பரம்பரை அழிந்து நவீன காலத்திற்கு ஏற்றாற் போல நவ நாகரிக வாழ்க்கைக்கு தம்மை உருமாற்றிக் கொண்ட படியால் அறிவு விருத்தி அடைந்தவர்களாக மாமாறியிருப்பதால் புதுமைகளை, திறமைகளை ஏற்றுக் கொள்ளும் புத்திஜீவிகள் தான் இனிவரும் காலங்களில் ஆட்சி பீடமேறப் போகின்றார்கள். ஆதலால் உங்களுடைய திறமைகளை மெருகூட்டிக் கொள்ளுங்கோ.


முதலில் ஒருவர் பின் ஒருவராக உள்நுழைதல் தான் சாத்தியப்படும். அத்தனை இடங்களையும் எடுத்த எடுப்பிலே நிரப்ப முடியாது. நெல்சன் மண்டேலா போல குறைந்த பட்ச தீர்வையாவது பெற்றுத் தரக் கூடிய முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் இல்லாத படியால் நாம் தான் தனித்தனி மனிதர்களாக போராட வேண்டியுள்ளது.  நெல்சன் மண்டேலோ தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் குறைந்த பட்சம் 3 Or 4 கறுப்பினத்தவர்கள் ஒவ்வொரு Match இலும் விளையாட வழிவகை செய்துள்ளார். உள்நுழைந்த கறுப்பித்தவர்கள் Best bowlers ஆக தங்கள் முத்திரையை தடம் பதித்திருக்கின்றார்கள். ஆக நமக்கு இப்படி இயல்பாகவே வாய்ப்பு உருவாக்கித் தர முடியாது என்பதை உணர்ந்து நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post