NVQ Qualification NVQ Qualification - examsguide.lk

 NVQ - National Vocational Qualification.                     

https://www.facebook.com/groups/1490125237842513/permalink/1648676968654005/



Aakeel Mohamed அவர்களின் அனுபவப்பகிர்வு 
எனது நண்பர்கள் பலர் A/L இன்றியே தற்போது ஆசிரியர்களாகவும் ஏனைய உயர் பதவி மற்றும் அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் உள்ளனர். இதற்கு அவர்கள் செய்தது சிறிய தியாகமே.

6 மாதம் NVQ -4 சான்றிதழ் கல்வி அதன் பிறகு வழங்கப்படும் Trainee யில் வேலை செய்து அதையே நிரந்தரமாக்கியுள்ளனர். அதன் பிறகு அந்த சான்றிதழை கொண்டு Diploma செய்தோம் ( நானும் கூட) அது 1 வருடம் நடந்து அதிலும் Trainee ஆக சிலர் சென்று நிரந்தரம் பெற்றனர். சிலர் போதனாசிரியராக தெரிவு செய்யப்பட்டனர்.

அதன் பிறகு 3 வருட B.Tech கற்கையை மேற்கொண்டு அண்மையில் வழங்கப்பட ஆசிரியர் மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்ளனர்.

குறிப்பு : இது தவிர்ந்த பல பேர் Engineer ஆக முழு மற்றும் பகுதி நேரமாக வேலை செய்கின்றனர். 
போற போக்கை பார்த்தால் பல்கலைக்கழக படிப்புக்கு மவுசு இருக்காது என்பதால் தொழிற்தகைமை கல்வியை தொடருங்கள்.. NVQ ஒவ்வொரு மட்டத்திற்கும் என அவர்கள் மட்டும் உள்வாங்கக்கூடிய அரச வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது... அரச வேலைவாய்ப்பில் இருந்து கொண்டே சனி ஞாயிறு ஒவ்வொரு NVQ Level முடித்து இறுதியில் பட்டதாரிகளாக வலம் வர முடியும்...Degree முடித்தவர்கள் . தாங்கள் மட்டுமே பட்டதாரிகள் என போட்டோ போட்டு பீத்திக் கொண்டு திரிந்து பின்னர் வேலையில்லாமல் குறிப்பிட்ட வருடக்கணக்காக அவமானத்தின் மொத்த உருவமாக திகழாமல் இருக்க O/L,A/L தகைமையுடன் தொழிற்கல்வியை பெறுபவர்கள் அதி புத்திசாலிகள்...

NVQ4,5,6 என அவர்களை மட்டும் உள்வாங்குவதற்குரிய நடவடிக்கைகள் அரச வேலைவாய்ப்பின் போது பின்பற்றப்படுகின்றது. 
இருப்பினும் ஏதாவது ஒரு வேலைக்குள் உட்புகுந்து விட வேண்டும் என்ற ஆதங்கத்தில் பட்டதாரிகள் விண்ணப்பித்து இறுதியில் நிராகரிக்கப்பட்டு அநியாயமாக விண்ணப்படிவத்திற்கு கட்டிய காசை இழந்த துர்ப்பாக்கியமான செயல்களும் தற்காலத்தில் அதிகம் இடம் பெறுகின்றமை விதந்து குறிப்பிடத்தக்கது.

ஆகவே இனியாவது  சிந்தித்து செயலாற்றப் பழகுங்கள்.. இனியும் பட்டப்படிப்புக்காக காலத்தை வீண் விரயமாக்காமல் வேலை செய்து கொண்டே படிப்படியாக முன்னேற முயற்சி செய்யுங்கள்.

NVQ Level 3 = GCE Ordinary Level (Respective Field)
NVQ Level 4 = GCE Advanced Level (Respective Field)
NVQ Level 5 = Diploma Level
NVQ Level 6 = Higher Diploma
NVQ Level 7 = Degree Level



Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post