MSO Uva Province Exam MSO Uva Province Exam - examsguide.lk


Management Service Officer Uva Province Exam







 https://www.facebook.com/groups/1490125237842513/permalink/1647058025482566/

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என்பது (MSO) அரச உத்தியோகத்தர்களுக்கான வகைப்பாட்டில் Development officers உள்ளளடங்குகின்ற இரண்டாம் நிலை வகைப்பிரிவினராக கருதப்படுகின்றது. இது அமைச்சுக்கள் திணைக்களங்கள் போன்ற அனைத்திலும் காணப்படும் ஒரு பதவி. போட்டி பரிட்சைகள் மூலம் இதற்கான வெற்றிட ஆளணி நிரப்பப்படுகிறது. இப் பதவிக்கு பட்டம் அவசியம் இல்லை. கா.பொ.த சாதாரண தரத்தில் கணிதம், தமிழில் திறமை சித்தியும் மற்றும் உயர் தரத்தில் ஏதாவது பிரிவில் ஆங்கிலம்,  பொதுஅறிவு தவிர ஏனைய மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி என்பன கல்வி தகைமையாக கணிக்கப்பட்டுள்ளது. பரிட்சை திணைக்களத்தினால் பரிட்சை நடாத்தப்பட்டு பரிட்சைகள் நடைபெறும். நுண்ணறிவு மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு பாடங்களிலும்  நாற்பது புள்ளிகளை பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு தகைமை உடையவர்கள் ஆனாலும் பரிட்சை பெறுபேறு வெளியிடும் போது மாவட்ட ரீதியான வெட்டுபுள்ளிகளும் கருத்தில் கொண்டே உள்வாங்கப்படுவர். சில MSO Exams குறித்த மாகாணத்துள்ளவர்கள் மட்டுமே எழுதக் கூடியதாகவிருக்கும்.  ஒவ்வொரு துறையிலும் MSO என்ற பதவி காணப்படுகின்றது. Development Officers ஐ போன்று எழுத்து வேலைகள்,Typing,Page setup,Proof Reading முதலான கோப்புக்களுடன் தொடர்புடைய வேலைகள் மற்றும் லீவு தொடர்பான விடயங்களை பதிதல், வரவு இடாப்பினை பேணல்,Advance Programs maintain பண்ணுதல், Forms களை பராமரித்தல்,தேவையானவர்களுக்கு கையளித்தல்,மாதாந்த சம்பளம் அறிக்கை Records Maintain பண்ணல், நோய்க்கொடுப்னவு,மாதாந்த பொதுசன உதவிக் கொடுப்பனவு,முதியோர் கொடுப்பனவு உரியவர்களுக்கு கிடைக்கச்செய்தல்,  இவர்கள் செய்கின்றனர். சில இடங்களில் விசேட பணிகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் Taxpayers இன் கேள்விகளுக்கு தொலைபேசி வாயிலாகவோ or நேரடியாகவோ பதிலை வழங்குதல், Outward Remittance License ஐ Issue பண்ணுதல், உயர் அதிகாரிகள் Sign பண்ணக்கூடிய கடிதங்களை தயாரித்து வழங்குதல், Formsகளை கணனியில் பதிவேற்றல், Payment Confirmation ஐ Systemத்தில் Check பண்ணி அறிக்கை சமர்ப்பித்தல் போன்ற இன்னொரன்ன வேலைகளை செய்து இலங்கை நாட்டிற்கு வருமானத்தை உழைத்து தருவதால் 6 மாதத்திற்கு ஒரு தடவை அடிப்படை சம்பளத்தினை 4.5 ஆல் பெருக்க வரும் தொகை Bonus ஆக வழங்கப்படுகின்றது. 

MN2 post இலிருந்து முயற்சியுடையோர் அடுத்தடுத்த கட்டம் உயர்ந்திருக்கின்றார்கள். Social Service Officers (SSO) - MN5 post இற்கு பரிட்சை பெறுபேற்றின் அடிப்படையில் தெரிவாகி இருக்கின்றார்கள். அதை விட Administrative Service Officers ஆக Supra Exam பாஸ் பண்ணி MN7 post க்கு உயரக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உருவாக்கப்பட்டுள்ளது.. விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் சிலர் பட்டத்தகைமையோடு 5 வருடத்திலோ Or பட்டத்தகைமை இல்லாமல் 10 வருடத்திலோ SL 1 postக்கு வந்து சாதித்திருக்கின்றார்கள்.

இதே போல நீங்களும் அடுத்த கட்டம் நோக்கி பயணிக்கத் தயாராகுங்கள்.

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post