Social Media Essay Social Media Essay - examsguide.lk

 சமூகவலைத்தளங்கள்- Social Media

                       







https://www.facebook.com/groups/1490125237842513/permalink/1647058078815894/

சமூக வலைத்தளங்களை எப்படி கையாள்கின்றோம் என்பதில் தான் வெற்றி தங்கியுள்ளது. ஆக்கத்திற்கு பயன்படுத்த போகின்றோமோ, அழிவிற்கு பயன்படுத்தப் போகின்றோமா என்பதில் தான் எதிர்காலம் வடிவமைக்கப்படும். 


இன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களிற்கு உள்நுழைந்தால் மணித்தியாலக் கணக்காக நேரத்தை தின்று விடுபவையாக Facebook,Whatsapp,Imo,Instagram,Youtube,Blogger website என பல்வேறு பட்ட சமூக வலைத்தளங்கள் வியாபித்து இருக்கின்றன.


அவற்றில் முகநூல்,Whatsapp கல்விக்குழுமங்களின் ஊடாக நுண்ணறிவு,பொது அறிவு,கிரகித்தல்,சுருக்கம்,மொழித்திறன் சார் அறிவை விருத்தி செய்ய பயன்படுத்த முடியும். 


காணொளிகள் மூலம் காட்சியமைப்பில் மிகத்துல்லியமாக விரும்பிய நேரத்தில் கண்டு கழிக்கக் கூடிய வழிவகை உருவாக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான பயனுள்ள விடயங்கள் பல இருக்க நாம் ஒரு போட்டோவை போட்டிட்டு எத்தனை லைக்ஸ் வருகுது, எத்தனை கொமண்ட் வருகுது என்று நேரத்தை வீணாக்குவதோடு யாராவது எதிர்மறையாக Comment போட்டால் வரிந்து கட்டிக் கொண்டு அவரை அவமானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு பகைமையை சம்பாதிக்கின்றோம். வீணான மன அழுத்தங்களும்,வெறுப்புக்களும் தான் இறுதியில் எஞ்சி நிற்கின்றன.


இது ஒருபுறம் இருக்க பிறழ்வான நடத்தையுடையவர்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி சில்மிசங்கள்,ஏமாற்று மோசடி, போலி விளம்பரங்கள் என தங்களின் முகமூடிகளை கழற்றி தத்தமது உண்மை முகங்களை வெளிப்படுத்தி வருகின்ற கேலிக்கூத்துக்களும் இடம் பெறத் தவறுவதில்லை.. இதனால் பல பாரிய அசெளகரியங்களுக்கு பெண்மணிகளும், ஒரே இரவிலே அதிஸ்டம் அடிக்கும் என கண்மூடித்தனமாக நம்பும் ஏமாளிகளும் உட்படுகின்றமை விதந்து குறிப்பிடத்தக்கது. 


சமூக வலைத்தளங்களின் மூலம் குற்றச்செயல்களும்,குற்றச் செயல்களை செய்வர்களும் பட்சபாரபட்சமின்றி முகத்திரை கிழிக்கப்படுகின்றார்கள்.. அந்த பயமே பலரை குற்றங்களை செய்ய பின்நிற்க வழிவகுக்கின்றது.


அநியாயங்களுக்கு எதிராக முகநூலில் பதிவுகளை இட்டாவது கண்டங்களை தெரிவித்து விட்டோம் என ஆசுவாசப்படுத்த உதவுகின்றது.

பலரை கவிஞர்களாகவும்,விமர்சனவாதிகளாகவும், Meme Creators ஆகவும் உருமாற்றியிருக்கின்றது.


ஆனால் தத்தமது கருத்துக்களை, பின்னூட்டங்களை,காணொளிகளை கூட பதிவு செய்ய முடியா வண்ணம் அரசாங்கங்கள் சில சந்தர்ப்பங்களில் தணிக்கை செய்கின்றன,குறித்த காலத்திற்கு முற்றிலுமாக தடை செய்கின்றன. ஆனால் தொழினுட்ப வளர்ச்சியின் விளைபயனான VPN மூலம் பயன்படுத்த முடியும் என இளம் சந்ததியினர் நிரூபித்து வருகின்றனர்.


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post