Srilanka Administrative Service Officers Srilanka Administrative Service Officers - examsguide.lk

 

Srilanka Administrative Service


 >

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.

















 
SLAS என்பது வரம். நிரந்தர பதவி
வகிக்கின்ற உத்தியோகத்தர்களிடையே உயர்பதவி நிர்வாக சேவை வகைப்பிரிவினருக்கு சென்றடையும் வண்ணம் தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு இந்தியாவில் 2 Marks அதிகம் எடுத்தவர் Indian Administrative Service க்கும் 2 Marks குறைய எடுத்தவர் Indian Police Service க்கும் தெரிவாகும் நிலை நிர்வாக சேவையின் உன்னத நிலையை சுட்டிக் காட்டுகின்றது. 

ஆனால் இலங்கையில் எல்லாம் தலைகீழாக தான் சம்பள கட்டமைப்பில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது SL1 Post Srilanka police Service இல் உள்ளவர்களின் ஊதியம் SLAS உட்பட நாடாளாவிய சேவைகளை விட உயர்வாக வழங்கப்படுகின்றமை பெரும் அபத்தம்.

Srilanka Customs Department or வருமானத்தை உழைத்து தருகின்ற இடங்களிலோ ஊக்குவிப்பு ஊதியமாக பெரும் தொகை வழங்கப்படுகின்றது. அதே போல மருத்து துறைக்கும் மேலதிக நேர கொடுப்பனவாக கணிசமான தொகை வழங்கப்படுகின்றமை கீர்த்தி மிகு சேவையான SLAS உத்தியோகத்தர்களின் சேவைக்குரிய மதிப்பை,கெளரவத்தை உதாசீனப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இருப்பினும் மதிப்பான,மரியாதையான,சமுதாய அக்கறையுடைய கீர்த்தி மிகு உன்னத சேவையாக இலங்கை நிர்வாக சேவை முதன்மை நிலை வகிப்பது மறுக்க முடியாத உண்மை. அதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

ஆயினும் 6 வருடங்களின் பின்னர் கெளரவமான சம்பளத்தினை பெறும் வகையில் ஏற்பாடுகள் Vechile Permit, Travel allowance போன்ற இன்னோரன்ன வடிவங்களில் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது பாரியளவு வித்தியாசம் தலைகாட்டி நிற்கின்றது.

Senior Level Post என SL-1 Post ஐ வகைப்பாட்டில் மட்டும் முன்னுரிமை இடத்தை வழங்கி விட்டு கெளரவத்திற்குரிய ஊதியம் வழங்கப்படாமை அபத்தம்.

எது எப்படியோ மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற, எந்த பொது நிகழ்வுகளாயினும் கெளரவிக்கப்படுகின்ற சேவையாக SLAS காணப்படுகின்றது. 

சமாந்தரமான Same Post,Same Salary உடைய உத்தியோகத்தர்கள் ஒரு காரியாலயத்தில் இருப்பினும் அத்தனை பேரும் Report பண்ணுகின்ற இடம் SLAS சேவைக்கு தான் வழங்கப்பட்டுள்ளமை நிர்வாக சேவைக்குரிய உயர் கெளரவம்.. 

இந்த உன்னத நிலைக்கு இன்றைய சந்ததியினரும் 50:50 பெரும்பான்மையினரைப் போல சரி சமமாகவோ Or அதிகமாகவோ அலங்கரிக்க செய்வதற்கு தான் இந்த முயற்சி. உரிய அங்கிகாரம் பெறாமல் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு ஒவ்வொருவரிடமும் பிரத்தியேகமாக மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன்.

SLAS க்கு வழங்கப்படுகின்ற கெளரவத்தை இந்த புகைப்படங்கள் வாயிலாக பார்த்தாவது இன்றைய சந்ததியினர் முன்னேறி அடுத்தக் கட்டத்திற்கு வருவதே என் தீராக்கனாவாகவும்,பிரியமாகவும் காணப்படுகின்றது. Best of luck

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மொழித்திறமையுடையவர்களாகவும், பேச்சாற்றல் உள்ளவர்களாகவும்,பல்திறமை ஆற்றலுடையவர்களாகவும், அனர்த்த நிலைமையின் போது சவாலை முகம் கொடுத்து சுமூகமாக தீர்ப்பதற்கும், மக்களிடம் நேரடித் தொடர்புடைய கிராம சேவையாளர் உத்தியோகத்தரின் கீழ் பயிற்சி பெற ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் ஒவ்வொருவராக தெரிவு செய்யப்பட்டு மக்கள் சார் பிரச்சினைகளை எப்படி கையாளுவது, பொது நிகழ்வுகளை எவ்வாறு வினைத்திறனாக நடாத்தி முடிப்பது போன்ற பயிற்சிகளும் ஒரு வருட காலத்திற்குள் வழங்குவதோடு Capacity Building Training மூலம் Presentation மூலம் பொதுமக்களுக்கு எப்படி கருத்துக்களை கொண்டு செல்வது,புரிய வைப்பது என்று பேச்சாற்றலை,சைகை உடல் அசைவுகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. குழுவாக கூட்டாக சேர்ந்து செயற்பட பயிற்சியளிக்கப்படுவதனால் பணிக்கமர்த்திய பின்னர் சமாந்தர பதவியுடைய Srilanka planning service,Srilanka accountant Service உத்தியோகத்தர்களோடு இணைந்து அவர்கள் மூலம் கருமங்களை வினைத்திறனாக நடாத்தி முடிக்கவும் பொறுப்புக்களை பகிராமல் வைத்து விட்டு Deadline இன் போது உத்தியோகத்தர்களுக்கு ஒரேயடியாக வேலைப்பழுவை வழங்கி சிரமத்திற்கு ஆளாக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு புதன்கிழமையும் Accountant service Officerக்குரிய,Srilanka Planning Service க்குரிய கடமைகளையும் அதற்குரிய Progress என அறிந்து கொள்வதோடு Administrative Officers,Chief Clerk, Additional District registrar,Social Service Officers, Development Officers, Management Service Officers என இன்னும் பிற உத்தியோகத்தர்களின் கடமைகளையும், அவற்றின் இயங்கு நிலையையும் சரி பார்ப்பதோடு, அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான உடனடி தீர்வுகளையோ அல்லது நிலைத்திருப்பான தீர்வுகளையோ வழங்கும் செயன்முறைகளையோ மேற்கொள்ள ஆளுமைத்தன்மையுள்ளவர்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதற்கேற்றாற் போல SLAS officers க்கு உரிய கெளரவமும், மரியாதையும் சமாந்தர உத்தியோகத்தர்களாலும்,ஏனைய உத்தியோகத்தர்களாலும் அது போல பொதுமக்களாலும் வழங்கப்படுகின்றது என்பது வெள்ளிடைமலை.

அதே போல நீங்கள் இந்த இடத்திற்கு வந்து சமுதாயத்தை ஒருபடி முன்னோக்கி உயர்த்தி விட பங்களிப்பை நல்குங்கள் பார்ப்போம்.இந்த வாய்ப்பை தவற விட்டு விடாமல் இளமையும் ஆற்றலும் உள்ளபோதே தொடர்ந்தேர்ச்சியாக கற்று SLAS போன்ற கீர்த்தி மிகு சேவையை அலங்கரியுங்கள் பார்ப்போம்.

அண்மைக்காலத்தில் Srilanka Administrative Service Limited Exam Results வெளியிடப்பட்டதும் முஸ்லிம்,தமிழ் மாணவர்களின் பெயர் இருக்கின்றதா? என தேடிப் பார்த்தேன். நம்மட கண்களுக்கு தான் தட்டுப்படவில்லை என்று குழுமங்களில் போட்டு Expertsகளிடம் கேட்கின்றேன்.. கிடைத்த பதில் ஒருவரும் தெரிவாகவில்லை என்று. ஆக நேர்முகத் தேர்வு வரை போய் தட்டுப்படக்கூடிய அவலநிலை தவிர்க்கப்பட்டுள்ளது என்று மட்டும் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடியும். 
Results வந்த போது ஒரு முஸ்லிம், தமிழ் மாணவர்களுக்கு கூட திறமையில்லையா? ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தேன். யார் இப்படி பின்னூட்டம் இடுகின்றார்கள் என்று பார்த்தால் வளவாளர்கள் அதை விட வேறு யார் கொடி பிடிக்கின்றார்கள் என்று பார்த்தால் சுயநல கல்வியினை ஆதரிப்பவர்கள், தனித்தனியாக தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என பிரயாசைப் படுகின்ற அறிவை,அனுபவத்தை பகிராத மாணவர் கூட்டம்..

முன்னைய காலங்களிலிருந்தே விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் இந்த செய்தியை தான் சொல்லி விட்டு சென்று கொண்டிருக்கின்றார்கள்.. ஒருவர் கூட சித்தியடையாத போது தான் சுயநல கல்வி எந்தளவுக்கு தோற்றுப் போவதில் வகிபங்கு ஆற்றியிருக்கின்றது என சுட்டிக்காட்ட முடிந்திருக்கின்றது.


கல்வி என்பது கொடுக்க கொடுக்க குறைவதல்ல, பகிர பகிர, தெளிவு படுத்த படுத்த நீண்ட கால நினைவாக தங்கி மீயுயர் ஞாபகச் சக்தியை உருவாக்கித் தருகின்றது. அந்த நீண்ட கால நினைவாற்றலை பெற முடியாமையால் தான் தெரிந்த விடயங்கள்,படித்த விடயங்கள் கூட exam Hallல ஞாபத்திற்கு வராமல் முரண்டு பிடித்து தோற்றுப் போன பட்டதாரி சமுதாயத்தை உருவாக்கி வேலை வாய்ப்புக்காக வீதிகளில் இறங்கி போரட்டம் செய்ய,அரசாங்கத்திற்கு எதிராக கருமமாற்ற இட்டுச் செல்கின்றது. முன்னைய காலத்தில் வேலைவாய்ப்பு,கல்வி உரிமை மறுக்கப்பட்டமை தான் ஆயுதப் போராட்டம் உருவெடுத்து நினைத்தே பார்க்க முடியாத நாசங்களை விட்டுச் சென்றிருக்கின்றது. இன்றும் கூட இலங்கை அபிவிருத்தி குன்றிய நாடாக இருப்பதில் அதன் மறைமுகத்தாக்கங்களினால் ஏற்பட்ட விளைவுகளே காரணிகளாக திகழும். இனியும் அப்படியொரு அசம்பாவிதம் நடைபெறாமலிருக்க தான் இந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் என்போர் யார்? அவர்களுக்கு வழங்கப்படும் கெளரவம் யாது? ஏன் SLAS officers ஆக வர வேண்டும்? அவர்களால் என்னவெல்லாம் செய்ய முடியும்? அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி எத்தகையது? என்று எல்லாம் என்னுடைய நேரங்களை ஒதுக்கி புகைப்படங்கள் வாயிலாக தெரியப்படுத்தி இருக்கின்றேன். ஆயிரம் வார்த்தைகளால் கூட விபரிக்க முடியாததை ஒரு புகைப்படம் தெள்ளத் தெளிவாக விளங்கப்படுத்தி விடும் என புகைப்படங்களை பார்த்தோருக்கு விளங்கியிருக்கும்.

இவர்களால் மட்டுமே இலங்கை நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். பெரும்பான்மையினத்தவர்களை விட தமிழ், முஸ்லிம் அதிகாரிகளின் பார்வை விசாலப்பட்டிருக்கும். இடப்பெயர்வுகளை,யுத்த அவலங்களை நேரடியாக அனுவித்தவர்கள், உட்கட்டமைப்பு வசதியின் வினைத்திறன் இன்மையால் பாதிக்கப்பட்டவர்களில் இவர்களும் ஒருவர், குறைந்த பட்சம் தாமொழியான தமிழ் மொழியை விட ஆங்கில மொழியிலோ,சிங்கள மொழியிலோ பரிட்சயமானவர்கள். இவர்கள் தான் உழவு இயந்திரத்தின் சாதனங்களை பயன்படுத்தி விமானங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்களின் வாரிசுகள், பசி,பஞ்சம்,பட்டினி,ஏழ்மை,துன்பம், தோல்வி,ஆயுதாரிகளின் அடக்குமுறைறைகளை அனுபவித்தவர்கள் இவர்களால் மட்டுமே இலங்கை நாட்டை அபிவிருத்தி அடையச் செய்ய முடியும். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மாத்திரம் தான் தெரிவு செய்யப்படுகின்றமை பயனற்றது... தனித்திருப்பதை விட கூட்டாக இருக்கும் போது தான் துணிவோடு கருமம் ஆற்ற முடியும். ஆதலால் தான் காட்டு ராஜாவான சிங்கத்தையே 5 எருதுகள் புரட்டிப் போட்டு விடும். அதே போல நம்மவர்கள் வகை தொகையின்றி பெரும் திரளானவர்கள் இந்த இடத்திற்கு வர வேண்டும் என்று பந்தி பந்தியாக எழுதிக் கொண்டிருக்கின்றேன். 

இலங்கை அரசியலமைப்பிலேயே மதம் Or சமயம் என்ற பதத்திற்கு பதிலாக ஆங்கில Constitutionalல Buddhism என்ற வார்த்தை தான் பயன்பாட்டில் உள்ளது. அப்படி இருந்த போதும் Srilanka Accontant Service,Srilanka Scientific Service,Srilanka Administrative Service Srilanka Education Administrative Service என SLIRS,SLFS ஐ தவிர்த்து அத்தனை நாடாளாவீய சேவைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற Public Admin Ministry .. ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் ஒவ்வொரு பெயரை வைத்து வதைப்பதால் முழுமையான Ministry பெயரை போடாமல் public Admin Ministry என்றே பயன்படுத்துவது உசிதம். அந்த அமைச்சினால் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கின்ற நோன்பு காலத்திற்கென பிரத்தியேகமான நேரங்களை ஒதுக்கி தொழுகையில் ஈடுபட அனுமதித்து சுற்று நிரூபம் வெளியிடப் பட்டது. இது எந்த வகையில் சாத்தியமாயிற்று என்று பார்த்தால் தீர்மானம் எடூக்கக் கூடிய உயர் பதவிகளில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இருந்மையினாலாகும். 

இதே போல இந்த தீர்மானம் எடுக்கக் கூடிய உயர் பதவிளுக்கு வந்து உங்கள் உங்கள் சமுதாய இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ளுங்கோ. இல்லை படிக்காமல் சோம்பியிருந்து விட்டு இனப்பாரபட்சம் என்று நொண்டிச்சாட்டை சொல்லிக் கொண்டு பொதுப் பிம்பங்களுக்கு பொதுப் புத்திக்கு அடிமையாகத் தான் போகப் போகின்றீர்கள் என்றால் ஒருவருக்கும் உபயோகமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து விட்டுப் போக வேண்டியது தான். அந்த சமுதாயத்தின் மீது அக்கறை இல்லாதவர்களால் எந்த பிரயோசனமும் இல்லை.

So better way is come to this higher position. So design your goals and Vision. Travel for your aim. Prove them Who you are? those who reject you.
இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள். 

இன்றும் கூட எனது தாயாருக்கு தன் மகன் SLAS Officer ஆகவில்லையே என்ற ஆதங்கத்தை பல தடவை தெரியப்படுத்தியிருக்கின்றார். அந்தளவுக்கு SLAS க்கு கெளரவம்,மதிப்பு ஊடகங்கள் மத்தியில் மட்டுமல்ல, பொதுமக்களிடத்திலும் ஓர் ஈர்ப்பு இருக்கத் தான் செய்கின்றது. என்ன செய்வது என் Field இல் வெளியே தலை காட்டாமல் ஒதுங்கியே இருக்கும் வகையில் கடமைப்பணி வடிவமைக்கப்பட்டு இருப்பதால் மறைந்தே வாழ வேண்டியிருக்கின்றது. 

அதனால் தான் தன்னிகரில்லாத தனக்கேயுரிய கீர்த்தி மிகு சேவையான இலங்கை நிர்வாக சேவைக்குள் எப்படியாவது நீங்களாவது புகுந்து விட வேண்டும் என்பதே என் தீராக் கனவாகவும், பிரியமாகவும் இருக்கின்றது.

Srilanka administrative Service Officer இடம் தான் சமாந்தர பதவி,சம்பள சேவையிலிருக்கின்ற Srilanka Accountant Service, Srilanka Planning service இன்ன பிற சேவைகள் report பண்ணும் படி வடிவமைக்கப்பட்டமையே கீர்த்தி மிகு சேவைக்கான அளவுகோலாக கருத முடியும்.

கெளரவம், மரியாதை, சமுதாய அந்தஸ்து முதன்மை இடத்தில் வழங்கப்பட்டாலும் சம்பளம் எனும் போது அள்ளிக் குடுக்காமல் கிள்ளியே குடுக்கின்றார்கள் 

அதை விட ஏனைய அரச உத்தியோகத்தர்களை பகுதி நேர வேலை செய்ய அனுமதித்து விட்டு Executive Level Post ஆன SLAS போன்ற Service களுக்கு முட்டுக்கட்டை போட்டிருப்பது நியாயமற்ற செயல்.

உண்மையிலேயே இவர்கள் தன் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டியவர்கள். கெளரவம் கருதி இவர்களும் 100% வீத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதில்லை.

முன்னைய நல்லாட்சி அரசாங்கம் அடுத்த முறை ஆட்சியை கைப்பற்றினால் தான் சம்பள உயர்வு என்ற அடிப்படையில் தீர்வுத் திட்டத்தை முன் வைத்தது.. ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனமையால் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சம்பள ஆணைக்குழுவை கலைத்ததோடு, அவர்களினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளையும் செல்லுபடியற்றதாக்கி விட்டது..

அந்த அணுகுமுறையை அடியொற்றியே இந்த அரசாங்கமும் ஆட்சிக் கால இறுதியில் தீர்வை அறிக்கையிட்டு வென்றால் தீர்வு திட்டம் தோற்றால் ஒன்றுமில்லை என நழுவ பார்க்கப் போகின்றார்கள். பார்த்து பக்குவமாக சூதானமாக செயற்படுங்கோ

இந்த சித்து விளையாட்டுக்களை ஒரு பக்கம் வைத்தூ விட்டு நிர்வாக சேவை என்பது பற்றி ஏனைய நாடுகளில் வழங்கப்படும் கெளரவம் பற்றி நோக்கின் அங்கே எல்லா Service க்கும் ஒரே தடவையில் Exam நடத்தப்பட்டு அதில் முதன்மையான இடம் Indian Administrative Service க்கு வழங்கப்படுகின்றது. 2 Marks குறைவாக எடுத்தவரை Indian Police Service க்கு உள்வாங்குகின்றார்கள். ஆக இந்தியாவைப் போல ஏனைய நாடுகளிலும் Administrative Service க்கு தான் முதன்மை இடம் வழங்குகின்றார். நிர்வாகம் ஒழுங்காக இருந்தால் தான் நாடு செழிக்கும். நாடு சுபீட்சமாக இருக்கும். 

ஆனால் இலங்கையில் தாராளமாக கெளவரத்தை மாத்திரம் கொடுத்து விட்டு அதிகாரத்தை Srilanka Police Service க்கும் சம்பள உயர்வை ஏனைய துறைகளுக்கும் வழங்கி விட்டு அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களும் வயிறு வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இலங்கை நாட்டை அபிவிருத்தியடையச் செய்தால் பரவாயில்லை. அதிகாரங்களை பயன்படுத்தி நாட்டை அதல பாதாளத்திற்கு தான் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள்.இனியும் சோரம் போகாமல் விழித்துக் கொள்ளா விட்டால் நாம் ஏனைய நாடுகளுக்கு கடனை கட்ட முடியாமல் அவர்களின் நாணயத்தினை உத்தியோக பூர்வமாக பயன்படுத்தச் செய்து அடிமைப் படுத்தி விடுவார்கள். பல நாடுகள் கடனை கட்ட முடியாமல் சீனாவின் நாணயத்தை பயன்பணுத்தி வருகின்றன. அதில் இறுதியாக சிம்பாவே நாடும் இணைந்ததாக அறியக் கிடைத்தது.

கல்வியறிவுடைய புத்திஜீவிகளும், இலங்கை நிர்வாக சேவை உறுப்பினர்களும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய மகத்தான பணியை கருத்திற் கொண்டு அவர் வழிகாட்டட்டும், இவர் வழிகாட்டட்டும் என ஒதுங்கி இருக்காமல் தாங்கள் ஒவ்வொருவரும் முன்வந்து தாங்கள் என்ன நோக்கத்திற்காக உயர் பதவியிலே அலங்கரிக்க செய்யப் பட்டிருக்கின்றார்கள் என உணர்ந்து கருமமாற்ற வேண்டியது இன்றியமையாதது. இப்படி தொடர்ந்தும் உறைக்கும் வண்ணம் பதிவிட்ட படியால் கல்வி வியாபாரிகளைத் தாண்டி 2017 SLAS Batch வழிகாட்டி இந்த முறையாவது 50:50 சமனாகவோ அல்லது அவர்களை விட அதிகமாகவோ மாணவர்களை சித்தியடைய வைக்க பிரயாசப்பட வலது கால் எடுத்து வைத்திருக்கின்றார். அந்த வலது கால் இலவசமாக வழிகாட்டப் போகின்றதா? Or ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தொகையை பெற்றுத் தரப் போகின்றதா? இல்லையேல் தங்கள் அதியுயர் சேவைக்கான Demandஆன கட்டணத்தை வசூலித்து ஏழ்மையிருக்கின்ற, வேலை வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு பாரமாக இருக்க போகின்றார்களா? என காலம் வெளிப்படுத்தக் கடவதாக. 

இலவசக் கல்வியை அரசாங்கம் வழங்கினாலும் பாடசாலை ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களில் கட்டணம் அறவிட்டு பழக்கப்படுத்தியமை பல்கலைக்கழக கல்வியின் பின்னர் வேலை பெற்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கட்டணங்களை வாரியிறைத்து கற்றுக் கொள்ளும் சூழ்நிலை முற்றாக தவிர்க்க உன்னதமான SLAS Officers முன்வர வேண்டும். மாற்றிக் காட்டப் போகின்றார்களா? Or தொடர்ந்தும் தோல்வியடைந்தவர்களாகவே மாணவர்கள் சமுதாயத்தை வடிவமைக்கப் போகின்றார்களா? எல்லாம் அவர்கள் கைகளில் மட்டுமே உள்ளது. 

பார்ப்போம் இலங்கை நாடு இனிவரும் காலங்களிலாவது எப்படி இருக்க போகின்றது என்று? அதற்கு SLAS officersஇன் பங்களிப்பு இருக்கப் போகின்றது என்று? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்


பின்வரும் Link ஐ Click செய்வதன் மூலம் புகைப்படங்களை பார்க்க முடியும்.




SLAS officers இன் Facebook Profile links கீழே தரப்பட்டுள்ளன.


















https://www.facebook.com/prabaHindu

https://www.facebook.com/EravurSuthanthiran

https://www.facebook.com/profile.php?id=1042579474







https://www.facebook.com/francis.kenijude





https://www.facebook.com/nihara.mowjood.5

https://www.facebook.com/thananjeyan6



https://www.facebook.com/alameen.junaid.94




https://www.facebook.com/kiruthika.ganesh.3





https://www.facebook.com/agm.fazal






https://www.facebook.com/delakshan.chan






















1 Comments

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

  1. Bank exam past papers pdf iruntha page la podunga bro

    ReplyDelete

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post