IQ 1 IQ 1 - examsguide.lk

 IQ-1





ஒரு நாட்டுக்கு  நல்ல புத்திசாலியான தலைவன் எவ்வளவு முக்கியமோ  சிறப்பாக குடும்பத்தை நடத்துவதற்கு சிறந்த குடும்ப தலைவன் முக்கியமோ அதை போல சிறந்த நிர்வாக திறனுடையவர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதற்காக நுண்ணறிவு பரிட்சை நடாத்த படுகின்றது.மிக சிறந்த மாணவர்கள் தான்  இப் பதவிகளில் இணைப்படுகின்றனர். நிறைவேற்று தர பதவிகளில் வர எல்லோரும் ஆசை படுகின்றனர். ஆனால் எல்லோராலும் அப் பதவிகளில்  மிளிர முடிவதில்லை. போட்டி பரிட்சைகளில் சித்தி அடைந்து நேர்முக தேர்விலும் சித்தி அடைபவர்களுக்கு மட்டுமே  அப் பதவி கிடைக்கின்றது. ஆக சோம்பி இருக்காது குடும்பத்தையும் சமூகத்தையும் கை தூக்கி விட முயற்சி செய்யுங்கள். குறிப்பாக அனைவரும் சித்தி அடையாமல் போகின்ற பாடம் நுண்ணறிவு. பயிற்சி இல்லாமல் நுண்ணறிவு பரிட்சையில் சித்தி அடைவது கடினம். ஆக வினாக்களை திரும்ப திரும்ப செய்து பாருங்கள். பிரச்சனை இருந்தால் நுணுக்கமான முறையில் தீர்வுகளை தேடுங்கள்.நன்றாக சிந்தித்து கல்வி கற்க முயற்சி செய்யுங்கள். 

exams IQ Guide போன்ற முகநூல் குழுமங்களில் அறிவை பகிர்ந்து கொள்ளும் உன்னதமானவர்களைப் போல நீங்களும் அறிவைப் பகிர்ந்து சமுதாயத்தை கைதூக்கி விட முயற்சி செய்யுங்கள் பார்ப்போம். 

இனிவரும் காலங்களில் நான் மட்டும் தான் சித்தியடைய வேண்டும் என்று தனித்தனியாக ஜெயிக்க முயற்சிப்பது முட்டாள்தனம். சேர்ந்து படியுங்கள்,உங்களுக்கு கிடைக்கின்ற Notes,Tuitesஐயும் சகதோழமையோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு தெரியாததை அடுத்தவருக்கு சொல்லிக் கொடுத்து படியுங்கள். 

அப்படி சேர்ந்து படித்து உங்கள் நண்பன் வெற்றி பெற்று விட்டான் என்றால் உங்களால் ஏதாவது  கருமம் அவனது பிரதேச செயலகத்திலோ,திணைக்களத்திலோ  நிறைவேற்ற வேண்டிய தேவை வரும் போது முன்னுரிமை அடிப்படையில் செய்து தர மாட்டானா? இவனும் என் தோழன், சேர்ந்து தான் படித்தோம் என்று பெருமிதம் கொள்ள மாட்டீர்களா?  

நீங்கள் ஜெயித்தாலும் வெற்றி தான் உங்கள் நண்பன் ஜெயித்தாலும் வெற்றி தான். அவனது வெற்றியை பார்த்து இன்னும் உத்வேகமாக படித்து அவனை போல உயர்பதவிகளை அலங்கரிக்க முயலுங்கள். அவரது சேவையிலோ அல்லது அவருக்கு சமாந்தரமான பதவியுடைய சேவையிலோ வருவதே நீங்கள் உண்மையிலே Sharing is Success என எண்ணிப் படித்தால் இயல்பாகவே நிகழ்த்தப்படும்
நிச்சயமாக உயர் கதிரையை உங்கள் வசமாக்க முடியும்.
>

You have to wait 120 seconds.
Download Timer

Your download will begin in 120 seconds.


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post