Social Service Social Service - examsguide.lk

 Outstanding Social Service




Really Proud of you Mr.Arsath For ur Awesome Social services for students 

நற்பண்புகளில் சமூக சேவைகளும் ஒன்றாகும். இவ் சமூகத்தில் பல்வேறு வகைப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். ஏழை பணக்காரன் முதலாளி தொழிலாளி வசதி படைத்தவன்  வசதி இல்லாதவன் என்று பல வகைப்பாடு உண்டு. 

இப் பூமியில் வாழும் நாம் ஏதோ ஒரு தேவைப்பாடு உடையவர்களாகவே இருக்கின்றோம். அத் தேவைகளை எம்மால் செய்ய முடியாத போது மனம் விரக்தி அடைகின்றோம். முடியாத மக்களுக்கு தம்மாலான உதவிகளை செய்வதற்காக சமூகத்தில் நாட்டில் உலகில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தம்மால் இயன்ற உதவிகளை செய்கின்றன.

 அதே போல தனி மனிதர்களும் கூட தம்மாலான உதவிகளை செய்கின்றனர். உண்மையில் சமூக சேவை  என்பது மிகவும் உன்னதமான பணி ஆகும். கல்வி கற்க வசதி இல்லாத பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு தேவையான உபகரணங்களை வழங்குதல். மலசல கூட வசதி அற்றவர்களுக்கு அவ் வசதியை செய்து கொடுத்தல்.கிணறு கட்டி கொடுத்தல் சுயதொழில் செய்வதற்கு வழி செய்து கொடுத்தல் போன்றன சமூக சேவைகளாகும். உலகால் கொண்டாடப்பட்ட அன்னை திரேசா மிகச் சிறந்த சமூக சேவகி .சாதி மதம் இனம் என்ற பேதங்களை கடந்து உலகில் வாழும் ஏழை மக்களுக்காக தன் வாழ் நாள் முழுதையும் அர்ப்ணித்தவர். இன்று எம் மத்தியில் பலர் இவ்வாறான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இயற்கை அனர்த்தங்களிலும் செயற்கை அனர்த்தங்களிலும் சரி  நண்பன் நண்பியாய் சகோதரன் சகோதரியாய் உதவி செய்ய பலர் முன் வருகின்றனர். எந்த பிரதிபலன்களையும் எதிர் பார்க்காது வெளிநாடுகளிலிருந்தும் பலர் உதவிகள் செய்கின்றர்.

 சமூக பணி என்பது மனதால் செய்யும் ஒரு சேவையாகும். யார் என்ன எந்த தேசமாக இருந்தாலும் எந்த வேறுபாடும் பார்க்காது உதவி செய்ய முன் வர வேண்டும். நமக்கு ஏன் இந்த வேலை என்று ஒதுங்கி செல்லாது நற்செயல்களை செய்ய நாம் முன் வர வேண்டும். எம் கண் முன் யாராவது கஸ்ரப்பபட்டால் எம்மால்  இயன்ற உதவிகளை  செய்ய வேண்டும். இப்படியான பண்புகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.






















Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post