General Knowledge General Knowledge - examsguide.lk

General Knowledge


>

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.









                பகிர்தல் என்பது ஒர் உன்னதமான செயற்பாடாகும். இன்றைய சந்ததியினர் பல்கலைக்கழக படிப்பின் பின்னர் பகிர்ந்து கூட்டாக படித்தலை தொலைத்து நிற்பதால் தான் என்னவோ உயர் போட்டிப்பரிட்சை பெறுபேறுகளும் அவ்வளவு திறமில்லாமல் இருக்க காரணமோ தெரியவில்லை.. எம்மிடம் இருப்பவற்றை மற்றவர்களோடு பகிர்வதை போல எமக்கு தெரிந்த விடயங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.


ஒரு ஆசிரியர் தனக்கு தெரிந்த விடயத்தை மாணவர்களோடு பகிர்ந்து கொள்கின்றார். அதே போல நாம் எமக்கு தெரிந்த விடயத்தினை  நண்பர்களுடன் பகிர்ந்து கற்க பழக வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த விடயங்களை ஒன்றாக கூடி கதைத்து கற்றால் அந்த விடயத்தில் நல்ல தெளிவு கிடைக்கும்.


Notes களை மறைத்து படித்தல் மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்காமல் மறைத்து மறைத்து படிப்பதனால் எம்மால் நிச்சயமாக சாதிக்க முடியாது.  எவ்வளவுக்கு நாம் பிறருக்கு பகிர்ந்து கற்கின்றோமோ அவ்வளவுக்கு எமது அறிவும் வளரும். எல்லோருக்கும் எல்லா திறமைகளும் இருக்காது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள் ஆகவே பகிர்ந்து கற்றால் எல்லோரும் எல்லா திறமைகளையும் வளர்த்து கொள்ளலாம்.பரிட்சைக்காக நண்பர்கள் பத்து பேர் சேர்ந்து படித்தால் அதில் ஐந்து பேர் ஆவது தெரிவு செய்ய கூடிய வாய்ப்புக்கள் உண்டு. கல்வியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் மூலம் தெரியாதவர்களும் பயன் அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சமூக வலைத்தளங்களில் தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். 


கேள்வி ஞானத்திலும் கற்க முடியும் சிலர் கேட்டுக்கொண்டிருந்து கொண்டு கற்பவர்களும் உண்டு. உணவு இல்லாதவனுக்கு உணவு கொடுத்து பசியை போக்குவதை போல. கல்வியையும் பகிர்ந்து வாழ பழக வேண்டும்.எள் என்றாலும் ஏழாய் பங்கிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அதை போலவே கல்வியையும் பகிர்ந்து கற்க வேண்டும். எமக்கு தெரிந்த விடயத்தை சமூக வலைத்தளங்களில் போட்டு மற்றவர்களையும் ஊக்க படுத்த வேண்டும்.


ஆக அறிவை பகிர்தலை விட இந்த சமுதாயத்திற்கு நீங்கள் திருப்பி செலுத்தக்கூடிய பிரதியுபகாரம். வேறெதுவும் பெரிதாக செய்து விட மாட்டீர்கள். நீங்களும்,உங்கள் குடும்பமும் என்று வாழ தலைப்படுவீர்களே ஒழிய சமுதாயத்தை கைதூக்கி விட கிஞ்சித்தும் முயல மாட்டீர்கள். ஆக இந்த வாய்ப்பையாவது உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். 


Sharing is Success,Sharing is Wisdom,Sharing is Knowledge 


https://drive.google.com/file/d/10yS4LMdultnI_GmPcMrG839eojgbJya9/view?usp=drivesdk



Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post