Language Notes Language Notes - examsguide.lk

மொழித்திறன்


You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.



பொதுஅறிவு மற்றும் நுண்ணறிவு
 போல மொழித்திறனும் முக்கியமான பாட பரப்பாகும். இரண்டாம் நிலை பதவியிலிருந்து நிறைவேற்று தர பதவி வரை மொழித்திறன் பரிட்சை பரந்து பட்டு காணப்படுகிறது.  எத்தனையோ பரிட்சார்த்திகள் ஏனைய பரிட்சைகளில் சித்தி அடைந்து எமது தாய் மொழியில் சித்தி அடையாத ஒர்  துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. யாராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தாய்மொழியில் சிறந்த பெறுபேற்றை பெற வேண்டும்.புதிய வர்த்தமானியின் படி எந்தவொரு உயர் பதவியை அலங்கரிக்க வேண்டும் எனின் நுண்ணறிவு மற்றும் மொழித்திறன் ஆகிய பரிட்சைகளில் சித்தி அடைந்தால் மட்டுமே அடுத்த பரிட்சைகளில் தோற்ற முடியும். அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நுண்ணறிவு போல மொழித்திறனுக்கும் பயிற்சி வேண்டும். மொழித்திறன் பாடப்பரப்பில்  அகராதியை பயன்படுத்திய கேள்விகள், பந்தி வினாக்கள் சுருக்கம், இலக்காண வினாக்கள், கடிதம் எழுதுதல், விளம்பரம்,  துண்டுபிரசுரம் எழுதுதல், கட்டுரை எழுதுதல் போன்ற பகுதிகள் காணப்படுகின்றன. கடந்த கால வினாக்களை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் மூலம் இவற்றில் சிறந்த பயிற்சியை பெற முடியும்.

மொழித்திறன்,இலக்கணம்,கிரகித்தல்,சுருக்கம் தானே நம்மட தாய்மொழி தானே என்று ஒருவருமே கரிசனை எடுத்து படிப்பதில்லை. அதன் பெறுபேறு தான் சித்தியடைவதற்கு தேவையான ஆகக்குறைந்த புள்ளியான 40 Marks ஐ கூட பெற முடியாமல் முஸ்லிம், தமிழ் மாணவர்கள் தோற்றுப்போகும் அவலம் அரங்கேறுகின்றது. போதாக்குறைக்கு பிரபல தமிழ் வளவாளர்கள் தங்களிடம் தான் படிக்க வேண்டும் என்பதினையே முழுநேரமாக சொல்லி வகுப்பை முடிக்கின்ற துர்ப்பாக்கியம் இடம் பெறுவதாக கேள்வியுற்றேன்.

யாரிடம் படித்தாலும் அவர் கற்பித்தவற்றையும், சுயதேடலுடன் மேலதிகமாக தேடிப்படிக்கா விட்டால் தோற்றுத்தான் போவீர்கள் என அண்மைக்கால பரிட்சை முடிவுகள் புலப்படுத்தி சென்றிருக்கின்றன.

ஆகவே இனியும் அசட்டையாக இராமல் ஏனைய பாடங்களைபே போல சமகரிசனை எடுத்து நேரம் ஒதுக்கி படித்து வாருங்கள். முகநூல் கல்விக்குழுமங்களில் போடுபவற்றையே எழுதிப் படித்தால் புலமையடைந்து விட முடியும்.

This is the last chance. DO NOT MISS IT. நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்க.



Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post