Free Learning Website Free Learning Website - examsguide.lk

 Free Learning Websites- இலவச கல்வி வலைத்தளங்கள்

>

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.










இலவசமாக  கற்கக்கூடிய நிறைய இணையதளங்கள் உள்ளன. youTube இனூடாக கற்பது மிக மலிவு. 

1. www.eKalvi.org

2. www.TamilKalvi.online

3. http://www.edudept.np.gov.lk/eLessonPortel/index.html

4. https://www.dpeducation.lk/

5. http://aavanaham.org/open-educational-resources?fbclid=IwAR37zEUiaeCfZLqruONsneKkdAq9iNGHeFdKXGS6VSSqv0LANtfMtjCO6bM



மேற்படி லிங்கை அழுத்தி உள்நுழைய முடியும்.


கல்வி இன்றைய காலத்தில் பணம் சம்பாதிக்கும் வழியாக பாடசாலை ஆசிரியர்களால் நோக்கப்படுவது எத்தனை அபத்தம்? அதை விட 100% சித்தியை தந்தோம் என மார்த்தட்டிக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொண்டு திரிந்தாலும் உண்மையிலே வடக்கு கிழக்கு மலையக மாவட்டங்கள் தான் கல்விப் பொது உயர்தரப் பரிட்சையில் இறுதி நிலையினை தக்க வைத்துக் கொண்டிருப்பதாக புள்ளி விபரங்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.. நாம் அத்தனை பேரும் தனித்தனியாக ஜெயிப்பதில் அக்கறைப்படுவதால் கிடைத்த விளைபயன்.. Collective is Success என உணர மறுப்பதோடு இப்போதிருந்தே சுயதேடல் இல்லாமல், நேரம் ஒதுக்கி தேடிக்கற்காமல் என்னிடம் படித்தால் சித்தியடைந்து விடுவீர்கள் என்ற மனோபாவத்தை ஆசான்கள் விதைத்து விட்டமை பல்கலைக்கழகம் முடிந்ததும் போட்டிப்பரிட்சைகளுக்கான வளவாளர்களையும்,அவர்களின் எதிர்பார்க்கை வினாக்களையும் மட்டும் நம்பி தோற்றுப் போன பின்னர் தெருவில் இறங்கி வேலைவாய்ப்புக்கான போராட்த்தில் ஈடுபட வழிசமைத்திருக்கின்றது. எந்த இடத்தில் தோற்றுப் போகின்றோம் என்று உணராமல் இருப்பது பேராபத்து...இது ஒருபுறம் இருக்க இதுதான் சந்தர்ப்பம் என்று என்னைப் போன்ற காழ்ப்புணர்வு கொண்டவர்கள் கல்வியை வியாபாரப்பொருளாக்கி விட்டீர்கள் என்று தொடர்ந்தும் அங்கலாய்க்க தாமாகவே ஒருசில உன்னத ஆசான்கள் Zoom App ஊடாக இலவசமாக கற்ப்பிக்க முன்வந்தாலும் மாணவர்கள் போதிய சிரத்தையெடுத்து கலந்து கொண்டு கற்பதில்லை என்ற குறைபாடும் தலைதூக்கி வருகின்றது.. இலவசமாக வழங்குவதால் தான் என்னவோ அதன் அருமைத்தன்மை நம்மவர்களுக்கு புரியவில்லை...

எது எப்படியோ நல்லது நடந்தால் சந்தோசம். பார்ப்போம் இன்றைய மாணவர்களில் எத்தனை பேர் இந்த அபிவிருத்தி குன்றிய நிலையை மாற்றி இலங்கை நாட்டை அபிவிருத்தியடையச் செய்யப் போகின்றார்கள் என்று காலம் புலப்படுத்தக் கடவதாக..




பின்வரும் நுண்ணறிவு Google Forms ஐயும் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கோ

Google Form

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post