Voluntary Service Voluntary Service - examsguide.lk

தன்னார்வ சுகாதார பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு

 



Those who like to do service,  you can apply 


கொவிட் பேரிடர் காலத்தினை கருத்திற் கொண்டு

தன்னார்வ சுகாதார பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புக்கு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது… எனக்கென்ன என்று தட்டிக்கழிக்காமல் சேவைமனப்பாங்கோடு கருமமாற்ற வேண்டப்படுகின்றீர்கள்.உங்களின் கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் ஆபத்தில்லை என ஒதுங்காமல் நிர்க்கதிப்படும் மக்களுக்கு உதவ முன்வருதல் உத்தமம். அடுத்தவர்களுக்காக காத்திருக்காமல் நீங்கள் முதலில் முன்வாருங்கள்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதார சேவையை செய்பவர்களுக்கு உதவியாக தன்னார்வ தொண்டர்களை இணைத்துகொள்ள  அமைச்சு ஒரு விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது. சேவை மனப்பாங்குடையோர் இணைந்து கொள்ள முடியும்.

சாதாரண தரம்,உயர் தர பரிட்சைகளின் பின்னர் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போர் இந்த அனுபவத்தினை மேலதிக தகைமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கொவிட் பேரிடரினால் ஏற்பட்டுள்ள மருத்துவ துறைசார் சவாலினை வெற்றிகரமாக முன்னெடுக்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ள தன்னார்வ சேவைகள் பின்வருமாறு,

Consultant- ஆலோசகர்

Medical Officer- மருத்துவ உத்தியோகத்தர்

Nursing Officer- மருத்துவ தாதியர்

MOH Assistant- மருத்துவ உதவியாளர்

PHI Assistant பொதுச்சுகாதார மேற்பார்வையாளருக்கான உதவியாளர்

MLT

COVID Lab Assistant கொவிட் ஆய்வுகூட உதவியாளர்

Health Education & Promotion சுகாதாரக்கல்வி மற்றும் விருத்தியாளர்

Driver Only சாரதி மட்டும் 

Driver with Vehicle வாகனத்துடன் சாரதி

Call center operator அழைப்பு மைய இயக்குபவர்

Office Assistant அலுவலக உதவியாளர்

Computer Data Enter / Type Setting

கணனி தரவு பதிபவர்/ ஒப்பு நோக்குநர்

மேற்படி சேவை நோக்குடன் கூடிய தன்னார்வ தொண்டு அடிப்படையிலான பதவிகளுக்காக நீங்கள் சுகாதார அமைச்சினால் உரிய முறையில் அங்கீகரிக்க படுவீர்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSczr5UTD-2vecv3us6hIwgqhn8fuScqzG7PzYLm-jmtyQsttg/viewform

ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப முடியும்.. கீழே தரப்பட்டுள்ள கூகிள் படிவத்தை நிரப்பி உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்த முடியும். நிரப்பிய பின் மறக்காமல் Submit ஐ கிளிக் செய்தால் தான் அனுப்பப்படும்.





<

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post