Success Community Regional Development Planning Success Community Regional Development Planning - examsguide.lk

Success

>

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.





சமுதாயத்திட்டமிடல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி திட்டமிடல் பட்டப்படிப்பு கற்கை நெறியை பூர்த்தி செய்து தற்போது வெவ்வேறு துறைகளில் executive level post or higher post இல் இருப்பவர்கள் பற்றிய தேடலில் விளைபயனாக இந்த முயற்சி..

இதுவரை Community Development Planning கற்கை நெறி இலங்கை நிர்வாகச் சேவை ( Srilanka Administrative Service), இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை ( Srilanka Inland Revenue Service), வங்கியியல் சேவை- முகாமையாளர் ( Banking Service- Manager) இன்னும் பிற நிறைவேற்றுத்தர சேவைகளில் Produce பண்ணியிருக்கின்றது.

முதற்கண் Senior Lecturer Kabilan Sir அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய திட்டமிடல் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியின் பின்னர் எதிர்நோக்கவிருக்கின்ற சவால்களையும், எவ்வாறு வெற்றிகரமாக முகம் கொடுத்து,அறிவைப் பகிர்ந்து சகதோழமைகளையும்,சமுதாயத்திலுள்ளவர்களையும் ஒருபடி முன்னோக்கி கைதூக்கி விடக்கூடிய மாற்றத்தை உருவாக்க Success என்கின்ற Motivation கலந்துரையாடல்களையும், Debate மூலம் மாணவர்களின் பேச்சுத்திறனையும் வளர்த்தெடுக்கும் முகமான சந்தர்ப்பங்களை உருவாக்கி தந்திருக்கின்றார்.

எங்கள் காலத்தில் Senior Lecturer ஐ தூரத்தில் இருந்து பார்க்க தான் வசதியேற்படுத்தப்பட்டிருந்து.. இன்றைய காலத்தில் மாணவர்களோடு மாணவர்களாக தோழமையாக அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறைக்காட்டும் நபர் Senior Lecturer ஆக கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்.

இனி திட்டமிடல் பட்டப்படிப்பை பற்றி நோக்கின், Community & Regional Development Planning தான் Degree யின் முழு விரிவாக்கம்.. பொது அறிவு போட்டிப்பரிட்சையில் உள்ளடக்கப்படும் பொருளியல்,குடித்தொகை,புள்ளிவிபரவியல்,சமூகவியல்,பிராந்திய திட்டமிடல்,Spatial Planning,அனர்த்த முகாமைத்துவம், பூகோளவியல்,Geographical Information System, Remote Sensing, Policy Making, கருத்திட்ட உருவாக்கம், கீழிருந்து மேல் நோக்கிய திட்டமிடல் இப்படி Multi Task உள்ளடக்கங்களை கொண்டிருக்கின்றது... இந்த வருடத்திலிருந்து நான்காமாண்டில் ஒரு Semester க்கு Internship வழங்கி தொழில் உலகிற்கான முன்ஆயத்த வழிகாட்டலை வழங்கவுள்ளார்கள்..

அண்மையில் வெளியிடப்பட்ட SLAS இல் திட்டமிடல் கற்கை நெறியை பூர்த்தி செய்த பார்த்தீபன் அவர்கள் தெரிவாகி பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இனி வரும் காலங்களில் தீர்மானம் எடுக்க கூடிய பதவிகளில் எத்தனை தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் அலங்கரிக்கப் போகின்றார்கள் என காலம் பதில் சொல்லட்டும்.



யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்திற்கு காலடி பதிக்கும் மாணவர்கள் முதலாமாண்டில் இரு பாட நெறிகளை தெரிவு செய்ய வேண்டும்.. எங்கள் Batch இலும் எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு Planning பாடத்தை தெரிவு செய்திருந்தார்கள் Geography,Planning பாடத்தை தெரிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவிருந்த படியால் துறைத்தலைவர் அறிவிப்பொன்றை வெளியிட்டார். அது என்னவெனில் 40 மாணவர்கள் மட்டுமே Special Degreeயாக தொடர முடியும் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல் Name list ஐயும் வெளியிட்டார்.. ஒரு மாதிரி 40 பெயர்களுள் எனது பெயரும் உள்ளடங்கியிருந்தது. இருப்பினும் போராட்டங்கள் செய்து எல்லாரையும் Special படிக்கும் படி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. படிக்கும் போது ஏனோதானோ இருந்தமை வேலைவாய்ப்பின் போது தான் விட்ட தவறு புரிந்தது.. இருப்பினும் கேள்விகளுக்கான விடைகளை Structure கட்டமைப்பில் எழுத பழகியமை உயர் போட்டிப்பரிட்சைகளில் பெரிதும் கைகுடுத்தது என்றே சொல்லலாம். ஒரு வகையில் மெச்சத்தக்க ஏற்பாடு. கேள்விக்கு ஏற்றாற் போல விடைகளை உய்த்தறிந்து எழுத பழக்கப்படுத்தியமையிட்டு பெருமிதமடைகின்றோம். பிரதீபராஜா Sir பொதுஅறிவு கேள்விகளை ஒவ்வொரு கிழமையும் போட்டியாக வைத்து கூடிய புள்ளிகளை பெறுவோருக்கு Note books,Books வழங்கி பொது அறிவை படிக்க ஊக்கப்படுத்தியதை அலட்சியம் செய்தமையால் One word GK கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தோற்றுப் போனமை பிரதி பயன்.. சுடலை ஞானம் என்னைப் போன்ற சிலருக்கு 4 Or 5 வருடங்களின் பின்னர் தான் வந்தது.. இளமையும்,துடிதுடிப்பும் உள்ள போதே விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள் போன்றவர்களின் அறிவுரைகளை,ஆலோசனைகளை,வழிகாட்டுதல்களை,கடிந்து கொள்ளுதலை அலட்சியப்படுத்தாமல் எல்லாம் நன்மைக்கே என ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளல் உத்தமம்.

இனிவரும் சந்ததியினரும் அரச உயர் பதவிகளை அலங்கரிப்பதே காலத்தின் தேவை.. நேரத்தை வீணாக்காமல் தொடர்ந்தேர்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கோ. இப்போதே எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கோ..

Planning பாடம் Multiple Task ஐ உள்ளடக்கியிருப்பது நல்லதா அல்லது ஒரு விடயத்தை பற்றி மட்டும் உள்ளடக்கியிருப்பது நல்லதா? என வாதப் பிரதிவாதங்கள் வந்த வண்ணம் உள்ளன. முன்னைய காலங்களில் ஒரு துறை சார் பாடங்களை மட்டும் படிப்பித்திருந்தால் நலமாயிருக்கும் அதாவது Remote Sensing, Geographical Information System என காலத்திற்கு உகந்த பாடத்தை மட்டும் உள்ளடக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என எண்ணியதுண்டு. ஆனால் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியால் காலடி வைத்து வேலை தேடி அலைந்த போது யாழ் பல்கலையில் படித்த எல்லா கலைப் பட்டத்தாரிகளும்தொழில் வாய்ப்பை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியாதிருந்தமை அனுபவித்தோம். கலைப்பட்டதாரிகளிடம் முகாமைத்துவ கற்கை நெறிகளான Charted Accounts Coursesஐ முடித்தீர்களா?என கேட்டு அவர்களுக்கு தான் வேலை என திருப்பி அனுப்புதல் தொடர்ந்து நடைபெற்றது. அதை விட முகாமைத்துவ பட்டதாரிகளையும் உள்வாங்காமல் அனுபவத்தை எதிர் பார்த்திருந்தார்கள் ஏனென்றால் கொழும்பு, களனி பல்கலைக்கழகங்களிவ் பெரும்பாலான மாணவர்கள் படிக்கும் போதே பகுதி நேர Professional அனுபவத்தை பெற்றிருந்தார்கள். உதாரணத்திற்கு PAFFREL - Election Monitoring NGO வில் மூன்றாம் ஆண்டு, நான்காமாண்டு பட்டத்தை தொடர்பவர்கள் குறைந்தது இரண்டு மாதங்கள் பணிபுரிந்து 25,000 தொடக்கம் 35,000 சம்பளத்தை பெற்றதோடு பணிபுரிந்தமைக்கான மாதாந்தம் வழங்கிய Agreement ஐ பெற்றுக் கொண்டார்கள். இன்னும் ஒரு சிலர் Service Letter ஆக உறுதிப் படுத்தி பெற்றுக் கொண்டார்கள். அப்படி CMEV, நீலன் திருச்செல்வம் Trust Fund பல தேர்தலுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிந்ததை தெரிந்து கொண்டேன். இவ்வாறு ஒவ்வொரு பட்டப் படிப்பை தொடர்ந்தவர்களும் தொழில் அனுபவத்தை துறை சார்ந்தோ, துறை சாராமலோ பெற்றுக் கொண்டார்கள். ஆனால் யாழ் பல்கலையில் அவ்வாறு எந்த அனுபவங்களை பெறாத வகையில் சூட்சுமமாக நேரங்களை போட்டு காலையிலிருந்து பின்னேரம் 4 மணிவரை பல்கலைக்கழகத்திலே காலத்தை கழிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்தமையால், நீண்ட நேர ஓய்வினை எப்படி கழிப்பது என தெரியாமல் சீண்டல்கள்,சேட்டைகள், குழப்படிகள் விடுகின்ற மாணவர்களாக உருவாக வெளிக்கிட்டார்கள்.

Library ல போய் படிப்பதை தடுக்கு முகமாக கல்வியிலே அக்கறை இல்லாத மாணவர்கள் அப்படி படிப்பதை தடுக்கு முகமாக கையாண்ட இறுதி வார்த்தைப் பிரயோகம் பொண்ட்ஸ். ஆதலால் பகிரங்கமாக Library க்கு போகின்றேன் என தெரியப் படுத்தாமல் களவாக போய் தான் ஒரு சிலர் படித்தார்கள்.. பகிரங்கமாக படித்தவர்களோடு அந்நியோன்யமாக நடக்க, நடாத்த வெளிக்கிட்டார்கள். இதனால் பலருடைய First Class கனவு பறி போனது எனலாம்.

நண்பர்களோடு கூடி அரட்டை அடிப்பதை, பாட்டுப் பாடி, நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை சமூக அந்தஸ்தாக வடிவமைத்தார்கள். பெருமிதம் கொண்டார்கள். எதற்கெடுத்தாலும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்களை,ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து கற்பித்தல் நடவடிக்கையை தொடர விடாமல் முட்டுக்கட்டையாக திகழ்ந்தமையை ஏதோ பெரிதாக சாதித்ததை போல எத்தனித்து மகிழ்ந்திருந்தோம்.

நான்கு வருடங்களில் முடிக்க வேண்டிய பல்கலைக்கழக படிப்பு மாணவர்களாலும், பல்கலைக்கழக தொழிற் சங்க போராட்டங்களாலும் ஐந்து வருடங்களிலே முடிக்க கூடியதாக இருந்தது. ஏதோ சொர்க்க பூமியில் வாழ உருவாக்கப்பட்டவர்கள், படைக்கப் பட்டவர்கள் என்ற மாயை பல்கலைக் கழக வெளியேற்றத்தின் பின்னர் கசக்க தொடங்கியது. பல்கலைக் கழக பட்டப் படிப்பை முடித்தால் உடனே வேலை வாய்ப்பு கிடைத்து விடும் என்ற கருத்துக்கள் கானல் நீராகத் தொடங்கியது கடைசியில 5 வருடங்களின் பின்னர் எங்களுக்கு முதல் பட்டப்படிப்பை முடித்தவர்களும், எங்கள் Batch மாணவர்களும், எங்களுக்கு அடுத்தடுத்த Junior மாணவர்களும் யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும் என நம்பி களத்தில் இறங்கினோம். ஆரம்பத்தில் அமோக வரவேற்பு, அத்தனை பேரும் ஒன்றிணைந்தார்கள். நாட்கள் செல்ல முன்னர் மாதிரி ஒன்றிணைக்க முடியவில்லை. நட்புக்காக ஒரு சிலர் மட்டுமே ஒன்றிணைந்ததார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கையொப்பங்களை ஒவ்வொரு நாளும் பெற்றுக் கொண்டார்கள். சில அப்பாவிகள் அது உண்மை என நம்பி கீழுழைப்பு ஊதியத்தில் இருந்தவர்கள் விடுமுறைகளை எடுத்துக் கொண்டு போராட்டங்களில் கலந்து கொண்டு தங்களின் சொற்ப சம்பளத்தினை கூட இழந்தார்கள். சிலருக்கு இவ்வாறு போராட்டங்களில் கலந்து கொள்ளவதால் கீழுழைப்பு வேலைகளிலிருந்து கூட நீக்கப்பட்டார்கள். முதலில் ஆக்ரோசமாக பயணித்த போராட்டம் பின்னர் கசக்க தொடங்கியது. Ecity Rajeevan Sir உட்பட ஒரு சிலர் நேரடியாக வந்து தங்கள் ஆதரவை நல்கியிரிந்தார்கள். ஒரு கட்டத்தில் கச்சேரிக்கு முன்னாக கூடாரம் போட்டு தொடர்ந்தும் குறிப்பிட்ட சிலர் வீடு வாசல்களுக்கு செல்லாமல் அங்கேயே நித்திரை கொண்டு பல்துலக்கி காலத்தை கழிக்க வெளிக்கிட்டார்கள். வட மாகாணத்தின் எழுச்சியை கண்டு கிழக்கு மாகாணத்தவர்களும் தங்கள் ஆதரவை நல்கும் முகமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். நூறு நாள் கடந்து போராட்டம் நடைபெற ஆரம்பித்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அடுத்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தை கைப்பற்று முகமாக 2018 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலை வாய்ப்பை 4000 பேருக்கு மாவட்ட செயலகத்தில் முதலாவது நேர்முகத்தேர்வும், பின்னர் இரண்டாவது நேர்முகத் தேர்வு பிரதேச செயலகங்களில் நடை பெற்று வேலை வாய்ப்பை வழங்கினார்கள். போராட்டத்தில் மும்முரமாக கலந்து கொண்ட பலருக்கு நியமனம் மறுக்கப் பட்டிருந்தது. இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட முன்னமாகவே போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டவர்கள் ஆசிரியர் சேவையிலும், வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியிலும் உள்வாங்கப் பட்டார்கள்

எனக்கும் நேர்முகத் தேர்வுக்கான கடிதம் வந்திருப்பதாக என்னுடைய சகோதரி அறியத் தந்திருந்தார். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. எனக்கு இறுதி திகதிகளில் ஒன்று தான் தரப்பட்டிருந்தது. நல்ல சந்தர்ப்பம் எப்படி Interview நடாத்துகின்றார்கள் என அறிந்த பின்னர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என தீர்மானித்திருந்தேன். அதுக்கிடையில் எம்மோடு திட்டமிடல் பாடநெறியைத் தொடர்ந்து பல்கலையில் திட்டமிடலுக்கான Demoவாக இருந்து 2017 Srilanka Administrative Serviceஇல் எடுபட்ட Assistant Divisional Secretaryயாக உள்ள வினோஜிதா Madam ஒரு Interview Pannelல இருக்கின்றார் என்று சொன்னது தான் தாமதம். Ego என் கால்களை பயணிக்க விடவில்லை.. அந்த வாய்ப்பை நழுவ விட்ட விரக்தியும் நிரந்தர அரச வேலையில்லாமல் 4 வருட போராட்டத்தின் பிரதி பயன் 2016 அரச வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டு 2017 Exam நடந்து 2018 நியமனம் தந்தார்கள். Interview நடக்கும் வரை என்ன பதவியில் அமரப் போகின்றோம் என தெரிந்திருக்கவில்லை. Interview நடந்த பின்னர் ஒருவர் Viber Group ஐ திறந்து எல்லாரையும் ஒவ்வொன்றாக இணைத்தார். அந்த Viber Group ஐ திறக்காமல் விட்டிருக்கலாம் என நியமனம் கைகளில் கிடைத்த பின்னர் தான் உணர்ந்து கொண்டோம். தீர்மானம் எடுக்க கூடியவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ளாமல் telephone Operator, Primary, Secondary Level Post இல் இருப்பவர்களோடு தொடர்பு கொண்டு விட்டு Exams Results Cancel, Interview Cancel
என பீதியை கிளப்பி மன அழுத்தை உருவாக்கியிருந்தார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று Neth FM புரளியை கிளப்பி தங்கள் TPR rate ஐ அதிகப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு சொல்லாண்ணா துன்பங்களின் மத்தியிலேயே ஒரு அரச பதவியை பெற முடிந்தது.

நம்மட பழைய புராணத்தை ஒருபுறம் வைத்து விட்டு மீண்டும் வேலையில்லா பட்டதாரிகளின் Subjectக்குள் உள்நுழைந்தால் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டும், ஆசிரியர் சேவை, வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் பெற்றும் இன்னும் கணிசமானளவு பட்டதாரிகள் தொடர்ந்தும் வேலையற்றே இருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் அடுத்த ஐந்தாண்டினை குறி வைத்து 2020 ஆண்டு முடியப் போகும் வேளையில் குடுத்தால் வாக்கு வங்கி சிதைந்திடும் என்று 2019ஆம் ஆண்டே 16000 பேருக்கு வேலை வாய்பை குடுக்கின்றார்கள்.

என்ன விடயத்தை பற்றி சொல்ல வந்தேனோ அதிலிருந்து முற்றிலும் விலகி வேறொரு உலகத்திற்குள் நுழைந்து விட்டேன். சொல்ல வந்த விடயம் இது தான் சாதாரண பதவி நிலை Secondary Level Postஐ அடைய A/L தகைமையோ அல்லது பட்டத்தகைமையோ போதும். மீத்திறன் வேறு பட்டதாரிகளை தவிர்த்து இலங்கை நிர்வாகசேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை என்பவற்றுக்குள் நுழைய திட்டமிடல் பாடத்தில் உள்ளடக்கியிருந்தெ Multi Task Knowledge தான் கை கொடுத்தது என்றால் மிகையாகாது. அதைப் போல இனிவரும் திட்டமிடல் பட்டதாரிகள் பட்டப்படிப்பை படிக்கும் போதே உயர் போட்டிப் பரிட்சைகளுக்கு எழுதக் கூடிய வகையில் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகிக் கொள்ளல் உத்தமம். பல்கலைக்கழக பட்டப்படிப்பை படித்த பின்னர் அரச உயர் வேலை வாய்ப்பிற்குள் உள்நுழையலாம் என்பது நிறைவேறாத கனவு. நீண்ட நாள் போட்டிப் பரிட்சைகளுக்கு இனிவரும் காலங்களில் தயாராகா விட்டால் ஒருவரும் தெரிவு செய்யப்படாமல் இனப்பாரபட்சம் என்ற நொண்டிச்சாட்டையே கையில் தூக்குவோம்

ஆகவே தோற்றுப் போனவர்களாக மாறாமல் இருக்க நுண்ணறிவை தொடர்ந்தேர்ச்சியாக பயிற்சி செய்வதோடு, பொது அறிவை வெற்றிக் கொள்ள அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் குறித்து வைத்துக் கொள்வதோடு, Language Exam இல் சித்தியடைய சுருக்கம், கிரகித்தல், கட்டுரை என்பவற்றில் ஈடுபாடு காட்ட வேண்டும். தாய் மொழி என்ற அலட்சியமே பெரும்பாலான கெட்டிக்காரர்கள் Language Paper ல தோற்றுப்போகக் காரணம் என்பதை மனதிலிருத்தி கல்விப் பொதுத்தர சாதாரண, உயர் தரத்தில் அதிசிறப்பு புள்ளிகளைப் பெற்று விட்டேன் என்று மமதையோடு இருந்து தோற்று பழிச்சொல்லை சுமக்காமல் இருக்க அத்தனை பாடங்களிலும் கூடிய கவனம் எடுத்து படித்துக் கொள்ளுங்கோ.

IQ எல்லாம் பயிற்சி செய்யாமல் Exam Hallக்கு போனால் Exam Paper Easy ஆனால் Time காணாது என்று சொல்லுபவர்களின் வரிசையில் இடம் பிடிக்க வேண்டும். ஆக அந்த சாக்குப் போக்கை சொல்லாமலிருக்க Timing Set பண்ணி படித்துக் கொள்ள வேண்டும். இலகுவான கேள்விகளை முதலில் இருக்கின்றதா? நடுவில் இருக்கின்றதா? இறுதியில் இருக்கின்றதா எனத் தேடிப் பார்த்து பாஸ் Marksஐ எடுத்த பின்னர் நேரம் எடுக்கக் கூடிய பந்திக் கணக்குகளிலோ, அல்லது வேறு கேள்விகளிலோ கை வைக்க வேண்டும். ஆனால் நம்மவர்கள் வரிசைக்கிரமமாக செய்ய வேண்டும் ஒரு கேள்விக்கான விடை எவ்வளவு நேரம் எடுத்தாலும் கண்டு பிடித்த பின்னரே அடுத்த கேள்விக்கு போக வேண்டும் என்று தோபதற்கான அணுகு முறையை கையாண்டு விட்டு ஒரு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் கூட சித்தியடையாத போது, பாரட்சம், இனவாதம் என்று காரணங்களை சொல்லி தங்களைத் தாங்களே ஆசுவாசப் படுத்திக் கொள்ள முனைகின்றார்கள்.

Exam Paper தருவதற்கு முன்னரே Extra Paper தந்தால் அதிலோ அல்லது மேசையிலோ சில நுணுக்கங்களை எழுதி வைத்தால் Examல இலகுவாக மற்றவர்களை விட குறைந்த நேரங்களில் பதிலளிக்கும் தந்திரோபாயத்தை கடைப் பிடிக்கலாம். உதாரணத்திற்கு எண்கோலங்கள் வந்தால் ஆங்கில எழுத்துக் கட்டமைப்பின் படி விடை கண்டு பிடிக்கும் வண்ணம் ஒன்றிரண்டு கேள்விகள் வரும் ஆக ஆங்கில எழுத்துக்களுக்கு மேலிருந்தும் கீழ் இருந்தும் எண்களை வரிசைக்கிரமமாக எழுதி வைத்திருந்தால் Exam Paper தந்தாப் பிறகு மற்றைய மாணவர்கள் ஆங்கில எழுத்தை வரிசைக்கிரமமாக எழுதி கண்டு பிடிக்க செலவிடும் நேரத்தை விட விரைவாக நாம் விடையை கண்டு பிடித்து நேரத்தை மிச்சப்படுத்தி அடுத்த கேள்விக்கு செல்ல முடியும். இவ்வாறான அணுகு முறைகளையோ நம்மவர்கள் கடை பிடிப்பதில்லை.

தம்மையறியாமலே ஒரு பதட்டத்தை தன்னம்பிக்கையின்மையை தானாகவே ஏற்படுத்திக் கொள்ள முனைகின்ற செயல்பாடு நடை பெறுகின்றது. எவ்வாறென்றால் Exam Hall க்கு போவதற்கு முன்னராகவே புத்தகங்களை, Notesகளை, கேள்வி விடைகளை பார்த்தல், வாசித்தல், படித்தல். இந்த அணுகுமுறை தன்னம்பிக்கையின்மையை, பதட்டத்தை, பதகளிப்பை ஏற்படுத்தி Exam Paperஐ சிறப்பாக செய்ய விடாது தோற்றவர்களாக உருமாற்றி விடுகின்றது.

நான் என்னுடைய அத்தனை முயற்சிகளை மேற்கொண்டு படித்து விட்டேன், என்ன கேள்வி வந்தாலும் எழுதுவேன் என தன்னம்பிக்கை வந்தால் இயல்பாகவே வெற்றி பெற்று விடுவீர்கள்.

நான் இந்த யுக்தியை கையாண்டு எந்த போட்டிப் பரிட்சை Examகளுக்கும் Notes, Tuites, புத்தகங்களை கொண்டு போவதை பெரும்பாலும் தவிர்த்திருந்தேன். ஆனாலும் Same Batch ஆண் நண்பர்களோ, Seniors or Juniors கட்டுக்கட்டாக Notesஐ கொண்டு வந்து அதைப் படித்தாயா இதை படித்தாயா என்று பயமுறுத்தியே தோற்கடிக்க செய்து விடுவார்கள்.

இல்லா விட்டால் படு பயங்கரமான கெட்டிக்காரனையோ, தங்களுக்கு படிப்பித்த வளவாளரோ Exam எழுத வந்திருக்கின்றார் என்று அவர்களின் அருமை பெருமைகளை சொல்லியே பாதி தன்னம்பிக்கையை இல்லாமல் செய்து விடுவார்கள். இப்படித்தான் Rajah Kuhan என்ற முகநூல் பிரபலத்தை பற்றி சொன்னார்கள். யாராவது கேள்வி போட்டால் அடுத்த நிமிடமே பதில் போடுவார். அப்படி அவருடைய பெருமைகளை சொன்னார்கள். அவரது ஆற்றலை கண்டு வியந்திருக்கின்றேன் அவரது கேள்விகளை Print எடுத்து படித்திருந்தேன். பின்னர் புத்தகமாக வெளியிட்டார். அதையும் வாங்கி கற்றிருந்தேன். ஆனால் Exam Hallக்கு போக முன்னர் சொன்னவுடனே அத்தனை நம்பிக்கைளும் நீத்துப் போயிற்று. தெரிந்த கேள்விகளுக்கு கூட விடைகளை ஞாபகப் படுத்த முடியாமல் போய் தோல்வியை தானாகவே உருவாக்கி விட்டது. Better Way Is ஒருவரோடும் கதைக்காமல் பல்லிளிக்காமல் ஒதுங்கி நின்றால் ஏதாவது சாத்தியம். SLIRS க்கு நல்ல காலம் 30 Vacancy என்பதாலும் என்ன பதவி என்று தமிழ், முஸ்லிம் வளவாளர்களுக்கு தெரியாததாலும் 11 வருடத்திற்கு முன்னர் அதுவும் Limited ல Tax Payers ஆக இருந்தவர்களை Exam வைத்து பதவி உயர்த்திய படியாலும் Exam Paper எப்படி இருக்கும் என்று தெரியாத படியாலும் படிப்பிக்க எனக்கு தெரிந்து ஒருவரும் முன் வரவில்லை. அப்படி படிப்பித்திருந்தாலும் அவர்களின் Model Paper, எதிர்பார்க்கை வினாக்களை நம்பி வந்தவர்களுக்கு அந்தோ பரிதாபம் என்ற கூற்றே அரங்கேறியிருந்தது. ஆக எப்படி கேள்விகள் வந்தாலும் சிந்தித்து விடையளிக்க தயாராகிக் கொண்டால் எந்த முட்டுக்கட்டைகளும் உங்களை தடுக்க முடியாது என உணர்ந்து கற்றுக் கொள்ளுங்கோ.

 

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post