IQ IQ - examsguide.lk

 IQ- நுண்ணறிவு

 >


You have to wait 60 seconds.
Download Timer

Your download will begin in 60 seconds.








நுண்ணறிவு என்பது நுணுக்கம் அதாவது ஒரு விடயத்தை மிகச் சரியான முறையில் செய்தல்.ஒரு விடயத்தை அல்லது ஒரு காரியத்தை அல்லது ஒரு செயலை திட்டமிட்டு சரியான முறையில் செய்தல். விடயம் ஒன்றை சரியான முறையில் பிழையின்றி செய்தோம் என்றால் அதனை திரும்ப திரும்ப செய்ய வேண்டிய செயற்பாட்டினை தடை செய்யலாம்.நுண்ணறிவு என்பது வெறும் பரிட்சைக்கு தேவையானது மட்டும் அல்ல வாழ்க்கையின் பல முன்னேற்றங்களுக்கு நுண்ணறிவு அவசியம்.

ஒரு செயலை செய்வதற்கு திட்டமிடல் அவசியம். அவ் திட்டமிட்டு செய்வதற்குரிய அறிவை வழங்குகின்றது நுண்ணறிவு. சில வேளைகளில் பெரிதாக கல்வி அறிவு இல்லாதவன் கூட சில காரியங்களை சிறப்பான முறையில் செய்து விடுவான்.நுண்ணறிவை கற்பதற்கு சிந்தனை ஆற்றல், முயற்சி,பயிற்சி, ஆர்வம் இவை போதுமானது. எமக்கு பெற்றோரிடம் ஏதாவது கிடைக்க வேண்டும் என்றால் அழுவோம், கெஞ்சுவோம், பிடிவாதம் பிடிப்போம்  அதை போல கல்வியில் சாதிக்க வேண்டும் என்றால் விடா முயற்சியும் பயிற்சியும் அவசியம்.எமக்கு ஒன்று கிடைக்க வேண்டும் என்று அடம்பிடிப்பது போன்று நானும் சாதிக்க வேண்டும் என்று அடம்பிடியுங்கள்.வாழ்க்கையில் முன்னேற்றங்களை காண்பதற்கு சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தெரியாது எனக்கு சரி வராது என்று தாழ்ந்து யோசிக்காது முயற்சி செய்யுங்கள். ஒரு காரியத்தை பல வழிகளில் செய்யலாம் ஆனால் சரியான முறையில் இலகுவாக செய்து முடிப்பதே நுண்ணறிவு.செய்கின்ற ஒவ்வொரு செயலையும் நுண்ணறிவினை பயன்படுத்தி செய்து பழக வேண்டும்.

முயற்சி என்பது முடியும் வரைக்கும் செய்வது அல்ல குறித்த இலக்கை அடையும் வரைக்கும் மும்முரமாக செயற்படுவதே ஆகும். அதே போல நுண்ணறிவினையும் எல்லா பயிற்சிகளையும் செய்து பழகுவதோடு இலகு நுட்பங்களையும் தேடிக்கற்றுக் கொள்ளுங்கள்.

O/L maths இல்லாமல் எந்த பரிட்சைக்கும் விண்ணப்பிக்க முடியாது என்பது போல ( பட்டத்கைமை மட்டும் விதிவிலக்கு.அவர்கள் Degree உடன் Call பண்ணுற Examsகளுக்கு மட்டும் போட முடியும்) நுண்ணறிவு இல்லாத எந்த போட்டிப்பரிட்சைகளையும் பார்க்க முடியாது. ஆகவே கூடிய கவனம் எடுத்து படித்துக் கொள்ளுங்கோ.

1 Comments

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post